siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 8 டிசம்பர், 2015

மக்களின் மனங்களை பிரதிபலிக்கிறதா அகதிகளுக்கு எதிரான பிரச்சார பிரான்ஸ் தேர்தல்?

பிரான்ஸ் தேர்தலில் வலதுசாரி தேசிய முன்னணி கட்சி முன்னிலை பெற்றிருப்பது ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈரத்துள்ளது.
பிரான்சில் 13 மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்ட தேர்தல் கடந்த 6ம் திகதி நடந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் வலதுசாரி தேசிய முன்னணி கட்சி முன்னிலை பெற்றுள்ளது
கடந்த மாதம் 13ம் திகதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 132 பேர் உயிரிழந்தனர், இதற்கு பிறகு நடக்கும் தேர்தல் என்பதால் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதற்கிடையே தேசிய முன்னணி கட்சியின் தலைவரான மேரி லீ பென், அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு பிரான்சில் இடமில்லை என்றும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களை வெளியேற்றுவதாகவும் பிரச்சாரம்
 செய்தார்.
இந்நிலையில் தற்போது அந்த கட்சி முன்னிலை பெற்றிருப்பது ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதுமட்டுமின்றி அவரது கருத்துக்கு ஆதரவாகவே பிரான்ஸ் மக்களும் வாக்களித்திருப்பதாக 
கருதப்படுகிறது,
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 comments:

கருத்துரையிடுக