இளைஞர் ஒருவரை பெண்கள் மூவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அந்த இளைஞரின் விந்தணுக்களை திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸிம்பாப்வே பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
வீதியோரத்தில் வாகனத்துக்காக காத்து நின்ற மேற்படி இளைஞரை கார் ஒன்றில் வந்த பெண்கள் மூவர் ஏற்றிச்செல்வதற்கு முன்வந்தனர்.
அதையடுத்து அந்த இளைஞர் வாகனத்தில் ஏறிக்கொண்டார்.
சிறிது தூரம் சென்றபின், அப் பெண்கள் மூவரும் மேற்படி இளைஞரை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டனர் எனக் கூறப்படுகிறது.
ஸிம்பாப்வேயின் புலவாயோ நகரைச் சேர்ந்த பொலிஸ் பேச்சாளர் ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், வெள்ளை நிற டொயோட்டா கிறெஸ்டா ரக காரில் வந்த பெண்களே தமது இலக்கான மேற்படி இளைஞரை காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
அந்த இளைஞரை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்ட அப் பெண்களில் ஒருவர் மாத்திரம் கருத்தடை உறையை பயன்படுத்தினார்.
ஏனைய மூவரும் பாதுகாப்பற்ற வகையில் பாலியல் உறவில் ஈடுபட்டனர்.
அந்த நபரின் விந்துகள் கொண்ட சுக்கிலத்தை பெற்றுக்கொண்டபின் அவரை பாதையோரத்தில் தள்ளிவிட்டு அப் பெண்கள் தப்பிச் சென்றுவிட்டனர்” எனக் கூறினார்.
மேற்படி இளைஞரின் விந்துக்களை எதற்காக இப் பெண்கள் திருடினர் என்பதை அப் பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கவில்லை.
ஆனால், ஜூஜூ எனும் ஒரு மாந்திரீக நடவடிக்கைக்காக இவ்வாறு விந்து திருடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஸிம்பாப்வேயில் ஆண்களை பெண்கள் வல்லுறவுக்குள்ளாக்கி விந்து திருடப்பட்டதாக தகவல் வெளியாகுவது இது முதல் தடவையல்ல.
2011 ஆண்டு இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றது. இதன்போது ரோஸ்மேரி சக்விஸிரா (28), சோபி நோக்வாரா, (26), நெட்சாய் நோக்வாரா (24) ஆகிய சகோதரிகள் மூவர் கத்திகள் மற்றும் உயிருள்ள பாம்புகளைக் காட்டி மிரட்டி இளைஞர் ஒருவரை வல்லுறவுக்குட்படுத்தி விந்தணுக்களை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் கார் விபத்தில் சிக்கியதையடுத்தே அக் காரை பரிசோதித்த பொலிஸார் பயன்படுத்தப்பட்ட சுமார் 30 ஆணுறைகளை கண்டனர். அதன்பின்னரே இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும், மரபணு பரிசோதனைகளையடுத்து, 2012 ஆம் ஆண்டு இவர்கள் மீதான குற்றச்சாட்டை அதிகாரிகள் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
இவர்கள் தவறாக கைது செய்யப்பட்டனர் என இச் சகோதரிகளின் சட்டத்தரணி துமிசனி எம்தோபெனி
தெரிவித்திருந்தார்..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 comments:
கருத்துரையிடுக