siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 4 மே, 2020

மிகக் குறைந்த மரணங்களின் எண்ணிக்கையை எட்டிய பிரித்தானியா

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 229 பேர் மரணித்துள்ளதாக mirror.co.uk. செய்தி வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலந்தில் 204 பேரும், வேல்ஸில் 14 பேரும், வட அயர்லாந்தில் 6 பேரும் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பிரிட்டனின் மொத்த மரணங்கள் 28,675 ஆக உயர்ந்துள்ளது
.இதேவேளை இங்கிலாந்தின் வைத்தியசாலைகளில் மரணித்த 54 பேரில், 40 – 59 வயதுக்கு இடைப்பட்ட 2 பேரும், 60 -79 வயதுக்கு உட்பட்ட 19 பேரும், 80 வயதுக்கு மேற்பட்ட 33 பேரும் வயது அடிப்படையில் உள்ளடங்குவதாக NHS இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வைத்தியசாலையால் திருப்பி அனுப்பபடவர் வீட்டில் மகனின் சிறப்பான செயற்பாட்டினால் எழுந்து நடந்தார்

வட்பேட்(Watford -UK) நகரில் வாழ்ந்து வந்த சூரிக்கு 81 வயது ஆகிறது. அவர் தனது மனைவி காஞ்சனாவுடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மாதம் அவரையும் கொரோனா தாக்கியது. இதனால் அவர் பாதிக்கப்பட்டு, வட்பேட்டில் உள்ள வைத்தியசாலைக்கு 
கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவரை சில நாட்கள் மட்டுமே பராமரித்த மருத்துவர்கள்.கடந்த 26-04-20ம் திகதி அவரது மகன் ராஜ்ஜை அழைத்து, உங்கள் தந்தைக்கு வெண்டிலேட்டர் பொருத்த முடியாது. அவரது நுரையீரல் தாங்காது. எனவே அவரை வீட்டுக்கு 
அழைத்து செல்வது என்றால், நீங்கள் கூட்டிச் செல்லலாம் என்று கூறியுள்ளார்கள். (மறைமுகமாக அவர் இறக்கப் போகிறார் என்பதனை தெரிவித்துள்ளார்கள்.)
இதேவேளை வட்பேட் மருத்துவமனையில் உள்ள முன்னணி, மருத்துவ ஆலோசகர் ஒருவர் உங்கள் தந்தையை 95,5 % விகிதம் காப்பாற்றுவது கடினம் என்றும். அவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்து போன குடும்பம். இறுதி நாட்களில் ஆவது வீட்டில் தங்கி இருக்கட்டும் என்று 
அழைத்துச் செல்ல தீர்மானித்தார்கள். ஆனால் மகன் ராஜ் வேறு ஒரு திட்டத்தை செயல்படுத்த ஆயத்தமானார்.
 அவர் அப்பாவை ஜமனின் கைகளில் தாரைவார்த்து கொடுக்க தயாராக இல்லை. எப்படி என்றாலும், அப்பாவை காப்பாற்ற வேண்டும் என்று சபதம் பூண்டார்.முதலில் ராஜ், வீட்டை சுத்தம் செய்து அப்பாவுக்கு என்று ஒரு  
அறையை ஏற்பாடு செய்தார். வீட்டிற்கு
 வெளி ஆட்கள் வருவதை தடை செய்து முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அப்பாவை 24 மணி நேரமும் கவனிக்க google spreed sheet பாவிக்க ஆரம்பித்தார். அனைத்து விடையங்களையும் அதில் போட்டு ஷியார் செய்தார். தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, 
சீராக காற்றை வைத்திருக்கும் இயந்திரத்தை (continuous positive airway pressure) வீட்டிற்கு கொண்டு வந்தார். 
அப்பாவை படுக்கவைத்து அதனை முகத்தில் மாட்டி விட்டார். தொடர்சியாக கவனித்து, தேவையான மருந்துகளை கொடுத்தும் வந்தார். அனைத்து குடும்பத்தினரும், நேரத்தை பங்கு போட்டு அப்பாவை கவனித்து கொண்டார்கள்.ஏப்பிரல் மாதம் 26 அன்று பிழைக்க மாட்டார் என்று வைத்தியசாலையால்
 திருப்பி அனுப்பப்பட்ட சூரி, நேற்று எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டார். ஆம் 81 வயதில் மேலதிக சில நோய்களால் ஏற்கனவே அவர் பீடிக்கப்பட்டு இருந்தார். ஆனால், கொரோனாவில் இருந்து அவர் முற்று முழுதாக மீண்டு விட்டார் என்று நேற்று குடும்பத்தார் அறிவித்துள்ளார்கள். மன
 வலிமையும் விடா முயற்ச்சியும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சமும் இருந்தால், இன் நோய் தாக்கத்தில் இருந்து விடுபட முடியும் என்று, இந்த முதியவர் எமக்கு ஒரு மன தைரியத்தை ஏற்படுத்தி
 இருக்கிறார் இன்று.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


துருக்கியில் உடல்நிலை சரியில்லாத குட்டியை கவ்வியபடி மருத்துவமனைக்கு வந்த பூனை

உலகில் தாய்ப்பாசத்துக்கு மிஞ்சியது எதுவுமே இல்லை, இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். அப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவத்தை துருக்கியைச் சேர்ந்த பூனை ஒன்று 
நிகழ்த்திக் காட்டியுள்ளது.
துருக்கியில், தாய்ப்பூனை ஒன்று தனது குட்டிப் பூனைக்கு உடல் நிலை சரியில்லை என்றதும் தவியாய் தவித்துள்ளது. இதனால், மனிதர்களைப் போலவே அந்த தாய்ப்பூனை தனது 
குழந்தை பூனைக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் குணப்படுத்துவதற்கு மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு வந்துள்ளது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவம் பற்றி ட்விட்டரில் மெர்வ் ஆஸ்கன் என்பவர் பதிவிட்டிருந்தார்.
அதில், “நாங்கள் மருத்துவமனையின் எமர்ஜென்சி
 வார்டில் இருந்தபோது, ஒரு பூனை தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தது, நாங்கள் அந்த பூனையை நெருங்கியபோது அது குட்டியை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு 
பாவமாக பார்த்தது.
அப்போது பரிசோதித்ததில் பூனையின் குட்டிப்பூனைக்கு உடல்நிலை சரியில்லை என்பது எங்களுக்கு தெரியவந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டிருந்த புகைப்படங்களில் பூனையை மிகவும் பாசத்தோடு மருத்துவர்கள் அரவணைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இக்காட்சி இணையத்துல் பலரையும் மனம் 
உருக வைத்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 8 ஏப்ரல், 2020

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 200 ரூபாவை தாண்டிய அமெரிக்க டொலர்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய 
மாற்று வீதங்களுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை 
விலை 200.4 ரூபாவாக பதிவாகியுள்ளது.இந்த
 வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கை ரூபாவின் பெறுமதி 9.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 17 மார்ச், 2020

கொரோனா வைரஸ் கட்டாரிலும் பரவுகின்றது கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளின் கீழ் கட்டார் மார்ச் 18 முதல் இரண்டு வாரங்களுக்கு முழுமை அடைப்பை அறிவித்துள்ளது.இதன்படி வருகைதரும் விமானங்கள் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளன.பொதுப் போக்குவரத்துக்கள் உட்பட்ட அனைத்து பணிகளும் இடை நிறுத்தப்பட்டு 
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு வாரங்களுக்கு பின்னர் நிலைமை ஆராயப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என்று கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.55 வயதானவர்கள், கர்ப்பிணி தாய்மார், சுவாசப்பிரச்சினை உடையவர்கள் 
வீடுகளில் இருந்தே பணியாற்ற 
அனுமதிக்கப்படுவர்.
அனைத்து பொது போக்குவரத்துக்களும் நேற்று முதலே மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன. உணவு மற்றும் மருந்துகளுக்கு 6 மாத கால வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தெரிவு 
செய்யப்பட்டவர்களுக்கு மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களில் இருந்து 6 மாத விலக்களிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 1 மார்ச், 2020

நுரையீரலை ஆய்வு செய்த அமெரிக்க மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

சீனப் பிரஜை ஒருவரின் நுரையீரலில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள மவுண்ட் சினாய் உடல் பரிசோதனை வைத்தியர்கள் குறித்த சீன பிரஜையை ஸ்கான் செய்தவேளை அவருக்கு கொரோனா 
தாக்கம் ஏற்படாத நிலையில் அறிக்கைகள் வெளியாகின.ஆனால், அவரை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்தியர்கள் அவதானித்த நிலையில் அவரின் நுரையீரலில் சில மாற்றங்கள் தெரிந்தன
.அதிக தொற்று நோயால் பாதிக்கப்பட்ட அவரின் நுரையீரலை ஸ்கான் மூலம் ஆராய்ச்சி செய்தபோது அதில் வைரஸ் பரவி வருவதை காணக்ககூடியதாக இருப்பதை வைத்தியர்கள் அவதானித்த
 நிலையில் அதனை 
புகைப்படங்கள் மூலம் வெளியிட்டுள்ளனர்.வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை இருவாரங்கள் சோதனை செய்தபோதே 
இவ்வாறு அவரின் நுரையீரலில் வைரஸ் வளர்ந்திருப்பதை அவதானிக்க
 முடிந்தது.அதேவேளை இவ்வாறான அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் கொரோனா நோயாளி ஒருவரை தனிமைப்படுத்தி அவருக்கான சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கலாம் என அ
வர் தெரிவித்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 8 ஜனவரி, 2020

பின்லாந் நாட்டு மக்களுக்கு அடித்தது அதிஷ்டம். நான்கு நாட்கள் மட்டும் வேலை

பின்லாந்தின் பிரதமர் இனி தன் நாட்டு மக்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறார்.இளம் வயதிலேயே பின்லாந்தின் பிரதமராகியுள்ள Sanna Marin (34), தன் நாட்டு மக்கள் குடும்பத்துடன் அதிக நேரம்
 மகிழ்ச்சியுடன் செலவிட வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார்.அத்துடன், நாளொன்றிற்கு பணியாளர்கள் ஆறு மணி நேரம் வேலை செய்தால் போதும். இப்படி செய்தால் ஒருவேளை
 உற்பத்தி பாதிக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஏற்கனவே ஸ்வீடன் 2015ஆம் ஆண்டிலேயே நாளொன்றிற்கு 
ஆறு மணி நேரம் வேலை செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்தது.aவிளைவு, பணியாளர்களின் மகிழ்ச்சி மற்றும் வசதியுடன், உற்பத்தியும் அதிகரித்தது. அதேபோல், Microsoft Japan நிறுவனமும் கடந்த
 நவம்பரில் வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை திட்டத்தை அறிமுகம் செய்தது.அந்த நிறுவனத்திலும் உற்பத்தி 39.9 சதவிகிதம் அதிகரித்ததைக் காணமுடிந்தது.
தற்போது, பின்லாந்து பிரதமரும், தன் நாட்டு மக்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யும் திட்டத்தையும், பணியாளர்கள் நாளொன்றிற்கு ஆறு மணி நேரம் வேலை செய்யும் திட்டத்தையும் அறிமுகம் செய்ய இருக்கிறார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 16 டிசம்பர், 2019

இலங்கையரல் டுபாயிலுள்ள வேலை செய்த வீட்டில் மில்லியன் ரூபா மற்றும் பொருட்திருட்டு

இலங்கையர் ஒருவருக்கு அனுதாபம் காட்டி டுபாயிலுள்ள தமது வீட்டிற்கு பணியாளராக அழைத்து சென்ற இந்திய கோடீஸ்வரத் தம்பதியின் வீட்டில் கைவரிசையைக் காட்டிய இலங்கையர் ஒருவரை டுபாய் பொலிசார் வலைவீசித் தேடி வருகிறார்கள்.இலங்கை 
மதிப்பில் 200 மில்லியன் ரூபா திருடியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த இந்திய தம்பதி சில மாதங்களின் முன்னர் இந்தியாவிற்கு சென்ற போது, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த இலங்கையர் ஒருவரை சந்தித்துள்ளது. அவரது 
நிலைமையை பார்த்து இரங்கி, தமது வீட்டில் பணியாளராக இருக்கிறாரா என வினவியுள்ளது. அந்த நபரும் சம்மதிக்க, அவரை டுபாயின் அல் கர்ஹூட்டில் உள்ள தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அண்மையில் அந்த தம்பதி ஐரோப்பிய, அமெரிக்க சுற்றுலாவிற்கு 
சென்ற சமயத்தில் திருட்டுச் இடம்பெற்றுள்ளது.தனது தாய்க்கு சுகவீனம் என குறிப்பிட்டு, இடைப்பட்ட நாளில் இலங்கைக்கு அவர் வந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது. இம்மாத ஆரம்பத்தில் தமது வீட்டுக்குத் திரும்பிய தம்பதி, லொக்கர் உடைக்கப்பட்டு திருடப்பட்டதை
 கண்டறிந்தனர்.
நகைகள், 6,500 டொலர் மதிப்பிலான எட்டு மின்னணுக் கைக்கடிகாரங்கள், 56,716 டொலர் மதிப்புள்ள கிரெடிட் கார்ட் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டதாக டுபாய்ப் பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.இலங்கைக்கு வந்த சந்தேகநபர் தற்போது டுபாய்க்கே திரும்பி சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரைக் கண்டறிய விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளதாக டுபாய்ப் பொலிசார் அறிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, 14 டிசம்பர், 2019

கூகுள் தேடலில் உலகளாவிய ரீதியில் முதலிடம் பிடித்த இலங்கை

உலகளாவிய ரீதியில் கூகிள் தேடுபொறியின் ஊடாக அதிகம் தேடப்பட்ட நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.2019ஆம் ஆண்டிற்கான கூகிள் தேடுதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அமெரிக்கா மேற்கொண்ட ஆய்விற்கமைய இந்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இலங்கை அதிகமாக தேடப்பட்ட நாடாக மாறியுள்ளது.அதற்கமைய கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை எங்கே என தீவிரமான தேடப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரியந்துள்ளது.
ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலே இதற்கு முக்கியமான காரணமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.கூகிள் தேடுதலில் இலங்கை குண்டு வெடிப்பு மற்றும் உலகில் இலங்கை எங்குள்ளது? போன்ற வார்த்தைகளே தொடர்ந்து தேடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இதேவேளை, 
அமெரிக்கர்கள் இடையில் பிரபலமான சுப்பர் பந்து மைதானம் அல்லது வேற்று கிரகவாசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பகுதி ஆகிய முக்கிய இடங்களை பின்தள்ளி
 இலங்கை முன்னணி இடம் பிடித்துள்ளது.அத்துடன் அமெரிக்கர்களில் நூற்றுக்கு 90 வீதமானோர் 
யகூகுள் கணக்குகளை பயன்படுத்துகின்ற நிலையில் அவர்களில் 87 வீதமானோர் இணையம் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.அதற்கமைய 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவிலும் அதிகமானோர் ‘றூநசந ளை’ என்ற வார்த்தையில் அதிகமாக இலங்கையையே தேடியுள்ளதாக கூகிள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 26 நவம்பர், 2019

குழந்தைகளை தொலைபேசி பாவனையிலிருந்து பாதுகாக்க இந்தோனேஷிய அரசின் திட்டம்

குழந்தைகள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாவதை தடுக்க புதுமையான வழிமுறையொன்றை இந்தோனேசிய அரசாங்கம் எடுத்துள்ளது.இன்றைய சமூகத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மிக அதிகமாக இருக்கின்றது. கிட்டத்தட்ட வயது வித்தியாசமில்லாமல்
 குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் என அனைவரும் எல்லோரும் அதற்கு அடிமையாகி இருக்கிறார்கள். இதனால், பெற்றோர்கள்
 தங்கள் குழந்தைகளை அதிலிருந்து பாதுகாக்க சிரமப்படுகிறார்கள்.இந்நிலையில், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள பண்டங் நகரில் ஸ்மார்ட்போன் 
பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமையாவதை தடுக்க நூதன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி அரசு சார்பில் 10 பாலர் பாடசாலைகள் மற்றும் 2 உயர்நிலை பாடசாலைகயில் பயிலும் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகள் 
கொடுக்கப்பட்டு அதனை வளர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுவரை சுமார் 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசின் இந்த திட்டத்திற்கு பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.”என்னை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்” என்று 
எழுதப்பட்டு கோழிகுஞ்சுகளின் கூண்டுகளில் வைக்கப்பட்டுள்ளன.“இந்த கோழிக்குஞ்சு வளர்ப்புத் திட்டம் குழந்தைகளின் கவனத்தை ஸ்மார்ட்போன் திசை திருப்புவதை நோக்கமாகக் கொண்டது மட்டுமல்லாமல், விலங்குகளை
 நேசிப்பதற்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கும் அவர்களை வழிநடத்த நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.“அவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு முன்பும், 
பாடசாலையில் இருந்து வீட்டிற்கு வந்த பின்னரும் கோழிகளுக்கு உணவளிப்பார்கள். இதன்மூலம் 
அவர்கள் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்வார்கள்
. ”இணைய பாதுகாப்பு நிறுவனமான ESET இன் 2019 கணக்கெடுப்பில், இந்தோனேசியாவில் சராசரியாக மக்கள் தினமும் மூன்று மணிநேரம் இணையத்தில் நேரத்தை செலவிடுவதாகவும், அதில், 10 சதவீதமானோர் வலைத்தளத்தில் 10 மணித்தியாலங்களை செலவிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது