siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

இந்திய பெண் சர்வதேச நிதியத்தின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக நியமனம்

ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியத்தின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.இது, சர்வதேச நிதியத்தில் 2-வது இடத்தில் உள்ள உயர் பதவியாகும்.உலகப் பொருளாதாரத்துக்கு உதவுவதில் கீதா கோபிநாத்தின் அறிவுபூர்வமான தலைமையை அங்கீகரிக்கும் வகையிலும், பொருளாதார மந்த நிலையில் இருந்து உலகத்தை விடுவிக்க பாடுபட்டதற்காகவும் அவருக்கு இந்த பதவி அளிக்கப்படுவதாக ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா...

செவ்வாய், 16 நவம்பர், 2021

டோக்கியோவில் செயற்கையாக பூமிக்கடியில் நீர் சேமிப்பு தொட்டிகள்

உலகெங்கும் நகரங்கள் உருவானபோது பல நாடுகளிலும் இதுபோன்ற இயற்கை அழிப்புகள் நடந்து இருக்கின்றன. அதற்கு அந்த நாடுகள் தற்போது தீர்வும், பரிகாரமும் தேடிக்கொண்டு இருக்கின்றன. இயற்கையை அழித்து விட்டு, அவற்றை செயற்கையாக தற்போது உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள்.பூமிக்கடியில் நீர் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ராட்சத சுரங்கப்பாதை அதற்கு உதாரணமாக ஜப்பான் நாட்டை எடுத்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் மழையால் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ நகரம் மிகுந்த பாதிப்பு அடைந்து...

வியாழன், 4 நவம்பர், 2021

கொவிட்டுக்கு பலனளிக்கிறது மன நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து

மனநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மலிவான மற்றும் பரவலாகக் கிடைக்கும் மருந்தான Fluoxetine, கொவிட்-19 வைரஸால் ஏற்படும் மரண அபாயத்தையும், தீவிர மருத்துவ சிகிச்சையின் அவசியத்தையும் குறைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.‘தி லான்செட்’ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை மேற்கோள்காட்டி ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவர் ஜீவந்தர இத்தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.ஆய்வில் பங்கேற்றவர்களிடையே கொவிட்-19 இறப்பு வீதம் 90ஆகக் குறைந்துள்ளது மற்றும்...

வெள்ளி, 8 அக்டோபர், 2021

ஒரு நாள் பிரதமராக பின்லாந்து நாட்டில் பதவி வகித்த 16 வயது சிறுமி

பின்லாந்து நாட்டில் 16 வயதான சிறுமி ஒரு நாள் பிரதமராக பதவி வகித்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ஐரோப்பிய நாடான பின்லாந்தில் கடந்த புதன்கிழமை 16 வயதான சிறுமி நெல்லா சால்மினென் (Nella Salminen) ஒரு நாள் பிரதமராக பதவி வகித்துள்ளார்.உலகிலுள்ள இளம்பெண்களை ஒருநாள் அரசு அல்லது வியாபாரத்தில் தலைமை பொறுப்பை ஏற்க வைக்கும் பிரசார திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.நெல்லா சால்மினென், காலநிலை மாற்றங்கள், மனித உரிமை...

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

அடுக்குமாடித் தொடரில் சுவீடன் நாட்டில் திடீர் வெடிவிபத்து

 சுவீடன் நாட்டின் தென்மேற்கு நகரான கோத்தன்பர்க்கில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 பேர் வரையில் காயடைந்துள்ளனர்.அடுக்குமாடி மற்றும் ஜன்னல்களிலிருந்து சாம்பல் புகை வெளியேறியதால் தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்திலிருந்து மக்களை வெளியேற்றி வருகின்றனர். இந்த சம்பவத்தில் 20 முதல் 25 பேர் வரை காயமடைந்துள்ளனர்.  3 பேர் வரை பலத்த காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக...

வியாழன், 16 செப்டம்பர், 2021

வெளிநாட்டு வேலைவாய்ப்பு இலங்கை வாழ் இளைஞர்களுக்கு

ஜப்பானிய அரசாங்கம் இலங்கை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க உடன்பட்டுள்ளது.ஜப்பானில் விவசாயப் பண்ணைகளில் ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க ஜப்பானிய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.அடுத்த இரு வாரங்களுக்குள் இது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் குணசேகர தெரிவித்தார். இன்று காலை விவசாய அமைச்சுடன் ஸூம் கலந்துரையாடலில் பேசும் போது அவர் இதைத் தெரிவித்தார்.ஜப்பானில்...

சனி, 26 ஜூன், 2021

அவுஸ்ரேலியாவில் நடேசன் - பிரியா தம்பதிக்கு இணைப்பு வீசா

  அவுஸ்ரேலியாவில் நிர்கதியாகியுள்ள இலங்கைத்தீவைச் சேர்ந்த நடேசன் - பிரியா தம்பதிக்கு அந்நாட்டின் இணைப்பு வீசா வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹவ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லேண்ட் - பிலோயிலா (BILOELA) நகரில் வசித்து வந்த இவர்களை, வீசா காலம் நிறைவடைந்த நிலையில் 2018ம் ஆண்டு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.எனினும் அதற்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் நிமித்தம்...

வியாழன், 3 ஜூன், 2021

வேலிகளுக்கு அடியே குழித்தோண்டி செல்லும் புலம்பெயர்ந்தவர்கள்

தாய்லாந்து- மலேசிய எல்லையில் தாய்லாந்தின் Songkhla  மாகாணத்தில் உள்ள Sadao மாவடத்தில் 7 சட்டவிரோத வழிகளை தாய்லாந்து எல்லை ரோந்து படையினர் கண்டறிந்துள்ளனர். மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் நுழையும் தாய்லாந்து நாட்டவர்களும் புலம்பெயர்ந்தவர்களும் இவ்வழிகளை பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகின்றது. Sadao மாவட்டத்தில் உள்ள 85 கி.மீ. எல்லையில் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கக்கூடிய 7 இடங்களை தாய்லாந்து அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக...

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

தடுப்பு முகாமிலிருந்து தப்ப சுரங்கப்பாதை:ஆஸ்திரேலிய அகதி

ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில் சுமார் 5 ஆண்டுக்காலம் வைக்கப்பட்டிருந்த நிலையினால் இன்றும் மன நலச் சிக்கல்களுக்கு ஆளாகி வருவதாக ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள ஈரானிய அகதி Payam Saadat தெரிவித்திருக்கிறார். இதனால் சுரங்கப்பாதைத் தோண்டி தடுப்பிலிருந்து தப்பிக்க அவரும் பிற அகதிகளும் முயன்றிருந்தாக நீதிமன்றத்திடம் அவர் தெரிவித்திருக்கிறார். இவர்கள் சுரங்கப்பாதைத் தோண்டியது பின்னர் கண்டறியப்பட்ட போதிலும், அதற்கு முன்னதாக 4...

சனி, 27 பிப்ரவரி, 2021

அழகை மெருகூட்ட ஊசி போடச் சென்ற இளம் யுவதிக்கு நடந்த கதி

தனது சரும அழகை மெருகூட்ட ஊசி ஏற்றிக் கொள்ள சென்ற யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கொழும்பு 5 திம்பிரிகஸ்யாய பகுதியை சேர்ந்த வைத்தியர் ஒருவரே பொலிசாரால் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் கொழும்பு மேலதிக நீதிவான் சலனி பெரேரா முன்னிலையில் அவர் முற்படுத்தப்பட்டார்.நாரஹேன்பிட்டியை சேர்ந்த 26 வயதான யுவதியே இந்த முறைப்பாட்டை செய்திருந்தார்.ஜனவரி 15 பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடளித்துள்ள...

வெள்ளி, 22 ஜனவரி, 2021

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் தீ விபத்து!

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவன கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டு உள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி வெளியாவதில் எந்தவித சிக்கல்களும் இல்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசி நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிற்காக...

திங்கள், 4 ஜனவரி, 2021

அபாயகரமான கொடிய வைரஸ். எபோலாவைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்

கடந்த ஒரு வருடமாக சீனாவில் உருவான கொரோனா வைரஸால் உலகமே பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வந்தது. வாழ்வாதாரம், பொருளாதாரம் என பல கட்டங்களாக இழப்பை சந்தித்த மனிதர்கள், பலர் தங்களுக்கு பிரியமானவர்களையும் கொரோனாவால் இழந்தனர்.இதனால், தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி பல்வேறு சிரமங்களைக் கடந்து தற்போது சாத்தியமாகி தடுப்பூசிகள் போடப்பட தொடங்கியுள்ளன. இப்படி தற்போது அனைவரும் மெல்ல மெல்ல மீண்டும் வரும் நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக வெளியான தகவலும்,...