siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 16 டிசம்பர், 2019

இலங்கையரல் டுபாயிலுள்ள வேலை செய்த வீட்டில் மில்லியன் ரூபா மற்றும் பொருட்திருட்டு

இலங்கையர் ஒருவருக்கு அனுதாபம் காட்டி டுபாயிலுள்ள தமது வீட்டிற்கு பணியாளராக அழைத்து சென்ற இந்திய கோடீஸ்வரத் தம்பதியின் வீட்டில் கைவரிசையைக் காட்டிய இலங்கையர் ஒருவரை டுபாய் பொலிசார் வலைவீசித் தேடி வருகிறார்கள்.இலங்கை  மதிப்பில் 200 மில்லியன் ரூபா திருடியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த இந்திய தம்பதி சில மாதங்களின் முன்னர் இந்தியாவிற்கு சென்ற போது, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த இலங்கையர் ஒருவரை சந்தித்துள்ளது. அவரது  நிலைமையை...

சனி, 14 டிசம்பர், 2019

கூகுள் தேடலில் உலகளாவிய ரீதியில் முதலிடம் பிடித்த இலங்கை

உலகளாவிய ரீதியில் கூகிள் தேடுபொறியின் ஊடாக அதிகம் தேடப்பட்ட நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.2019ஆம் ஆண்டிற்கான கூகிள் தேடுதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அமெரிக்கா மேற்கொண்ட ஆய்விற்கமைய இந்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இலங்கை அதிகமாக தேடப்பட்ட நாடாக மாறியுள்ளது.அதற்கமைய கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை எங்கே என தீவிரமான தேடப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரியந்துள்ளது. ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலே இதற்கு முக்கியமான காரணமாகியுள்ளதாக...

செவ்வாய், 26 நவம்பர், 2019

குழந்தைகளை தொலைபேசி பாவனையிலிருந்து பாதுகாக்க இந்தோனேஷிய அரசின் திட்டம்

குழந்தைகள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாவதை தடுக்க புதுமையான வழிமுறையொன்றை இந்தோனேசிய அரசாங்கம் எடுத்துள்ளது.இன்றைய சமூகத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மிக அதிகமாக இருக்கின்றது. கிட்டத்தட்ட வயது வித்தியாசமில்லாமல்  குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் என அனைவரும் எல்லோரும் அதற்கு அடிமையாகி இருக்கிறார்கள். இதனால், பெற்றோர்கள்  தங்கள் குழந்தைகளை அதிலிருந்து பாதுகாக்க சிரமப்படுகிறார்கள்.இந்நிலையில், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள பண்டங்...

புதன், 13 நவம்பர், 2019

சீனாவில் இளைஞனின் காதிற்குள் படையெடுத்து குடியிருந்த கரப்பான் பூச்சிகள்

சீனா குவாண்டாங் மாநிலத்தில் உள்ள ஹுயாங் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனின் காதுக்குள் இருந்து கரப்பான் பூச்சிகளை வைத்தியர்கள் அகற்றியுள்ளார்கள்.காதுக்குள் ஏதோ அசைவு இருப்பதை உணர்ந்து, இளைஞன் தனது  குடும்பத்தினரிடம் காதுக்குள் எதாவது இருக்கிறதா எனப் பார்க்கச் கூறியுள்ளார்.ஆனால், அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. வலி அதிகரித்ததன் காரணமாக உடனே அவர் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரின் காதை பரிசோதித்துப் பார்த்த வைத்தியருக்கு...

வியாழன், 5 செப்டம்பர், 2019

திருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்

திருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்று சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை இங்கு அழுத்தவும் ...

புதன், 29 மே, 2019

அவசர அறிவிப்பு Whats-app பயனாளர்களுக்கு

hatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு, ஊடுருவல்காரர்கள் கண்காணிப்பு மென்பொருளைப் பொருத்தியதை WhatsApp  உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனீட்டாளர்களே குறிவைக்கப்பட்டனர்...

புதன், 15 மே, 2019

இலங்கையில் பிரித்தானிய மனைவிக்கு எமனாக மாறிய ஹொட்டல்

இலங்கைக்கு தேனிலவு சென்ற போது மனைவியை பறிகொடுத்த கணவன் அவரை மறக்க முடியாமல் இரவில் நட்சத்திரங்களைப் பார்த்து பேசிக் கொள்வதாக வேதனையுடன் கூறியுள்ளார்.லண்டன் நகரைச் சேர்ந்தவர் கிளன் சந்தாரியா. 33 வயதாகும் இவர் வடக்கு லண்டனில் உள்ள பின்ச்லே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும் இதே பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணான உஷிலா படேல் என்பவரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் 19ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.திருமணத்தை...

வியாழன், 14 பிப்ரவரி, 2019

பத்து வழிகள் கனடாவிற்கு செல்ல விரும்புபவர்களுக்கு

காலத்துக்கு காலம் கனடிய அரசுகள் இறுக்கங்கள், தளர்வுகள் என மாறுபட்ட சூழ்நிலைகளை, கனடாவிற்கு வரும் பாதைகளின் ஒவ்வொரு வழியிலும் சாதகமாகவும், பாதகமாகவும், சட்டங்களிலும் செயற்பாடுகளிலும் உருவாக்குகின்றன... கனடிய அரச குடிவரவுத்துறையின் இணையத்தள தகவல்கள், குடிவரவு சட்டத்துறை நிபுணர்களின் ஆய்வு கட்டுரைகள், கருத்தரங்குகளில் அறிந்துகொண்ட விடயங்கள் ஆகியவற்றை, உசாத்துணையாக கொண்டு பின்வரும் பத்து விடயங்களை சுருக்கமாக  குறிப்பிடுகின்றேன். காலத்துக்கு...

கஞ்சா செடி வளர்த்த தமிழர்கள் லண்டனில் : வீட்டினுள் புகுந்த பொலிசார்

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான ஹரோவில், நேற்று அதிகாலை பொலிசார் ஒரு வீட்டை முற்றுகையிட்டுள்ளார்கள் என  இணையம் அறிகிறது. குறித்த வீட்டுக்கு வெளியே சென்றாலே கஞ்சா மணம் வருவதாகவும். அந்த ஏரியா முழுவதும் கஞ்சா வாசனை வருவதாகவும் பொலிசாருக்கு தொடர்சியாக முறைப்பாடு செய்யப்பட்டு வந்துள்ளது. இன் நிலையில் அவர்கள் ஒரு வீட்டை குறி வைத்து அதனை நோட்டமிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. பொலிசார் வீட்டினுள் சென்று தேடிய வேளை அங்கே கஞ்சா இருக்கவில்லை....

நாடுகடத்தப்பட்ட 60 இலங்கையர்கள்! பிரான்சிலிருந்து

மீன்ப்பிடி படகொன்றில் சட்டவிரோதமாக பிரான்சிக்கு சொந்தமான ரியூனியன் தீவிற்கு அகதிகளாக சென்றவர்களில் 60 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் மீண்டும் குறித்த இலங்கையர்கள் திரும்பியுள்ளனர். பிரான்சிக்கு சொந்தமான விமாமொன்றில் இவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களுள் 52 ஆண்களும் 3 பெண்களும் மற்றும் 5 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர்களிடம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தற்போது வாக்குமூலம் பதிவு செய்து...

புதன், 13 பிப்ரவரி, 2019

தமிழ் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கத்துக்கு வீடு அன்பளிப்பு

 ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனான 2018ஆம் ஆண்டின் இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் உள்பட 12 வீராங்கனைகளுக்கும் இன்று புதிய வீடுகள் வழங்கிவைக்கப்பட்டன . வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் மொறட்டுவயின்  அமைக்கப்பட்ட சாயுராபுர வீடமைப்பு வளாகத்திலேயே இந்த 12 வீடுகளும் இலங்கை அணியின் வீராங்கனைகளுக்கு  வழங்கிவைக்கப்பட்டன . வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவால் இந்த வீடுகள் இன்று கையளிக்கப்பட்டன . 2018ஆம்...

தமிழுக்கு புதிய பெருமை கனடாவில் இரண்டாம் மொழியாக கற்பிப்பு..

கனடா பள்ளிகளில் தமிழ் மொழி..! இரண்டாம் மொழியாக கற்பிப்பு..! தமிழுக்கு புதிய பெருமை…!! தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும்.தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும்  வழங்கி வருகின்றது. தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும்,...

இலங்கையர்களுடன் ரியூனிஷின் தீவை சென்றடைந்த கப்பல்

பெருமளவு இலங்கையர்களை ஏற்றிய கப்பல் ஒன்று பிரான்ஸிற்கு சொந்தமான தீவான ரீயூனியனை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.பெண்கள், சிறுவர்கள் உட்பட 72 இலங்கையர்கள்  இந்த கப்பலில் பயணிப்பதாக தெரியவந்துள்ளது.குறித்த கப்பல் நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து பிரான்ஸ் தீவை நோக்கி பயணித்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 9ஆம்  திகதி நீர்கொழும்பில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பல், 25 நாட்களுக்குள் ரீயூனியன் தீவை நெருங்கியுள்ளது சிலாபம்...

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

பிரித்தானியாவில் தஞ்சமடைந்த தமிழ்ப் பெண் கதறியழுகின்றார்

அழகான குடும்பத்தை பிரித்து விடாதீர்கள் இலங்கையை சேர்ந்த ஒரு குடும்பம் பிரித்தானியாவில் தஞ்சமடைந்த நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த வயதான பெண்ணை சொந்த நாட்டுக்கு செல்லும்படி உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.இலங்கையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (71). இவர் மனைவி சுஷிதா (63). தம்பதிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில், பாலசுப்ரமணியம் கடந்த 1994-ல் பிரித்தானியாவில் தஞ்சமடைந்தார்.அவருக்கு அப்போது  அகதி அந்தஸ்து கொடுக்கப்பட்டது. இதன்பின்னர்...