siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 11 டிசம்பர், 2015

சிறுமியுடன் ஃபேஸ்புக் மூலம் பழக்கமான பாகிஸ்தான் தூதரக அதிகாரி மகன் கைது

அமெரிக்காவுக்கான, பாகிஸ்தான் நாட்டின் கம்யூனிட்டி வெல்பேர் கவுன்சிலர் என்ற பதவியில் இருப்பவர், முகமது முகீத் ரஹீமூன்.ஸ்கார்ஸ்டேல் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது உர் ரகுமான் ரஹிமூன்( வயது 20)
இந்நிலையில், 'விஸ்பர்' எனப்படும், சமூக வலைத்தளத்தின் மூலமாக, ப்ரோன்க்ஸ் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியுடன், ரகுமானுக்கு பழக்கம் ஏற்பட்டது. பிறகு அவ்வப்போது இருவரும் சந்தித்து பேச
 தொடங்கினர்.
டிசம்பர் 1ம்தேதி, இவ்விருவரும் மூன்றாவது முறையாக சந்தித்தனர். இந்த சந்திப்பு ஒட்டல் ஒன்றில் நடந்தது. அப்போது, இருவரும் உறவு கொண்டுள்ளனர். அதேநேரத்தில், சிறுமியை அழைத்துச் செல்ல பள்ளிக்கு வந்த அவரது தந்தை சிறுமியின் செல்போனுக்கு தொடர்புகொண்டு
 ஏங்கே இருக்கிறாய் 
என கேட்டுள்ளார். அப்போது போனை எடுத்து பேசிய ரகுமான், உங்கள் மகளுடன் உடற்பயிற்சி செய்துகொண்டுள்ளேன். உடற்பயிற்சி செய்ததும் கொண்டு வந்துவிட்டுவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில், சந்தேகமடைந்த சிறுமியின் தந்தை, சிறுமி வீட்டுக்கு வந்த பிறகு துருவி துருவி கேட்டுள்ளார். அப்போது நடந்ததை சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், போலீசார் ரகுமானை கைது செய்துள்ளனர்.தற்போது அவர ஜாமினில் விடுவிக்கபட்டு உள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் அதிகாரி கூறும் போது எனது மகன் நல்லவன் இது அனைத்தும் ஜோடிக்கபட்டது என கூறி உள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக