siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 12 மே, 2013

தலைவரின் போட்டோ 30 இலட்சத்துக்கு ஏல விற்பனை..!


சீனாவின் மாபெரும் தலைவர் மாவோ ஷெடாங். சீன கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர். இவர் மரணம் அடைந்து 27 ஆண்டுகள் ஆகிறது.
இந்த நிலையில் இவரது அரிய போட்டோ சீனாவில் நேற்று ஏலத்துக்கு விடப்பட்டது.
அதை பலர் போட்டி போட்டு கூடுதல் தொகைக்கு கேட்டனர். முடிவில் ரூ.30 லட்சத்துக்கு அந்த போட்டோ ஏலம் போனது.
இது நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 10 மடங்கு அதிகமாகும். அதை லூஷான் மவுன்டெய்ன் என்ற சுற்றுலா நிறுவனம் ஏலத்தில் எடுத்தது

பால்மா இறக்குமதியை தடைசெய்யும்


நியூஸிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களை தடைசெய்வது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அண்மைக் காலத்தில் நியூஸிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில் கதிர்வீச்சு தாக்கம் உள்ளதாக வெளியான தகவலை அடுத்தே இந்த ஆராய்வு மேற்கொள்ளப்படுகிறது.
அண்மையில் இலங்கைக்கு வந்த நியூஸிலாந்தின் இரண்டு அமைச்சர்கள் தமது பால்மாக்களின் இறக்குமதியை தடைசெய்ய வேண்டாம் என்று இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் நியூஸிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்கள் தொடர்பில் சிங்கப்பூரில் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பால்மாக்களில் அடங்கியுள்ள கதிரியக்க தாக்கங்களினால் நீரிழிவு உட்பட்ட நோய்கள் ஏற்படும் என்று மருத்துவத்துறையினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர்ந்தோருக்கு விதிக்கப்பட்ட புதிய??


கனடாவிற்கு புலம்பெயர்ந்து வருவோர்கள், தம் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை அழைத்து வர விரும்பினால் அவர்களைப் பராமரிக்கத் தேவையான வருமானம் இருந்தால் மட்டுமே அரசு அனுமதி வழங்கும் என்று புலம் பெயர்வுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னி(Jason Kenney) தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கு அரசு பணம் செலவழிக்க வேண்டியிருப்பதால், சுகாதார நிதி ஒதுக்கீட்டில் 44 சதவீதம் இவர்களுக்கே செலவாகிறது.
எனவே இனி புலம்பெயர்ந்து வருவோர்கள் வயதானவர்களை வீட்டில் வைத்திருக்க விரும்பினால் அவர்களுக்கான செலவை செய்ய தகுதி படைத்தவராக இருக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது.
குறைந்த பட்ச வருமானத்தை விட முப்பது சதவீதம் கூடுதலாக சம்பாதிப்பவராகவும், மூன்று வருடங்களாக வருமான வரி செலுத்துபவராகவும் இருக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்துள்ளது.
தற்பொழுது முதியவர்களின் மருத்துவ செலவுகளைப் பத்தாண்டுகள் வரை ஏற்றுக் கொள்ள முடிந்த பிள்ளைகளால் மட்டுமே பெற்றோரையோ, தாத்தா பாட்டியையோ வைத்திருக்க அனுமதி உண்டு.
ஆனால் இனிமேல் அவர்களின் இருபதாண்டு மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ள தகுதி படைத்த பிள்ளைகளே, முதியவர்களை வீட்டில் வைத்துக்கொள்ள அனுமதி உண்டு.
உடன் பிறந்தவரை கனடா அழைத்து வர புலம்பெயர்ந்தவர்கள் விரும்பினால் அவரை "சார்ந்திருப்பவர்" என்ற அடிப்படையில் வைத்துக் கொள்ளலாம் என்று அரசு தீர்மானித்துள்ளது

தேர்தல்: நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் வெற்றி


பாகிஸ்தானில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் வெற்றி பெற்றனர்.
பாகிஸ்தானில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. வாக்குபதிவு முடிந்தவுடன் நேற்று மாலை 6 மணியிலிருந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
இதில் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரிப், சர்ஹோதா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இரு தொகுதிகளில் போட்டியிட்ட தெரிக் இ-இன்சப் கட்சி தலைவர் பெஷாவரில் இம்ரான் கான் வெற்றி பெற்றார். ஆனால் லாகூர் தொகுதயில் தோல்வியடைந்தார்.

சனி, 11 மே, 2013

60 மில்லியன் டொலர் அரசு வங்கி பணத்தை


வெனிசூலாவில் உள்ள அரசு பொருளாதார வங்கியில் இருந்த இருப்பு தொகை சுமார் 60 மில்லியன் டொலரை, நிதி மேலாளரின் உதவியோடு சுவிஸ் வங்கிக்கு மாற்றி மனம் போன போக்கில் செலவழித்தவர்களைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மரியா டி லாஸ் ஏங்கெலெஸ் கோன்ஸாலெஸ்(Maria de los Angeles Gonzalez) என்ற பெண் அதிகாரி பேண்டஸ் எனப்படும் வெனிசுலா அரசு வங்கியில் நிதி மேலாளர் ஆவார்.
தோமாஸ் ஆல்பெர்ட்டோ கிளார்க்(Tomas Alberto Clarke) மற்றும் ஜோஸ் அலிஜாண்ட்ரோ ஹுந்தாதோ(Jose Alejandro Hurtado) என்ற இருவரும் மரியாவிடம் சென்று வங்கி இருப்பைக் கையாளும் பொறுப்பைத் தங்களுக்கு வழங்குமாறு வேண்டியுள்ளனர்.
இவர்கள் வங்கியாளர் மற்றும் வர்த்தகர்களுக்கு தொழில் தரகர்களாக இருந்ததனால் மரியாவும் இவர்களைத் தமது பிரதிநிதிகளாக நியமித்து நிதி கையாளும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2010ம் ஆண்டு யூன் வரை இந்த மூவரும் வெனிசூலா வங்கியின் இருப்பை சுவிஸ் வங்கிக்கும், மியாமி நகரில் உள்ள மற்றொரு வங்கிக்குமாக மாற்றிவிட்டனர். வங்கிகளின் பெயர்களைப் பொலிசார் வெளியிடவில்லை.
மேலும் அவர்கள் வெனிசூலா அரசுப் பணத்தைத் தங்களின் சொந்த உபயோகத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். இதனை அறிந்த அமெரிக்க அதிகாரிகள் இவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்

வெள்ளி, 10 மே, 2013

அழகிகளை கண்டுகொள்ளாத இளவரசர் ஹாரி


இங்கிலாந்து இளவரசர் ஹாரி அமெரிக்காவுக்கு வந்துள்ளதை அடுத்து, அவரது ரசிகைகள் குஷியாகி உள்ளனர்.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஒருவார சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு அவர் ஹாலோ டிரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த புகைப்படக் கண்காட்சிக்கு சென்றார்.
கேபிடல் ஹில்லில் உள்ள ரஸல் செனட் அலுவலக கட்டிடத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில் ஹாரியை காண ஏராளமான இளம் பெண்கள் வந்திருந்தனர்.
ஆனால் அவர் பெண்கள் பக்கம் திரும்பாமல் வியட்நாம் போர் வீரர் செனடர் ஜான் மெக்கெய்னிடம் சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார்.
மெக்கெயினின் மனைவி சிண்டி ஹாலோ டிரஸ்ட் உறுப்பினர் ஆவார்.
ஹாரி கன்னிவெடிகளை கண்டுபிடிக்கும் டிடெக்டர்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
ஹாலோ டிரஸ்ட் துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. அந்த டிரஸ்ட் மூலம் இதுவரை உலகம் முழுவதும் 1.4 மில்லியன் கன்னிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாரி கடந்த முறை அமெரிக்கா வந்த போது பெண்களுடன் ஹோட்டல் அறையில் நிர்வாணமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின
 

30 மாடி கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு


 ஸ்காட்லாந்தில் 30 மாடி குடியிருப்பு கட்டிடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில் 1960ம் ஆண்டு கிளாஸ்கோ நகரில் ரெட் ரோட் எனும் பெயரில் ஆறு 30 அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டன.
கட்டிடம் பழசாகி விட்டதால் ஆங்காங்கே விரிசல் காணப்படுகிறது. இங்கு வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, ஆறு கட்டிடங்களையும், ஒவ்வொன்றாக இடிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது.
அதன் படி கட்டிடங்களில் குடியிருந்த, 4,700 பேர் வேறு குடியிருப்புகளுக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.
அதன் பின் 88 கிலோ எடை வெடி மருந்தின் மூலம் ஒரு கட்டிடம் தகர்க்கப்பட்டது. மற்ற கட்டிடங்களும் ஒவ்வொன்றாக விரைவில் தகர்க்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

வெப்பமயமாவதால் சுவிஸ்ஸில் மாறும் தட்பவெப்ப ,,


சுவிட்சர்லாந்தில் மீட்டியோ சுவிஸ்(Meteo Swiss) எனப்படும் வானிலை அறிவிப்பு மையம், இன்னும் ஐம்பதாண்டுகளில் கோடைக்காலம் 80 நாட்களாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வானிலை அறிவிப்பு மையம் கூறுகையில், தற்பொழுது மலைப்பகுதியில் 50 நாட்களும், மேட்டு நிலப்பகுதியில் 65 நாட்களும் மட்டுமே கோடைக்காலம் நிலவி வருகின்றன.
உலகம் வெப்ப மயமாவதால், சுவிஸ் தட்ப வெப்ப நிலை மத்திய தரைக் கடல் பகுதியைப் போல மாறி விடும். எனவே எதிர்வரும் 2060ம் ஆண்டில் ஜுரா மலையின் சமவெளிப் பகுதியில் கோடைக்காலம் கூடுதலாக ஒரு மாதம் அதிகரித்து விடும்.
இதே போன்று ஆல்ப்ஸ் மலைகளின் பனிப்பொழிவு, வருடத்திற்கு 110 நாட்கள் என்ற நிலை மாறி 80 நாட்களாகக் குறைந்து விடும்.
இதனைத் தொடர்ந்து மேட்டு நிலங்களில் சராசரியாக ஒரு மாதம் பெய்யும் பனி ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் பத்து நாட்கள் மட்டுமே பெய்யும் என்று தெரிவித்துள்ளது
 

வியாழன், 9 மே, 2013

பெல்ஜியம் சுவிஸ், பி.வி.சி. தயாரிப்புகள் "


சுவிட்சர்லாந்து நாட்டின் இனியோஸ்(Ineos) நிறுவனமும், பெர்ஜியம் நாட்டின் சோல்வே நிறுவனமும் பாலி வினைல் குளோரைடு எனப்படும் பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரித்து வருகின்றன.
இவை இரண்டும் போட்டியாளர்களாக இருந்த காலம் மாறி தற்பொழுது இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோல்வேயும், இனியோசும் இணைந்து புதிய நிறுவனத்தை உருவாக்கினால் உலகத்தின் முதல் மூன்று பெரிய பிவிசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகப் பிரபலமடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் இதன் கிளைகள் ஒன்பது நாடுகளிலும், இதில் சுமார் 5650 பேர் பணியாற்றுவர என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐரோப்பாவில் கச்சாபொருட்களின் விலையும், மின்சாரக் கட்டணமும் அதிகரித்து வருவதால் தனித்து செயல்படுவதை விட இணைந்து செயல்பட்டால் உற்பத்தியும் அதிகரிக்கும், இலாபமும் உயரும் என்று சோல்வே நிர்வாகக் குழுவின் தலைவர் ஜீன் - பியர் கிளாமடி யூ(Jean-Pierre Clamadieu) தெரிவித்துள்ளார்.
மாறி வரும் ஐரோப்பிய சந்தைகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், உலக உற்பத்தியாளர்களிடையே அதிகரித்து வரும் போட்டியை சமாளிக்கும் வகையிலும் இந்த கூட்டு முயற்சி அமையும் என்று இனியோசின் தலைமை நிர்வாக அலுவலர் ஜிம் ரேட்கிளிஃப்(Jim Ratcliff) கூறியுள்ளார்
 

குறைந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் ,.,


சுவிட்சர்லாந்தில் கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக சீகோ என்கின்ற அரசுத் துறை ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மாதம் 3.1 சதவீதமாக இருந்த வேலையில்லாப் பிரச்னை தற்பொழுது குறைந்து 2.8 சதவீதமாக மாறியுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வேலை தேடுவோரின் எண்ணிக்கை 1,90,367 ஆகும். அதற்கு முந்தைய மாதம் இந்த எண்ணிக்கை 3857 கூடுதலாக இருந்தது.
ஜெனீவாவிலும், கிராபூண்டனிலும் கடந்த மாதம் வேலை தேடுவோரின் எண்ணிக்கை 5.5 சதவீதமாக இருந்தது. இதுவே மார்ச் மாதத்தில் 5.3 ஆகவும், கடந்த ஏப்ரலில் 4.9 சதவீதமாகவும் இருந்தது.
சுவிட்சர்லாந்தின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் ஓப்வால்ட் மற்றும் நிட்வால்ட் மாநிலங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக(0.9) உள்ளது. ஆனால் வேலையில்லாப் பிரச்னை ஜுரிச்சிலும்(3.2%), வாட் மாநிலத்திலும்(5%) மாறாமலிருக்கிறது.
பெர்ன் (0.1%), பேசெல் நகரம்(3.8%), வலாய்ஸ்(4.1%), நியுசேட்டல்(5.1%) போன்ற நகரங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்து கொண்டே வருவதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.