| கொலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை பேபி ஷாலினி. |
|
பின்னர் காதலுக்கு மரியாதை படம் மூலம் நடிகையாக அறிமுகமான ஷாலினி ரசிகர்களின்
மனதில் நீங்கா இடம்பிடித்தார். அவ்வப்போது சில விழாக்களில் மட்டுமே தலைகாட்டி வந்த ஷாலினி பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த ஞாயிறன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பேட்மின்டன் பிரிவில் வென்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது நாகர்கோவிலில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். உறுதியாக ஷாலினி முதலிடத்தை பிடிப்பார் என்று விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றனர் |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012
தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டியில் பங்கேற்கும் நடிகை ஷாலினி அஜித்
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
செய்திகள்
ஹரிதாஸ் படம் சினேகாவுக்கு விருதை பெற்றுத்தரும்: ஜி.என்.ஆர் குமரவேலன்
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
தகவல்கள்
21.08.2012.
| நினைத்தாலே இனிக்கும் படத்தின் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ள படம் ஹரிதாஸ். |
|
இப்படத்தில் நாயகனாக கிஷோரும், நாயகியாக சினேகாவும் நடித்துள்ளனர். மேலும், என் கேரியரில், ஹரிதாஸ் முக்கியமான படமாக இருக்கும், என்று சொல்லி, ரஜினியின், கோச்சடையான் படத்திலிருந்து கூட வெளியேறினார். படம் குறித்து இயக்குனர் குமரவேலன் கூறுகையில், இந்த படத்தில் சினேகாவுக்கு, ஆசிரியை வேடம். அது மிக வலுவான கதாபாத்திரம். இதுவரை சினேகா நடித்த வேடங்களில், இது சிறப்பாக இருக்கும். குறிப்பாக, அவர் நடிப்புக்கு விருது கிடைக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் அந்த அளவுக்கு அற்புதமாக நடித்திருக்கிறார் எனவும் கூறியுள்ளார் |
திருத்தணி படத்தின் இசை குறுந்தகடை வெளியிட்டார் இயக்குனர் பாக்யராஜ்
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
தகவல்கள் புகைப்படங்கள்
| பாஸ்கர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பேரரசு இயக்கியுள்ள படம் திருத்தணி. |
|
இதில் 'சின்ன தளபதி' பரத், சுனைனா இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள்.
படத்துக்கு பாடல்களை எழுதி, இயக்குனர் பேரரசு இசையமைத்துள்ளார். விழாவில் திருத்தணி பட நாயகன் பரத், 'போராட்டங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்த 'திருத்தணி' படம் விரைவில் வெளியாகிறது' என்றார். திருத்தணி படத்தின் இசை குறுந்தகடை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட, தமிழ்நாடு படத்தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ சந்திரசேகர் பெற்றுக்கொண்டார். விழாவில் இயக்குனர் முருகதாஸ், எஸ்.ஜே.சூர்யா, ஜெயம் ராஜா, அருண் விஜய், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் 'திருத்தணியை' வாழ்த்தி பேசினார்கள். |
அண்ணன்- தம்பி பற்றிய கதையே நகர்ப்புறம்
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
செய்திகள்
| கொலிவுட்டில் ஜி.டி. பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் டி. ஆறுமுகம் தயாரித்துள்ள படம் நகர்ப்புறம். |
|
இப்படத்தில் கல்லூரி, வால்முகி படங்களில் நடித்த அகில் நாயகனாகவும், ஸ்ரீதிவ்யா
என்ற புதுமுக நடிகை நாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் என்.பி சாரதி கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார். இவர் வைத்தீஸ்வரன் தம்பிக்கோட்டை போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இப்படம் குறித்து இயக்குனர் சாரதி கூறுகையில், சென்னையில் நடுத்தர குடும்பத்தில் வாழும் அண்ணன், தம்பி இருவரும் வேறுபட்ட எண்ணங்களும், செயல்களும் கொண்ட குணாதிசயங்களை உடையவர்கள். அவர்களின் எண்ணம், செயல் வேறுபட்ட போதிலும், ஒருவருக்கொருவர் காட்டும் அன்பில் விட்டுக் கொடுக்காதவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை முறை, அதில் ஏற்படும் பிரச்சனைகள், காதல், அதில் ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகும் கதை தான் நகர்ப்புறம் என்றார் |
சத்திராஜ் வெளியிட்ட 'இப்படிக்கு தோழர் செங்கொடி' ஆவண படம்
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
செய்திகள்
| மரண தண்டனைக்கு எதிராக 'இப்படிக்கு தோழர் செங்கொடி' என்ற ஆவண படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. |
|
தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்த
விழாவில் ஆவணப்படத்தின் சிடியை திரைப்பட நடிகர் சத்யராஜ் வெளியிட, பேரறிவாளனின்
தாயார் அற்புதம்மாள் அதனை பெற்றுக்கொண்டார். இந்த படத்தில் சினிமா என்பதையும் தாண்டி செங்கொடியின் தியாகம் மட்டும்தான் தெரிகிறது. அதனால் தான் சினிமாவுக்குள் இருக்கிற எனக்கு எதுவும் தெரியவில்லை. சினிமாவுக்கு வெளியே இருக்கிற மணியரசன் அவர்களுக்கு தெரிகிறது. அதுதான் இந்தப் படத்தினுடைய வெற்றி என சத்தியராஜ் தெரிவித்தார் |
மட்டு.வில் க.பொ.த (உ/த) மாணவன் கடத்தப்பட்டு விடுவிப்பு
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
செய்திகள்
21.08.2012.காத்தான்குடி 05ஆம் குறிச்சி அப்துல் மஜீத் ஆலிம் வீதியைச் சேர்ந்த க.பொ.த (உஃத)
மாணவன் குத்தூஸ் முஹம்மட் அப்சர் (வயது 18) நேற்றிரவு (2012-08-20) 09.30 மணியளவில்
இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு மயக்க நிலையில் இன்று காலை
விடுவிக்கப்பட்டுள்ளார்.இவ்வாண்டு கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சையில் வணிகப் பிரிவில் தோற்றி பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் இம்மாணவன் நேற்று இரவு 09.15 மணியளவில் காத்தான்குடி கேணி லேனிலுள்ள மஸ்ஜிதுஸ் ஸைனப் பள்ளிவாயலுக்கு இஸாத் தொழுகைக்காக சென்று தொழுது விட்டு பள்ளியை விட்டு வெளியேறும் போது சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
குறித்த மாணவன் நேற்று இரவு 09.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில்(ஸ்கூட்டி பஃப்) காத்தான்குடி கேணி லேனிலுள்ள மஸ்ஜிதுஸ் ஸைனப் பள்ளிவாயலுக்கு இஸாத் தொழுகைக்காக சென்று தொழுது விட்டு பள்ளியை விட்டு வெளியே வந்த போது அவ்விடத்திற்கு வந்த சிலர் அவரை அவர்களுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளதாகவும் அதிகாலை வரை அவரை விடுவிக்காது இன்று காலை சுமார் 07.00 மணியளவில் குறித்த மாணவனின் உறவினர்கள் தேடிச்சென்றுள்ள போது காத்தான்குடி 05 டாக்டர் பரீட்டின் டிஸ்பென்சரிக்கு முன்னால் குறித்த மாணவனை மயக்க நிலையில் கண்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாகவும் இதுவரையில் அவர் மயக்க நிலையிலேயே காணப்படுவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மாணவர் தாக்கப்பட்டுள்ளார் எனவும் இவரின் மோட்டார் சைக்கிளை ஸைனப் பள்ளிக்கு அருகில் பெற்றுக் கொண்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மாணவனின் தந்தை குத்தூஸ் கருத்துத் தெரிவிக்கையில்,
மாணவன் மயக்க நிலையில் உள்ளதாகவும் உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சரியாக அறியமுடியாதுள்ளதாகவும் இவர் உயர் தர மாணவன் என்பதால் இவரது படிப்பைக் கெடுப்பதற்கு இது மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த மாணவன் இன்று அதிகாலை வரை வீடு திரும்பாததால் மாணவனின் வீட்டார் நேற்றிரவு நித்திரையின்றி பதற்ற நிலையில் இருந்துள்ளனர்
மகாவலி கங்கையில் நீராடிய இளைஞர் நீரில் மூழ்கிப் பலி
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
செய்திகள்
21.08.2012.மகாவலி கங்கையில் நீராடிய அக்குறனை குருகொடை பகுதியைச் சேர்ந்த
எம்.எம்.எம்.ரியாஸ்(23 வயது) என்ற இளைஞர் நீரில் மூழ்கிப்
பலியாகியுள்ளார்.கட்கஸ்தோட்டை கொஹாகொடை பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நேற்று திங்கட்கிழமை மாலை நண்பர்களுடன் நீராடியபோதே குறித்த இளைஞர் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இவரை நண்பர்களால் காப்பாற்ற முடியாமல் போனதாகவும் கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
தாயும் மகளும் நீரில் மூழ்கிப் பலி
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
செய்திகள்
தாயும் மகளும் நீரில் மூழ்கிப் பலியான சம்பவமொன்று குருணாகல் மாவட்டம், நாரம்மல
திகலகந்த பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் தீகிரினாவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய மல்லிகாகே லலிதா இந்திராணி மற்றும் அவருடைய மகள் 14 வயதுடைய மல்ஷி நிசன்ஸலா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சடலங்கள் தம்பதெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் தீகிரினாவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய மல்லிகாகே லலிதா இந்திராணி மற்றும் அவருடைய மகள் 14 வயதுடைய மல்ஷி நிசன்ஸலா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சடலங்கள் தம்பதெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாயியைக் குத்திக் கொன்ற காளை
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
செய்திகள்
இவர் பிச்வில் - ஓபர்வில் பகுதியில் உள்ள பண்ணையில் தன் மாடுகளை மேய்த்துக்
கொண்டிருந்த போது, மேய்ச்சல் போதும் என்று கருதிய இவர் தனது மூன்று பசுக்களையும்,
இரண்டு காளைகளையும் அந்தப் பகுதியிலிருந்து வெளியே வரச் செய்தார்.
அப்போது ஒரு காளைமாடு மட்டும் அவரது அழைப்புக்கு இணங்காமல் மேலும் மேலும்
மேய்ச்சலுக்குச் சென்றது. விவசாயி அதனை மறுபக்கமாகசென்று அதட்டினார். இதனால் கோபம்
கொண்ட அந்தக் காளை அவரைக் நோக்கி வெறியுடன் சென்று தன் கொம்புகளால் குத்திக்
கொன்றது.
மாடு குத்தியதால் அலறிய அவருக்கு அருகில் உள்ள வயலிலிருந்து மற்றொரு விவசாயி
உதவிக்கு ஓடிவந்தார். சரிந்து விழுந்த அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
உடனே வான்வழி மீட்புப் படையினர் ஹெலிகப்டரில் வந்து அவருக்கு மருத்துவ உதவி
அளித்தனர். எனினும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை. ஒரு வேட்டைக்காரன் மூலம் காளையைச்
சுட்டுக் கொள்ளப்பட்டது. பின்பு டிராக்டரில் வைத்து அதனை அப்புறப்படுத்தினர்
ரசிகர்களை ஏமாற்றிய ஐஸ்வர்யா ராய்
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
செய்திகள்
| ரசிகர்களுக்கு டிமிக்கி கொடுத்து ஐஸ்வர்யா ராய் எஸ்கேப் ஆனதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. |
|
ஐஸ்வர்யாராய் விளம்பர படமொன்றில் நடிப்பதற்காக நேற்று கொச்சி வந்தார். அவர்
வருவது பற்றி தகவல் பரவியதால் விமான நிலையத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. பொலிசார் சிலரும் ஐஸ்வர்யாவுடன் எப்படியாவது புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ரசிகர்களோட ரசிகர்களாக கலந்திருந்தனர். கைக்குழந்தையுடன் ஐஸ்வர்யா வருவதாக தகவல் வந்திருந்ததால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக அவரை அழைத்துச் செல்லும் எண்ணத்தில் பொலிசார் பரபரப்பாக காணப்பட்டனர். ஆடம்பர கார் ஒன்றை விமான நிலைய போர்டிகோவில் நிறுத்தி வைத்தனர். அந்த காரில் ஏறுவதற்கு ஐஸ்வர்யா ராய் வருவார் என்ற எண்ணத்தில் அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர் வந்ததும் வேறு பாதை வழியாக மற்றொரு காரில் பொலிசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுவிட்டனர். இதையறிந்த ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்கு ஓடினர். இதை கவனித்து ஐஸ்வர்யா ராய் ஒரு சில நொடிகள் காரை நிறுத்தி ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். ஆனால் யாரும் புகைப்படம் எடுக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர். இதுபற்றி ஐஸ்வர்யா கூறுகையில், இருவர் பட ஷூட்டிங்கிற்காக கேரளா வந்தேன். இரண்டாவது முறையாக இப்போது மீண்டும் வந்திருக்கிறேன். ஆனால் என் குழந்தையுடன் இங்கு வருவது இது தான் முதல் முறை என்றார் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




















