This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
சனி, 21 ஜூலை, 2012
பெண்களை இரகசியமாக படம்பிடித்த செல்வந்தர் கொலை
குறித்த செல்வந்தர் இரகசிய கமரா மூலம் பெண் ஒருவரை படம் பிடித்து, மிரட்டி, தம்முடன் உறவு கொள்ளவில்லை என்றால், குறித்த படங்களை வெளியிடங்களுக்கு அனுப்புவதாக குறித்த பெண்ணை அச்சுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த பெண், தமது சகோதரனிடம் விடயத்தை கூறியதை அடுத்து, ஆத்திரமடைந்த சகோதரர் மற்றுமொருவருடன் கடைக்குள் வந்து, குறித்த செல்வந்தரை கொலை செய்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது

ஆலய உண்டியல் திருட்டு: உடுவில் பகுதியில் சம்பவம்
வியாழக்கிழமை இரவு இந்த உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் அம்பலவாணர் வீதியில் உள்ள தனியார் காணியில் இருந்து பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த உண்டியல் எந்த ஆலயத்தில் இருந்து திருடப்பட்டது என்ற விபரம் தெரிய வரவில்லை
மேல் கொத்மலை நீர் தேக்கதினுள் வேன் விழுந்து விபத்து (பட இணைப்பு
தலவாக்கலையில் இருந்து ஹொலிரூட் நோக்கி பயணித்த மோட்டார் வண்டியும் ஹொலிரூட்டில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த வேன் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளாகியதில் வேன் வண்டி சுமார் 150 அடி பள்ளத்தில் நீர் தேக்கத்தினுல் வீழ்ந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த வேன் சாரதியும் மோட்டார் வண்டி ஓட்டுனரும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தின் பின்னர் வேன் வண்டி நீர் தேக்கத்தினுள் கிடக்க மோட்டார் வண்டி பாதையில் கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மனைவியின் நினைவாக இதய வடிவில் மலர் தோட்டம் அமைத்த முதியவர்
21.07.2012
காதல் மனைவி மும்தாஜ் நினைவாக பேரரசர் ஷாஜகான் ஆக்ராவில் தாஜ்மகால் அமைத்தார். இது இன்றளவும் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது.
ஆனால் இது போன்ற பிரமாண்ட சாதனையை சாதாரண மனிதர்களால் உருவாக்க இயலாது. இருந்தபோதிலும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வின்ஸ்டன் ஹோவிஸ் (வயது 70) என்ற விவசாயி தனது மனைவி ஜேனட் நினைவாக இருதயம் வடிவில் மலர் தோட்டம் ஒன்றை அமைக்கிறார்.
இதற்காக 6 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து ஆயிரக்கணக்கான மரங்களுக்கு மத்தியில் நறுமணம் வீசும் வெள்ளைநிற பூச்செடிகளை வளர்த்து வருகிறார். 70 வயதிலும் மனம் தளராமல் வின்ஸ்டன் இந்த பணியை அவரே செய்து வருகிறார்.

வெள்ளி, 20 ஜூலை, 2012
எளிமையான புக்மார்கிங் சேவையை வழங்கும் இணையம்
| 20.07.2012 |
அவற்றை பின்னர் பார்த்து கொள்ளலாம் என புக்மார்க் செய்து கொள்வது தேவையானது தான். எனவே புதிய புக்மார்கிங் சேவைகள் தேவைப்படவே செய்கின்றன. அதற்கேற்ப புதிதாக புக்மார்கிங் சேவைகளும் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. டூரீட் தளமும் இத்தகைய புக்மார்கிங் சேவை தான் என்றாலும் புக்மார்கிங் சேவைகளிலேயே மிகவும் எளிமையானது என்று இதனை சொல்லலாம். இதன் வடிவமைப்பும் தோற்றமும் கூட எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாகவே இருக்கிறது. இதன் மூலம் இணையதளங்களை புக்மார்க் செய்வது மிகவும் சுலபமானது. எந்த தளத்து குறித்து வைக்க நினைக்கிறோமோ அந்த தளத்தில் புக்மார்கிங் டூல் பாரை கிளிக் செய்தால் போதும், அந்த தளத்தின் இணைப்பை மின்னஞ்சல் முகவரிக்கு இந்த தளம் அனுப்பி வைத்துவிடும். அதன் பிறகு எப்போது தேவையோ அப்போது மின்னஞ்சல் பெட்டியை திறந்து இந்த இணையத்தளத்தை பார்த்து கொள்ளலாம். மின்னஞ்சலில் இருந்து கணணியில் தரவிறக்கம் செய்து இணைய இணைப்பு இல்லாமலும் கூட இணையதளத்தை பார்க்கலாம். பயனுள்ள தளங்களை மறக்க கூடாது என புக்மார்க் செய்து விட்டு அதன் பிறகு புக்மார்க் செய்ததையே மறந்து நிற்பதை காட்டிலும், புக்மார்க் செய்த தளங்கள் நேரடியாக மின்னஞ்சல் பெட்டிக்கு வந்து சேர்வது பயனுள்ளது தானே |
சுமார் இரண்டு கோடி இலங்கை ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்துடன் ஒருவர் கைது

July 20, 20120
சுமார் இரண்டு கோடி இலங்கை ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்துடன் இன்று காலை 3.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை வெலிகம பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவரே ரூபா இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்துடன் சவூதி அரேபியாவிற்குச் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்

யாழில் காளை மாட்டை பார்வையிடுவதில் பொது மக்கள் முண்டியடிப்பு
யாழில் காளை மாட்டை பார்வையிடுவதில் பொது மக்கள் முண்டியடிப்பு
July 20, 20120
யாழில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கால்நடைத்திணைக்களத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்ட காளை மாட்டை கொள்வனவு செய்த வியாபாரி அதனை இறைச்சிக்காக வெட்ட விளம்பரம் செய்த நிலையில் நீதிமன்றத்தை நாடி காளை மாடு வியாபாரியிடம் இருந்து மீட்கப்பட்டு கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் ஒப்படைக்கப்பட்டது
சுவிசில் தமிழ் பெண் கொலை கணவன் கைது
சுவிசில் தமிழ் பெண் கொலை கணவன் கைது.
July 20, 20120
சுவிசில் தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகச் சந்தேகப்படும் காவல்துறையினர் அவரது கணவரைக் கைது செய்துள்ளனர்
கடந்த மாத இறுதிப் பகுதியில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் இந்தப் பெண்ணின் உடலம் இந்த மாதம் 2ஆம் நாள் யெனிவாவில் (Geneva) உள்ள றோன் (Rhone) ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண் பிரான்சின் பிரசாவுரிமை பெற்றவர் எனவும் யெனீவாவில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்தவர் என்றும் சுவிசிலுள்ள யேர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிப் பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டிருக்கின்றன.
மனைவியை கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்திருப்பதாகவும் அதனை பிள்ளைகள் கதவின் துவாரம் வழியாகப் பார்த்திருப்பதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்திருப்பதாகவும் இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத்தீவைச் சேர்ந்த கணவனை பாசலில்(Basel) வைத்துக் கைது செய்துள்ள யெனீவா காவல்துறையினர் சாம் டொலோன் (Champ-Dollon) சிறையில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தக் கொலை தொடர்பாக மற்றொரு தமிழரை சுவிச்சர்லாந்து காவல்துறையினர் தேடி வருவதுடன் குறித்த நபர் கொலைக்கு அல்லது கொலையின் பின்னர் உடலத்தை ஆற்றில் வீசுவதற்கு உதவி செய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)