siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 5 மார்ச், 2015

போர் விமானம் விழுந்து நொறுங்கி 2 விமானிகள் பலி

 துருக்கியில் போர் விமானம் வியாழக்கிழமை விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த இரு விமானிகள் உயிரிழந்தனர். இரண்டே வாரங்களில் அந்த நாட்டில் இதுபோல் இரண்டாவதாக 
நடைபெறும் விபத்து இதுவாகும்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 2 மார்ச், 2015

யானைக்கு முதல் முறையாக செயற்கை கால் பொருத்தப்பட்டது !

  உலகிலேயே முதல் முறையாக தாய்லாந்தில் செயற்கை கால் பொருத்தப்பட்ட பெண் யானை சராசரி பணிகளை வழக்கம்போல் செய்து பார்வையாளர்களை அசத்தி வருகிறது. கம்போடியா எல்லையோரம் உள்ள வனப்பகுதியில் புதைத்து வைக்கப்படிருந்த கண்ணி வெடியில் சிக்கி ஒரு காலை பறி கொடுத்த மோஷா என்ற அந்த பெண் யானைக்கு தாய்லாந்தில் உள்ள ஆசியா யானைகள் மருத்துவமனயில் கடந்த 2007-ம் ஆண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மற்ற யானைகளைப் போல் இல்லாமல் மூன்று கால்களுடன் ஊனமாகி விட்டதை எண்ணி கண்ணீர் வடித்த மோஷா, பல நாட்கள் சாப்பிட மறுத்து சோர்ந்து போய் காணப்பட்டது. பிளாஸ்டிக், மரத்தூள் மற்றும் உலோகங்கள் சேர்ந்த கலவையால் மனிதர்களுக்கு பொருத்தும் செயற்கை கால்களைப் போலவே மோஷாவுக்கும் ஒரு செயற்கை காலை
 டாக்டர்கள் தயாரித்தனர்.
தற்போது, அந்த காலின் உதவியுடன் தனது வழக்கமான பணிகளை உற்சாகமாக செய்யும் மோஷாவை கவனித்து வரும் பாகன், அது தூங்கும்போது மட்டும் செயற்கை காலை கழற்றி வைத்து விடுகிறார். புதிய கால் கிடைத்தவுடன் புதிய வாழ்க்கையே 
கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் இப்போதெல்லாம் சுமார் 150 கிலோ உணவு வகைகளை சாப்பிடுகின்றது. சமீபத்தில் பழைய செயற்கை காலுக்கு பதிலாக புதிதாக மற்றொரு செயற்கை காலை பொருத்திக் கொண்ட மோஷா, இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் நடமாடி வருவதாக பாகன் கூறுகிறார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

பறக்கும் ஆளில்லா விமானங்கள்: பின்னணி என்ன?

 
பாரீஸ் நகரின் முக்கிய இடங்களில் ஆளில்லா விமானங்கள் பறந்து வருவதால் பொலிசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
பாரீஸின் முக்கிய பகுதிகளான அமெரிக்க தூதரகம்(Us Embassy), ஈஃபில் டவர்(Eiffel Tower), பிளேஸ் டி லா கான்கோர்டோ(Place de la Concorde) உள்ளிட்ட பகுதிகளில், கடந்த திங்கள் மற்றும்
 செவ்வாய் கிழமைகளில் மட்டும் சுமார் 5 ஆளில்லா விமானங்கள் பறந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறியதாவது,
 தொடர்ந்து வானில் பறக்கும் இதுபோன்ற ஆளில்லா விமானங்களை செலுத்துபவர்கள் யார் என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இது பாரீஸில் தாக்குதல் நடத்தும்
 திட்டங்களில் தொடர்பு உடையதாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.
மேலும், சிறிய ரக ஆளில்லா விமானங்களை எளிதாக வாங்குவது எளிது, தற்போது முக்கிய இடங்களில் அதனை பறக்க விடுவதால் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களின் பிரச்சனையாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் எலிஸ்(Elysee) அரண்மனையிலும், பிரான்ஸ் அணு உலைகள் உள்ள பகுதிகளிலும் இதே மாதிரியான 
ஆளில்லா விமானங்கள் பறந்தது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்க தூதரகம் மேல் பறந்த ஆளில்லா விமானம் தொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டுருக்கும் நிலையில், அதை செலுத்தியவரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என பொலிசார் 
கூறியுள்ளனர்.
விமான போக்குவரத்து மற்றும் விமான பாதுகாப்பு துறை அதிகாரியான கிறிஸ்டோப் நாடின்(Christophe Naudin) கூறுகையில், இதுபோன்ற ஆளில்லா விமானங்களை செலுத்தி பாரீஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராயப்படுகிறதா என பொலிசார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

திடீரென உள்ளாடையில் வெடித்த துப்பாக்கி குண்டு:!!!

 இரத்த வெள்ளத்தில் இறந்த பெண் அமெரிக்காவில் பெண் அரசியல்வாதி ஒருவர் தன் உள்ளாடையில் துப்பாக்கி குண்டு வெடித்ததால் பலியாகியுள்ளார். 
அமெரிக்காவில் உள்ள மிச்சிகன்(Michigan)மாநிலத்தில் வசிக்கும் கிரிஸ்டினா பாண்ட்(Christina Bond Age-55)என்ற பெண் அரசியல்வாதி குடியரசு கட்சியை சேர்ந்தவர்.
இவர் தனது உள்ளாடையில் கைத்துப்பாக்கியை வைத்துக் கொண்டு வெளியே செல்லும் பழக்கம் உள்ளவர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் அவர் தனது உள்ளாடையில் துப்பாக்கி வைக்கும் இடத்தில் கைத்துப்பாக்கியை வைத்து அணிந்துள்ளார்.
ஆனால் துப்பாக்கி சரியான இடத்தில் இல்லாததால், அவர் தலையை குனிந்தபடி அதை சரி செய்துள்ளார்.
அப்போது எதிர்பாரதவிதமாக துப்பாக்கியில் இருந்து வெடித்த குண்டு அவரது கண்ணில் பாய்ந்துள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

பஸ்-ரெயில் மோதல் 16 பேர் பலி!!

அமெரிக்கா மெக்சிககோவில் உள்ள அனாஹீவாக் என்ற நகரில் ஆள் இல்லாத தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் பேருந்து மீது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் மோதி 16 பேர் பலியாகினர். 
விபத்து குறித்து தகவல் அறிந்த மெக்சிகோ போலீசார் விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை 
மீட்டு மருத்துவமனையில்  கொண்டு சேர்த்தனர். இந்த் விபத்தில்   30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 12 பிப்ரவரி, 2015

அமெரிக்க தூதரக வாகனங்களை தீவிரவாதிகள் கைப்பற்றினர்!

ஏமன் நாட்டில்  தூதரகம் மூடப்பட்ட பின்னர் தூதரக அமெரிக்க வானங்களை ஹவ்தி தீவிரவாதிகள் கைப்பற்றினர். 
அரேபிய தீபகற்ப பகுதியில் அல்-கொய்தா தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், அங்கு தொடர்ந்து பல்வேறு குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களை நடத்தி 
வருகின்றனர். சமீபத்தில் ஏமன் நாட்டின் தலைநகர் சானாவை ஹவ்தி தீவிரவாதிகள் கைப்பற்றினர். மேலும் அதிபரின் மாளிகையையும் அவர்கள் கைவசப்படுத்தினர். இதனையடுத்து அதிபர் அப்ட் ராப்பு மன்சூல் ஹாதி மற்றும் அவரது அமைச்சரவை ராஜினாமா செய்தது.
தொடர்ந்து ஏமனில் அரசியல் குழப்பநிலை நீடித்து வருவதாலும், வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதாலும் ஏமனில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா திடீரென மூடியது. தூதரக ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனை அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது
. இங்கிலாந்து தூதரகமும் இதேபோன்று மூடப்பட்டுள்ளது. இதை லண்டனில் உள்ள வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. சானாவில் பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டதையடுத்து 
பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரகங்கள் மூடப்பட்டன. அமெரிக்கா தூதரகம் மூடப்பட்ட பின்னர் 25 தூதரக வானங்களை ஹவ்தி தீவிரவாதிகள் கைப்பற்றினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 4 பிப்ரவரி, 2015

நடக்கிறது: பாக். முப்படை அணிவகுப்பில் சீன அதிபர் சிறப்பு விருந்தினர் ??

 பாகிஸ்தானில் அடுத்த மாதம் 23–ந் தேதி நடக்கவுள்ள முப்படை அணிவகுப்பில் சீன அதிபர் ஜின் பிங்கை சிறப்பு விருந்தினராக அழைக்க நவாஸ் ஷெரீப் அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.
ஒபாமா, சிறப்பு விருந்தினர்
இந்தியாவில் 66–வது குடியரசு தினம், கடந்த மாதம் 26–ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் நடந்த கொண்டாட்டங்களில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒருவர், இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது இதுவே முதல் முறை ஆகும்.
இது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை அளித்தது. அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தின் கவர்னர் சவுத்ரி முகமது சர்வார், ‘‘அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவுக்கு குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக வந்ததும், முக்கியத்துவம் வாய்ந்த சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும், பாகிஸ்தானுக்கு ராஜ்யரீதியிலான தோல்வியாக அமைந்து விட்டது’’ என விமர்சித்தார்.
அதிரடி முடிவு
இந்த நிலையில், பாகிஸ்தானில் அடுத்த மாதம், 23–ந் தேதி குடியரசு தின விழா, பாகிஸ்தான் தினம் என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது. அங்கு குடியரசு தின விழாவின்போது, முப்படை அணிவகுப்பு நடத்துவது வழக்கம். ஆனால் சமீப காலமாக பாதுகாப்பு காரணங்களை கூறி, முப்படை அணிவகுப்பு நடத்துவதில்லை. கடைசியாக கடந்த 2008–ம் ஆண்டு முஷரப் ஆட்சிக்காலத்தில்தான் முப்படை அணிவகுப்பு நடைபெற்றது.
இப்போது, 6 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் இந்த ஆண்டு குடியரசு தின விழாவையொட்டி ராவல்பிண்டி நகரில் முப்படை அணிவகுப்பு நடத்தவும், அதற்கு சீன அதிபர் ஜின்பிங்கை தலைமை விருந்தினராக அழைக்கவும் நவாஸ் ஷெரீப் அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராணுவ வட்டார தகவல்
இது தொடர்பாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர், ‘‘மார்ச் 23–ந் தேதி முப்படை அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியதாக ‘டான் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
அதே நாளேடு, இந்த அணிவகுப்புக்கு சீன அதிபர் ஜின் பிங்கை சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராஜ்ய ரீதியிலான தகவலை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இந்த முப்படை அணிவகுப்பு, 
ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் நடக்கிறது. எந்த இடத்தில் அணிவகுப்பை நடத்துவது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த முப்படை அணிவகுப்பு, பாகிஸ்தானின் முப்படை பலத்தை பறைசாற்றுவதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலாசார நிகழ்ச்சிகளும் இந்த அணிவகுப்பின்போது இடம் பெறும் என தகவல்கள் கூறுகின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 31 ஜனவரி, 2015

புதிய பொருளாதார தடை ரஷியா மீது இல்லை; ஐரோப்பிய நாடுகள் ??

 
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. டண்ட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளுக்கு இடையே உள்ள முக்கிய ரெயில் நிலையமான டெபால்ட்சேவ் பகுதியில் இரு படையினரும் தொடர்ந்து குண்டு மழை பொழிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு
 பங்கு இல்லை என அந்த நாடு தொடர்ந்து கூறி வரும் நிலையில், ரஷியாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடை விதித்து உள்ளன. ரஷியாவில் உள்ள ஏராளமான செல்வந்தர்களின் சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளதுடன், அவர்களுக்கு பயண தடையும் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ரஷியா மீது மேலும் பொருளாதார தடை விதிக்க இந்த நாடுகள் பரிசீலித்து வந்தன. ஆனால் பிரஸ்சல்சில் நேற்று நடந்த ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில், ரஷியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க மறுப்பு 
தெரிவிக்கப்பட்டது.
எனினும் ஏற்கனவே ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த தடையில் மேலும் சில ரஷியர்களை இணைப்பது குறித்து பரிசீலிக்கவும் முடிவு செய்யப்பட்டது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 27 ஜனவரி, 2015

வான்வழி தாக்குதலில் வெளிநாட்டு தீவிரவாதிகள்பலி!

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளிக்கூ டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 16–ந்தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 133 குழந்தைகள் உள்பட 154 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து
 தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள தத்தா ஹெல் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் விமானங்கள் மூலமாக வான்வழி தாக்குதல் நடத்தியது
இந்த அதிரடி தாக்குதலில் வெளிநாட்டு தீவிரவாதிகள் உள்பட 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். வடக்கு வஜிரிஸ்தானில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பாகிஸ்தான் 
ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 1,200–க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பது நினைவுகூரத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 24 ஜனவரி, 2015

டென்னிஸ் வீராங்கனை வைலட்டாடெஜிடிரேவா திடீர் மரணம்!

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை வைலட்டாடெஜிடிரேவா பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பால் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவில் உள்ள ரோஸ்டோவ் நகரில் பிறந்த வைலட்டா டெஜிடிரேவா, உலக அளவில் டென்னிஸ் வீரர்கள் வரிசை பட்டியலில் 1084வது இடத்தில் உள்ளார். இறுதியாக துருக்கியில்
 நடைபெற்ற காலிறுதி சுற்றில் இவர் கலந்து கொண்டார். வளர்ந்து வரும் இளம் வீராங்கனையான வைலட்டா டெஜிடிரேவா, தனது அபாரா ஆட்டத்தால் இவரது விளையாட்டு திறமை படிப்படியாக உலகிற்கு தெரியவந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், பயிற்சியின்போது டெஜிரரேவா மரணம் அடைந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 இவரது மரணம் குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. இவரது நெருங்கிய சக டென்னிஸ் வீராங்கனையான அனஸ்டாசியா வைலட்டா டெஜிடிரேவா மரணம்  நம்பமுடியவில்லை. இருப்பினும் அவரது ஆன்மா சாந்தி அடைய நவற்கிரி இணையங்களும்நிலாவரை இணையங்களும் இறைவனை பிரார்த்திக்கின்றது,   
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>