siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 4 நவம்பர், 2015

விமானம் தெற்கு சூடானில் விபத்துக்கு உள்ளாகியது!!!

ரஷ்ய தயாரிப்பான சரக்கு விமானம் ஒன்று 20 பணியாளர்களுடன் தென் சூடானின் தலைநகர் ஜூபாவில் இருந்து புறப்பட்டது.   நைல் நதியின்  மேல் பறந்து கொண்டு இருந்த போது விமானம் விபத்து உள்ளானது. இந்த விபத்தில் 41 பேர் பலியானதாக  ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் மற்றும் சாட்சிகள் மூலம் தெரியவந்து உள்ளது.
தற்போதைய விபத்தில்  ஒரு குழந்தை மற்றும் ஒரு விமான பணியாளர் உயிர் பிழைத்து உள்ளதாக  ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் அட்னி வீக் அட்னி கூறி உள்ளார்.
கடந்த சனிக்கிழமை  எகிப்து நாட்டின் சுற்றுலா நகரமான ஷரம் எல் ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 224 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம் 23 நிமிடங்களில் எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் நெகேல் என்னுமிடத்தில் நடுவானில் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 224 பேரும் பலியானர்கள் என்பது
 குறிப்பிடதக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக