siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

நாடுகளுக்கு எச்சரிக்கை விடும் ஈரானின் அணுவாயுத அணிவகுப்பு


ஈரான் அணுஆயுதங்களை நிறைய சேமித்து வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதையடுத்து அமெரிக்கா ஈரான் நாட்டின் மீது சில பொருளாதாரத்தடையை கொண்டுவந்துள்ளது.

இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்து வருகிறது. ஆனால், ஈரான் ஆக்க வழிகளில் பயன்படுத்தவே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக கூறிவருகிறது.
இந்நிலையில் 1980-1988 ஆண்டு வரை ஈரான்-ஈராக்கிடையே நடந்த போரின் நினைவுதினம் முன்னிட்டு நேற்று ஈரானில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இதில் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய 30 ஏவுகணைகளை ட்ரக்குகளில் வைத்து அணிவகுப்பு நடத்தப்பட்டன. இதன் மூலம் தனது எதிரி நாடுகளுக்கு ஈரான் ஒரு எச்சரிக்கை மணி அடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதில் 12 செஜில் மற்றும் 18 காதர் ஏவுகணைகள் இடம்பெற்றன. இந்த இரு ஏவுகணைகளும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அரேபிய ஏவுதளங்களை குறிவைத்து தாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த அணிவகுப்பில் பேசிய ஈரான் அதிபர் ஹசன் ரஹானி, காட்சிக்கு வைக்கப்பட்ட அனைத்து ஆயுதங்களும் தற்காப்புக்காக மட்டுமே என்று வலியுறுத்தினார். 200 வருடங்களில் எந்த ஒரு நாட்டையும் ஈரான் தாக்கியது கிடையாது என்றும் அப்போது அவர் கூறினார்.

சீனாவை தாக்கியது 'உசாகி' புயல்: 20 பேர் பலி


பிலிப்பின்ஸ் மற்றும் தைவானைத் தொடர்ந்து உசாகி புயல் ஹொங்கொங் மற்றும் சீனாவின் தெற்கு கடலோரப்பகுதிகளை தாக்கியது.
மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் தாக்கிய இப்புயலால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். குவாங்டாங் மற்றும் ஃபுஜியன் நகரங்களுக்கு செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஹொங்கொங்கில் முன்னெச்சரிக்கையாக 8-ஆம் எண் புயல் எச்சரி‌க்கை ஏற்றப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டன

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

240 கி.மீற்றர் வேகத்தில் சூறையாடும் உசாகி!


பிலிப்பைன்ஸ் மற்றும் தைவானை உசாகி என்ற கடுமையான சூறாவளி தாக்கி வருகிறது. பலத்த மழை, அதிவேக சுழற்காற்று ஆகியவை காரணமாக கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. சூறாவளி காரணமாக, பயிர்கள்

கடுமையாக சேதம் அடைந்துள்ளன. தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. உயிர் சேதம் குறித்து உடனடியாக தகவல்கள் இல்லை. இதுவரை, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு

அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கு காரணமாக ஓட்டல்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. மணிக்கு 240 கி.மீ., வேகத்தில் காற்று வீசுவதால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை பொழிவு 1.2 மீட்டர் என்ற

அளவில் பலமாக உள்ளது. இந்த சூறாவளி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, ஹாங்காங் அரசு அதிகாரிகள் கூறி உள்ளனர்
 

வியாழன், 12 செப்டம்பர், 2013

ஹோட்டலொன்றில் பதற்ற நிலை: !

 
வாதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் இரு குழுக்களிடையே முரண்பாடொன்று இடம்பெற்றுள்ளதுடன் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அங்கு பொலி

ஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் சம்பவத்தின் போது அங்கு வந்த  அப்பிரதேச பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பக்கச்சார்பாக செயற்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த ஹோட்டலின் உரிமையாளர்கள் எனக் கூறப்படும் இரு

தரப்பினரிடையே முரண்டாடொன்று ஏற்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு நிலவிய பதற்ற சூழ்நிலையால் ஹோட்டலில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் அசௌகரியத்துக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் தெரியவருகின்றது.

மேலும் இதன்போது ஹோட்டலில் பிரதான நிறைவேற்று அதிகாரிக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

நிலக்கரி சுரங்கத்தால் பேய்நகரமாக மாறிய கிராமம் ஜேர்மனில்


 
ஜேர்மன் நாட்டில் உள்ள ஒரு கிராமமானது மக்கள் நடமாட்டம் இல்லாத பேய் நகரமாக மாறியுள்ளது.
வடக்கு ஜேர்மன் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமானது உள்ளது.

இங்கு ஏற்பட்ட ஏராளமான மாசுக்களால் அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த மக்கள் அனைவரும் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து சென்றுள்ளனர்.
அப்பகுதியில் வாழ்ந்து வந்த 7,600 மக்கள் வேறு பகுதிக்கு சென்றுவிட்டனர் மேலும் 100 பேர் அங்கு வாழலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்து மாறுதலாகி சென்ற நபர் கூறுகையில், நானும், என்னுடைய மனைவியும் எங்களுடைய எண்ணங்களை மாற்றிவிட்டு புது வாழ்க்கையை நோக்கி பயணிக்கிறோம்.
மேலும் அங்கு ஏற்பட்டுள்ள ஒரு பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண் வேண்டும் என்று கூறியுள்ளார்
 

சனி, 7 செப்டம்பர், 2013

7வது மாடியிலிருந்து விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த குழந்தை

7வது மாடியிலிருந்து விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த குழந்தை
கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் 7வது மாடியிலிருந்து தவறி விழுந்த 17 மாத குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.

Overlea Boulevard பகுதியின் Don Mills வீதியருகில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் 7வது மாடி பால்கனியிலிருந்து 17 மாத ஆண் குழந்தை ஒன்று கீழே விழுந்தது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் குழந்தை இக்கட்டான ஆனால் நல்ல நிலைமையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு சந்தேகப்படும்படியான காரணமெதுவும் தெரியவில்லை என்றும் ரொறொன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குழந்தை நாற்காலியில் ஏறி பால்கனி கிராதியின் மேலாக விழுந்திருக்கலாமா என்ற கோணத்தில் புலன் விசாரனையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கடுமையான காயங்களுடன் சிறுவன் வைத்தியசாலையில் உள்ளான்.
 

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

மேலாடையின்றி ஜேர்மனில் பெண்கள் போராட்டம்


 
ஜேர்மனியில் பெண்கள் மேலாடையின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் கிவி என்ற இடத்தில் உள்ள பெமன் அமைப்பின் தலைமையகத்தை பொலிசார் சோதனையிட்டதில், துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெர்லினில் உள்ள உக்ரைன் தூதரகம் முன்னால் பெண்கள் மேலாடையின்றி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர்களது உடம்பில் “எனது உடம்பே எனக்கு ஆயுதம், எனது மார்பகமே வெடிகுண்டுகள்” போன்ற வார்த்தைகளை எழுதியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து நிறுவனர் ஜனா ராமணான்டி(வயது 29)கூறுகையில், எங்கள் தலைமையகத்தில் எடுக்கப்பட்ட ஆயுதங்களானது பொலிசாரால் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. இதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை.
மேலும் நாங்கள் திட்டமிட்டு இந்த போராட்டத்தினை நடத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த குழுவை சேர்ந்தவர்களில் 3 நபர்கள் கடந்த மாதம் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

நீர் வீழ்ச்சியிலிருந்து இரு மாணவர்கள் சடலமாக மீட்பு


நாவலப்பிட்டி கலபட தோட்டத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கலபட நீர் வீழ்ச்சியில் நீராடும் போது மூச்சுத்திணறி இறந்துள்ளனர்.
ரகுநாத் திகாநாத் (வயது 18) சன்சன் நிக்ஷன் (வயது 18) ஆகியோர் நேற்று காலை திகாநாத் பாடசாலைக்குச் செல்வதாகவும் நிக்ஷன் நண்பனின் பிறந்த நாள் வைபவத்திற்குச் செல்வதாகவும் தெரிவித்து அவர்களின் ஏனைய நண்பர்கள் 9 பேருடன் நீர் வீழ்ச்சிக்குச் சென்று நீராடியுள்ளனர். இவர்கள் இருவருக்கும் மாத்திரமே நீந்த தெரியும் என்பதால் மற்றவர்கள் கரையிலேயே குளித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் நடுப்பகுதிக்கு நீதிச் சென்றுள்ளனர். ஆழம் கூடிய இடத்திற்குச் சென்ற இவர்களை திடீரென காணாததால் இவர்களின் பாதுகாவலரிடமும் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கும் உடன் அறிவித்தனர். பொலிஸார் வந்து தேடும் முயற்சியில் ஈடுபட்டு சுமார் 11.00 மணியளவில் மாணவர்கள் இருவரின் சடலத்தை எடுத்துள்ளனர்.
நிக்ஷனின் பெற்றோர் வெளிநாட்டில் இருப்பதால் தனது மாமாவீட்டில் வசித்து வந்துள்ளார். திகாநாத் தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்துள்ளார். இவர்கள் அட்டன் புனித பொஸ்கோஸ் அட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் மாணவர்களாவர்

சனி, 17 ஆகஸ்ட், 2013

பேஸ்புக்கிற்கு அடிமையானவரா? இதோ உங்களுக்கு ஓர் அதிர்ச்சி!!!


தொடர்ச்சியாக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்திவருபவர்கள் தமது வாழ்வில் துக்கம் நிறைந்தவர்களாக வரக்கூடிய சாத்தியம் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
Michigan பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போதே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்விற்காக வயது வந்த 82 பேர் சிறு குழுவாக சேர்த்து பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களை நாள் ஒன்றிற்கு 5 தடைவைகள் வீதம் 2 வாரங்களாக அவதானித்த பின்னர் கிடைத்த தகவல்களை ஒன்று திரட்டிய போது,
பேஸ்புக் பயன்படுத்துகின்ற சந்தர்ப்பங்களில் பெரும்பாண்மையானவர்கள் தனிமையில் இருப்பதாகவும்,
பேஸ்புக் பாவனையின் பின்னர் தமது சொந்த வாழ்க்கையில் இழந்த நேரங்களை நினைத்து கவலைப்படுவதாகவும் முடிவுகள் கிடைத்துள்ளது.
இதேவேளை நாள்தோறும் ஒரு பில்லியனுக்கு மேற்பட்டவர்கள் பேஸ்புக் தளத்தினை பயன்படுத்துவதாகவும் குறித்த பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.
 

ஹெலியில் இருந்து குதித்த சாகச வீரர் பரிதாப மரணம்! -


ஒலிம்பிக் தொடக்கவிழாவில் அசத்தியவர். லண்டனில் 2012ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி துவக்கவிழாவில் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் ஆக்‌ஷன் காட்சிகளை டூப் இல்லாமல் தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டி ரசிகர்களை கவர்ந்தவர் மார்க் சட்டன் (42). இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஸ்டண்ட் மேனான இவர், இதுதவிர பல்வேறு சாகச நிகழ்ச்சிகளையும் செய்துகாட்டி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார். இதைப்போன்ற சாகச காட்சிகளை படம்பிடித்து ஒளிபரப்பும் எபிக் டி.வி சேனல், 20 சாகச வீரர்கள் ஹெலிகாப்டர்களில் இருந்து குதிக்கும் சாகச காட்சியை ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலை உச்சியில் நேற்றுமுன்தினம் படம் பிடித்தது.
இதற்காக, 3 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே குதித்த மார்க் சட்டன், நிலை தடுமாறி மலை விளிம்பின் மீது விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக பலியானார். கரணம் தப்பினால் மரணம் என்ற முதுமொழி இவரை பொருத்தவரை உண்மையாகிவிட்டது.