siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 22 ஆகஸ்ட், 2012

குகன், லலித் ஆகியோரை இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும்

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012, யாழ்ப்பாண மனித உரிமை செயற்பட்டாளர்களான குகன் மற்றும் லலித் ஆகியோரை உடனடியாக இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மனிதாபிமான தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
மனித உரிமைகள் செயற்பாட்டாளரான அஜித் குமார நேற்றைய தினம் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் குறித்த இருவரும் கடத்தி செல்லப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் நாளாந்தம் துன்புறுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தங்களது வாழ்விடத்தில் மனித உரிமைகளை நிலைநாட்ட செயற்பட்டதாலேயே கைது செய்யப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் இருவரையும் உடன்டியாக இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும் லலித் மற்றும் குகன் விவகாரத்திற்கும், இராணுவத்தினருக்கும் தொடர்புகள் இல்லை என்று, இராணுவப் பேச்சாளர் நுவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்

வவுனியா மீள்குடியேற்ற மக்களுக்காக ஜப்பான் உதவி

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012,வவுனியாவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான அடிப்படை வாழ்வாதாராத்தை அதிகரிப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இதற்காக 11 மில்லியன் ரூபாய்கள் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனித பாதுகாப்பு வேலைத்திட்டத்துக்காக ஒரு லட்சம் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் வாழ்வாதார அபிவிருத்தி நிதியத்திடம் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளன.
ஜப்பானின் கொழும்பு தூதரகத்தின் ஊடாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிதி வவுனியாவில் குடியேற்றப்பட்டுள்ள சுமார் 625 குடும்பங்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கை ஒன்றை ஜப்பான் தூதுவர் நொபியிடோ ஹோபோ மற்றும் மக்கள் வாழ்வாதார அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் பிரியந்த குமார ஆகியோருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது

இலங்கையில் நாளாந்தம் 650 பேர் உயிரிழப்பு

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012,புகைத்ததல், மதுபானம் மற்றும் அதீத கொழுப்புணவின் காரணமாக இலங்கையில் நாளாந்தம் 650 பேர் பலியவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் உதவி செயலாளர் பாலித மகிபால இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாளாந்தம் 1250 குழந்தைகள் பிரசவம் ஆகின்றன. அதேவேளை அண்ணளவாக 1000 மரண சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
மரணிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அடையாளம் காணப்பட முடியாத நோய்களினால் மரணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது

Canvas A100: மைக்ரோமக்ஸின் புதிய வெளியீடு

21.08.2012.கைப்பேசி உற்பத்தியில் ஏனைய நிறுவனங்களுக்கு நிகராக புரட்சியை ஏற்படுத்திவரும் மைக்ரோமக்ஸ் நிறுவனமானது தனது நவீன தயாரிப்பில் உருவான Canvas A100 எனும் டுவல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்கின்றது.
கூகுளின் அன்ரோயிட் 4.0 ஐஸ்கிரீம் சான்விச் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக்கைப்பேசிகள் 5 அங்கு அளவு கொண்டதும், 854 x 480 ரெசொலூசன் உடையதுமான LCD தொடுதிரையைக் கொண்டுள்ளன.
மேலும் 5 மெகாபிச்சல்கள் கொண்ட அதிவினைத்திறன் உடைய கமெரா, 1GHz வேகம்கொண்ட புரோசசர் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ள இக்கைப்பேசிகளின் பிரதான நினைவகமான RAM இனை 4GB வரை அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டியில் பங்கேற்கும் நடிகை ஷாலினி அஜித்

21.08.2012.
கொலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை பேபி ஷாலினி.
பின்னர் காதலுக்கு மரியாதை படம் மூலம் நடிகையாக அறிமுகமான ஷாலினி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
அதன்பின்னர் சில படங்களில் நடித்த ஷாலினி கொலிவுட்டில் அல்டிமேட் ஸ்டார் என்று கூறப்படும் அஜித்குமாரை மணந்து கொண்டு திரையுலகை விட்டு விலகினார்.
அவ்வப்போது சில விழாக்களில் மட்டுமே தலைகாட்டி வந்த ஷாலினி பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
கடந்த ஞாயிறன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பேட்மின்டன் பிரிவில் வென்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
இவர் தற்போது நாகர்கோவிலில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். உறுதியாக ஷாலினி முதலிடத்தை பிடிப்பார் என்று விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றனர்

ஹரிதாஸ் படம் சினேகாவுக்கு விருதை பெற்றுத்தரும்: ஜி.என்.ஆர் குமரவேலன்

21.08.2012.
நினைத்தாலே இனிக்கும் படத்தின் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ள படம் ஹரிதாஸ்.
இப்படத்தில் நாயகனாக கிஷோரும், நாயகியாக சினேகாவும் நடித்துள்ளனர்.
பிரசன்னாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, இந்தப் படத்தில், ஒப்பந்தமான சினேகா, திருமணத்துக்கு பின்பும், சில நாட்கள் இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
மேலும், என் கேரியரில், ஹரிதாஸ் முக்கியமான படமாக இருக்கும், என்று சொல்லி, ரஜினியின், கோச்சடையான் படத்திலிருந்து கூட வெளியேறினார்.
படம் குறித்து இயக்குனர் குமரவேலன் கூறுகையில், இந்த படத்தில் சினேகாவுக்கு, ஆசிரியை வேடம். அது மிக வலுவான கதாபாத்திரம். இதுவரை சினேகா நடித்த வேடங்களில், இது சிறப்பாக இருக்கும்.
குறிப்பாக, அவர் நடிப்புக்கு விருது கிடைக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் அந்த அளவுக்கு அற்புதமாக நடித்திருக்கிறார் எனவும் கூறியுள்ளார்

திருத்தணி படத்தின் இசை குறுந்தகடை வெளியிட்டார் இயக்குனர் பாக்யராஜ்

21.08.2012.
பாஸ்கர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பேரரசு இயக்கியுள்ள படம் திருத்தணி.
இதில் 'சின்ன தளபதி' பரத், சுனைனா இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். படத்துக்கு பாடல்களை எழுதி, இயக்குனர் பேரரசு இசையமைத்துள்ளார்.
திருத்தணி படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடந்தது. இதில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு படம் வெற்றியடைய வாழ்த்தியுள்ளார்கள்.
விழாவில் திருத்தணி பட நாயகன் பரத், 'போராட்டங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்த 'திருத்தணி' படம் விரைவில் வெளியாகிறது' என்றார்.
திருத்தணி படத்தின் இசை குறுந்தகடை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட, தமிழ்நாடு படத்தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ சந்திரசேகர் பெற்றுக்கொண்டார்.
விழாவில் இயக்குனர் முருகதாஸ், எஸ்.ஜே.சூர்யா, ஜெயம் ராஜா, அருண் விஜய், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் 'திருத்தணியை' வாழ்த்தி பேசினார்கள்.

அண்ணன்- தம்பி பற்றிய கதையே நகர்ப்புறம்

21.08.2012.
கொலிவுட்டில் ஜி.டி. பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் டி. ஆறுமுகம் தயாரித்துள்ள படம் நகர்ப்புறம்.
இப்படத்தில் கல்லூரி, வால்முகி படங்களில் நடித்த அகில் நாயகனாகவும், ஸ்ரீதிவ்யா என்ற புதுமுக நடிகை நாயகியாகவும் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர மனோபாலா, டி.பி. கஜேந்திரன், மனோகர், மீரா கிருஷ்ணன், கருத்தபாண்டி, சத்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை அறிமுக இயக்குனர் என்.பி சாரதி கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார். இவர் வைத்தீஸ்வரன் தம்பிக்கோட்டை போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் சாரதி கூறுகையில், சென்னையில் நடுத்தர குடும்பத்தில் வாழும் அண்ணன், தம்பி இருவரும் வேறுபட்ட எண்ணங்களும், செயல்களும் கொண்ட குணாதிசயங்களை உடையவர்கள்.
அவர்களின் எண்ணம், செயல் வேறுபட்ட போதிலும், ஒருவருக்கொருவர் காட்டும் அன்பில் விட்டுக் கொடுக்காதவர்களாக இருக்கிறார்கள்.
அவர்களின் வாழ்க்கை முறை, அதில் ஏற்படும் பிரச்சனைகள், காதல், அதில் ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகும் கதை தான் நகர்ப்புறம் என்றார்

சத்திராஜ் வெளியிட்ட 'இப்படிக்கு தோழர் செங்கொடி' ஆவண படம்

21.08.2012.
மரண தண்டனைக்கு எதிராக 'இப்படிக்கு தோழர் செங்கொடி' என்ற ஆவண படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆவணப்படத்தின் சிடியை திரைப்பட நடிகர் சத்யராஜ் வெளியிட, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அதனை பெற்றுக்கொண்டார்.
விழாவில் சத்யராஜ் பேசுகையில், இது ஒரு நடிகருக்காக கூடிய கூட்டமல்ல முத்துக்குமாரின் தியாகத்தை புரிந்துகொண்ட கூட்டம். செங்கொடியின் தியாயத்தை புரிந்து கொண்ட கூட்டம். மாவீரன் பிரபாகரனின் தியாகத்தை புரிந்துகொண்ட கூட்டம்.
இந்த படத்தில் சினிமா என்பதையும் தாண்டி செங்கொடியின் தியாகம் மட்டும்தான் தெரிகிறது. அதனால் தான் சினிமாவுக்குள் இருக்கிற எனக்கு எதுவும் தெரியவில்லை.
சினிமாவுக்கு வெளியே இருக்கிற மணியரசன் அவர்களுக்கு தெரிகிறது. அதுதான் இந்தப் படத்தினுடைய வெற்றி என சத்தியராஜ் தெரிவித்தார்

மட்டு.வில் க.பொ.த (உ/த) மாணவன் கடத்தப்பட்டு விடுவிப்பு

21.08.2012.காத்தான்குடி 05ஆம் குறிச்சி அப்துல் மஜீத் ஆலிம் வீதியைச் சேர்ந்த க.பொ.த (உஃத) மாணவன் குத்தூஸ் முஹம்மட் அப்சர் (வயது 18) நேற்றிரவு (2012-08-20) 09.30 மணியளவில் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு மயக்க நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாண்டு கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சையில் வணிகப் பிரிவில் தோற்றி பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் இம்மாணவன் நேற்று இரவு 09.15 மணியளவில் காத்தான்குடி கேணி லேனிலுள்ள மஸ்ஜிதுஸ் ஸைனப் பள்ளிவாயலுக்கு இஸாத் தொழுகைக்காக சென்று தொழுது விட்டு பள்ளியை விட்டு வெளியேறும் போது சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

குறித்த மாணவன் நேற்று இரவு 09.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில்(ஸ்கூட்டி பஃப்) காத்தான்குடி கேணி லேனிலுள்ள மஸ்ஜிதுஸ் ஸைனப் பள்ளிவாயலுக்கு இஸாத் தொழுகைக்காக சென்று தொழுது விட்டு பள்ளியை விட்டு வெளியே வந்த போது அவ்விடத்திற்கு வந்த சிலர் அவரை அவர்களுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளதாகவும் அதிகாலை வரை அவரை விடுவிக்காது இன்று காலை சுமார் 07.00 மணியளவில் குறித்த மாணவனின் உறவினர்கள் தேடிச்சென்றுள்ள போது காத்தான்குடி 05 டாக்டர் பரீட்டின் டிஸ்பென்சரிக்கு முன்னால் குறித்த மாணவனை மயக்க நிலையில் கண்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாகவும் இதுவரையில் அவர் மயக்க நிலையிலேயே காணப்படுவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாணவர் தாக்கப்பட்டுள்ளார் எனவும் இவரின் மோட்டார் சைக்கிளை ஸைனப் பள்ளிக்கு அருகில் பெற்றுக் கொண்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மாணவனின் தந்தை குத்தூஸ் கருத்துத் தெரிவிக்கையில்,

மாணவன் மயக்க நிலையில் உள்ளதாகவும் உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சரியாக அறியமுடியாதுள்ளதாகவும் இவர் உயர் தர மாணவன் என்பதால் இவரது படிப்பைக் கெடுப்பதற்கு இது மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த மாணவன் இன்று அதிகாலை வரை வீடு திரும்பாததால் மாணவனின் வீட்டார் நேற்றிரவு நித்திரையின்றி பதற்ற நிலையில் இருந்துள்ளனர்