| 08.11.2012.By.Rajah.கொலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இணைந்து நடிக்கும் படம் 'கோச்சடையான்'. |
|
இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து
வருகிறது. அனிமேஷன் படமான 'கோச்சடையானை' ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கி வருகிறார். 'கோச்சடையான்' படத்தை சர்வதேச அளவில் வெளியிட உள்ளனர். இப்படத்தில் 'cutting edge technology' மூலம் நேற்றைய கலைஞர்களான நாகேஷ், வீரப்பா, நம்பியார், மனோகர், அசோகன் ஆகியோரை இணைக்கிறார்கள். சர்வதேச அளவில் ஜப்பான், இத்தாலி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் இப்படத்தை வெளியிடுகிறார்கள். கோச்சடையான் நாயகன் ரஜினிகாந்துடன், பாலிவுட் அழகி தீபிகா படுகோன் சொந்தக்குரலில் பேசி நடிக்கிறார் என்கிறது பட வட்டாரம். |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
வியாழன், 8 நவம்பர், 2012
'கோச்சடையானுக்காக' சொந்தக்குரலில் பேசும் தீபிகா படுகோன்
ரூ. 750 கோடி சொத்துக்கு சயிப் அலிகான் குடும்பத்தினர் மோதல்: ?
| 08.11.2012.By.Rajah.பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் குடும்பத்தில் சொத்து தகராறு எழுந்துள்ளது. |
|
இவருக்கும் இந்தி நடிகை கரீனா கபூருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனால்
சொத்துக்கள் கைவிட்டு போய்விடுமோ என்று குடும்பத்தினர் அஞ்சுகிறார்கள். எனவே அவற்றை பிரித்துக் கொடுக்கும்படி போர்க்கொடி தூக்கி உள்ளனர். சயீப் அலிகான் ‘பட்டோடி நவாப்’ பரம்பரையை சேர்ந்தவர். பட்டோடி அரண்மனை, விவசாய நிலங்கள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் என்று பட்டோடி நவாப் குடும்பத்தினருக்கு நிறைய சொத்துகள் உள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.750 கோடியாகும். மன்சூர் அலிகான் பட்டோடியின் ஒரே மகன் சயீப் அலிகான் என்பதால் இந்த சொத்துக்கள் அவர் கைவசம் உள்ளன. சயீப் அலிகான் சகோதரிகள் சபா, சோகா அலிகான் ஆகியோரும் இதனை அனுபவிக்கிறார்கள். ஆனால் மறைந்த மன்சூர் அலிகான் சகோதரிகள் சலீகா, சபீகா ஆகியோரும் இந்த சொத்துக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். தங்களுக்கு சொத்தில் பங்கு தர வேண்டும் என்றும், வற்புறுத்தி வருகிறார்கள். இதனால் சயீப் அலிகான் தாய் சர்மிளா தாகூர் குழப்பமடைந்து உள்ளார். இவர்களின் சொத்து சண்டையை பார்த்த நடிகை கரீனா கபூரும் அதிர்ச்சியாகியுள்ளார். சொத்துக்களை குடும்பத்தினர் எல்லோருக்கும் பிரித்து கொடுக்க மத்தியஸ்தர்களை வைத்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது |
நமது வாழ்வினூடே பல முறைகளில் கலந்துவிட்ட ஒன்று!மருத்துவக் குணங்கள்!
By.Rajah.08.11.2012.மஞ்சள் நமது வாழ்வினூடே பல முறைகளில் கலந்துவிட்ட ஒன்று. உணவுக்கு மணமூட்டவும், கிருமி நாசினியாகவும், மருந்துகள் தயாரிக்கவும், அழகு சாதனப் பொருள் தயாரிக்கவும் பயன்படுகிறது. பொருளாதாரம்,
மருத்துவம், தொழில், ஆன்மீகம் என எல்லாத் துறையிலும் மஞ்சள் பெரும்பங்கு வகிக்கிறது. மஞ்சளின் தாயகம் இந்தியா. உலகிலேயே இங்குதான் அதிக அளவில் பயிரடப்படுகிறது. கறி மஞ்சள், ந¡க மஞ்சள், காஞ்சிர மஞ்சள் என்று பல வகை இருந்தாலும் குச்சி மஞ்சள், குண்டு மஞ்சள் இருண்டுமே அதிகம் பயன்படுகிறது. குச்சி மஞ்சள் சமையலுக்கும்,
எண்ணெய் எடுக்கவும் மருத்துவத்திலும் பயன்படுகிறது. குண்டு மஞ்சள் பெண்கள் முகத்தில் பூசவும், அழகு சாதனப் பொருள் தயாரிக்கவும் பயன்படுகிறது மஞ்சளுக்கு பிரபஞ்சத்திலுள்ள நுண்ணிய கதிர்களை கவரும் ஆற்றல் உண்டு. எனவே சக்தியுள்ள இயற்கைப் பொருளாக இது திகழ்கிறது. தாவர இயலில் மஞ்சள் "குர்குமா லாங்கா" என குறிப்பிடப்படுகிறது. தமிழில் மஞ்சளைக் குறிக்கும் பெயர்கள் நூற்றுக்கு மேல் உள்ளன. அரிகம், அரன்மசி, உத்தரம், உரோசிதம், கதம்பம், சிறுகன்,
அரித்திரம், அம்பரம், கசர்ப்பம், காதரி, தீரம், தாமி, குருந்தம், அதிசக்தி, உருத்திரம், கதுப்பு என்பவை சில. மருத்துவக் குணங்கள் மஞ்சள் நுண்ணியிர்களை, நோய்க்கிருமிகளை அழிக்கும். உஷ்ணத்தை ஏற்படுத்தி வாயுவை வெளிப்படுத்தும். வயிற்றுப்புழு பூச்சிகளை அழிக்கும். மூலநோயை குணப்படுத்தும். தொண்டை நோயை நீங்கும். விஷங்களை இறக்கும்.
1. அட்டை, குளவி, தேனீ போன்றவை கொட்டினால் வலி, கடுப்பு ஏற்படும். அப்போது ஒரு துண்டு மஞ்சளுடன் சிறிது வேப்பிலை சேர்த்து அரைத்துப் பூசினால் விஷம் முறியும், வலியும் தீரும்.
2. ஜலதோஷம், தும்மல், மூக்கு நீர்வடிதல் இவற்றால் தலை பாரமாக இருக்கும். தொடர்ந்து தும்மல் வரும். கண்கள் கூசும். இந்நிலையில் தணலில் மஞ்சள் பொடியை போட்டு அதிலிருந்து எழும் புகையை மெதுவாகச் சுவாசித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
3. உடலில் தேமல் ஏற்பட்டால் அரை லிட்டர் நல்லெண்ணெயில் கைப்பிடி மஞ்சள் துண்டு எடுத்து இடித்துப் போட்டு காய்த்து வடிகட்டி பூசிவந்தால் தேமல் மறையும்.
4. எதிர்பாராதவிதமாக தீக்காயம் ஏற்பட்டுவிட்டாலோ, அல்லது சுடுநீர், நீராவி ஆகியவற்றால் ஏதேனும் கொப்புளம் மற்றும் தீப்புண் ஏற்பட்டால் சிறிதளவு வெங்காயச்சாற்றை எடுத்து, மஞ்சள் பொடியைச் சேர்த்துக் குழைத்து பூசினால் தீப்புண், கொப்புளம் மாறும்.
5. உடலில் எங்காவது சொறி, படை ஏற்பட்டால், கைப்பிடி மருதாணி இலைகளோடு ஓரிரு துண்டு மஞ்சளைச் சேர்த்து அரைத்துப் பூசி வந்தால் அவை ஆறும்.
6. மஞ்சளை அரைத்து நீரில் கலந்து தெளிய வைத்து ஒரு அவுன்ஸ் குடித்தால் உடல் எரிச்சல் தீரும்.
7. சொறி, சிரங்கு, புண் இவற்றின் மேல் மஞ்சள் தூளை தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பூசினால் மாறும்.
8. வாயு காரணமாகவோ அல்லது பொருந்தா உணவை உண்டதாலோ ஏற்படுகிற வயிறு உப்பிசம் குணமாக சாதம் வடித்த நீரில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து குடித்தால் போதும்.
9. அளவுக்கு மீறி மதுபானம் அருந்தியதால் அல்லது கஞ்சா போன்ற லாகிரிப் பொருட்களை உபயோகித்ததால் ஏற்பட்ட மயக்கத்தைப் போக்க மஞ்சளை நெருப்பில் இட்டு அதில் எழும் புகையை சுவாசித்தால் போதும்.
10. நாள்பட்ட புண் அல்லது ஆறாத புண் இருந்தால், மஞ்சளை நீரிலிட்டு காய்ச்சி, அந்த நீரால் கழுவி வந்தால் புண் ஆறும்.
11. வீட்டைச் சுற்றி மஞ்சள் பொடியை கரைத்து நீரைத் தெளித்தால் தொற்றுநோய் கிருமிகள் பரவாது.
12. மஞ்சள் தூளுடன் நெய் சேர்த்து குழைத்து தொண்டை மேல் பூசி வர தொண்டைப்புண் குணமாகும்.
13. கோடைக்கட்டி, வியர்க்குரு, அரிப்பு இவற்றைப் போக்க சம அளவு சந்தனம், மஞ்சள் பொடி, வேப்பிலைப் பாடி சேர்த்துக் குழைத்துப் பூசினால் சரியாகும்.
14. மஞ்சள் இலை, புதினா இலை இரண்டையும் உலரவைத்து பொடியாக்கி அதோடு சிறிதளவு உப்புத்தூள் கலந்து பல் துலக்கிவர பற் மற்றும் ஈறு உறுதி பெறும், பல் நோய் வராது

சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு முள்ளிக்குளம் மக்கள்
இதற்காக அவர்கள், பேராயர் மல்கம் ரஞ்சித் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் உதவிகளை கோரியுள்ளனர்.
2007 ஆம் ஆண்டு போரினால் வெளியேற்றப்பட்ட 212 தமிழ் கத்தோலிக்க மக்கள் தற்போது மறிச்சுக்கட்டு காட்டுப்பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
2007 ஆம் ஆண்டு முதல் தாம் உணவு உறையுள் மற்றும் வேலைவாய்ப்புகள் என்பவற்றுக்காக பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக அந்த மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமது சொத்துக்கள் முள்ளிக்குளம் பகுதியில் உள்ளன. அங்கு சென்றால் மீண்டும் பழைய வாழ்க்கையை தம்மால் தேடிக்கொள்ள முடியும்.
எனவே தமது சொந்த இடங்களுக்கு தம்மை செல்ல அனுமதிக்குமாறு முள்ளிக்குளம் மக்கள் கோரியுள்ளனர்.

புதன், 7 நவம்பர், 2012
ஒபாமா வெற்றி: ரஷிய அதிபர் புதின் வரவேற்பு
07.11.2012.By.Rajah.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்று இருப்பதை ரஷிய அதிபர் புதின் வரவேற்று உள்ளார். ஒபாமா மீண்டும் வெற்றி பெற்று இருப்பது அமெரிக்காவுடனான ரஷியாவின் உறவில் ஆக்கபூர்வமான விளைவை ஏற்படுத்தும் என்று அவர் கூறி இருக்கிறார்.
ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில்; பரஸ்பர ஆதாயம், மரியாதை, சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்பட ரஷியா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்று இருப்பதால், அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைந்து முன்னுரிமை அடிப்படையில் சிரியா பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழிவகைகளை காணவேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறி உள்ளார்.
பதவியேற்கிறார் ஜி ஜின்பாங்: என்னென்ன மாற்றங்கள் வரும்?
07.11.2012.By.Rajah.சீனாவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார் துணை ஜனாதிபதி ஜி ஜின்பாங்.
சீனாவின் தற்போதைய ஜனாதிபதி ஹூ ஜிண்டோவின் பதவிக் காலம் முடிவடைய உள்ளது.
இதனையடுத்து துணை ஜனாதிபதியான ஜி ஜின்பாங்(வயது 59), சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராகப் பொறுப்பேற்பதுடன் ஜனாதிபதியாகவும் பொறுப்பேற்க இருக்கிறார்.
உலகம் முழுவதும் எதிரொலிக்கும் பொருளாதார மந்த நிலைக்கு சீனாவும் தப்பவில்லை. அதன் பொருளாதார வளர்ச்சியில் சரிவு காணப்படும் நிலையில் புதிய ஜனாதிபதியாகும் ஜி ஜின்பாங் எப்படி இவற்றை எதிர்கொள்வார்? என்ற ஆர்வம் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பொப் பாடகியை திருமணம் செய்து கொண்டவர் ஜின்பாங் என்பது குறிப்பிடத்தக்கது

வாக்களித்த மக்களுக்கு நன்றி: ஒபாமாவின் வெற்றி உரை
07.11.2012.By.Rajah{காணொளி.இணைப்பு)அமெரிக்கா ஜனாதிபதியாக பராக் ஒபாமா இரண்டாவது முறையாக தெரிவு செய்யப்பட்டார்.
நேற்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியை வீழ்த்தினார்.
ஒபாமாவுக்கு ஆதரவாக 303 வாக்குகளும், மிட் ரோம்னிக்கு ஆதரவாக 206 வாக்குகளும் பதிவாகி உள்ளன.
அமெரிக்காவில் சிறப்பான மாற்றம்
இந்நிலையில் தனது தேர்தல் கோட்டையான சிகாகோவில் ஒபாமா வெற்றி உரை ஆற்றினார்.
ஒபாமா சிறப்புரையை கேட்க இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். அப்போது அவர் தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்க குடிமக்களுக்கும் தனது நன்றியை கூறும் வகையில், தன்னை இந்த உயரத்தை அடைய செய்த மக்களுக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என தெரிவித்தார்.
அமெரிக்கா சாதிக்க வேண்டியவை இன்னும் நிறைய இருப்பதாக கூறிய ஒபாமா, சிறப்பான முன்னேற்றங்கள் பலவற்றை அடைய அமெரிக்க மக்கள் காத்திருப்பதாக தெரிவித்தார்.
முன்னேற்றப் பாதையை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாகச் செல்வோம் என வேண்டுகோள் விடுத்தார்.
ஜனாதிபதி தேர்தலில் ரோம்னியுடனான போட்டி சவால் நிரம்பியதாக இருந்தது.
அமெரிக்காவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல ரோம்னியுடைய ஆதரவும் கிடைக்கும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.
குடியரசுக் கட்சியுடன் இணைந்து அமெரிக்க நிதி நெருக்கடியை சமாளிக்க திட்டங்கள் தீட்டப்படும் என்றார்
சவால்களை சமாளிப்பார் ஒபாமா
பத்திரிகையாளர்களிடம் ரோம்னி கூறுகையில், மக்கள் ஒபாமாவை தலைவராக தெரிவு செய்துள்ளார்கள். அவருக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
என்னுடன் கடுமையாக உழைத்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அமெரிக்கா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை ஒபாமா சமாளிப்பார் என நம்புகிறேன்.
அமெரிக்கா மீது கொண்ட அக்கறை காரணமாக நான் தேர்தலில் போட்டியிட்டேன். இந்த நேரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை என கூறினார்
நேற்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியை வீழ்த்தினார்.
ஒபாமாவுக்கு ஆதரவாக 303 வாக்குகளும், மிட் ரோம்னிக்கு ஆதரவாக 206 வாக்குகளும் பதிவாகி உள்ளன.
அமெரிக்காவில் சிறப்பான மாற்றம்
இந்நிலையில் தனது தேர்தல் கோட்டையான சிகாகோவில் ஒபாமா வெற்றி உரை ஆற்றினார்.
ஒபாமா சிறப்புரையை கேட்க இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். அப்போது அவர் தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்க குடிமக்களுக்கும் தனது நன்றியை கூறும் வகையில், தன்னை இந்த உயரத்தை அடைய செய்த மக்களுக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என தெரிவித்தார்.
அமெரிக்கா சாதிக்க வேண்டியவை இன்னும் நிறைய இருப்பதாக கூறிய ஒபாமா, சிறப்பான முன்னேற்றங்கள் பலவற்றை அடைய அமெரிக்க மக்கள் காத்திருப்பதாக தெரிவித்தார்.
முன்னேற்றப் பாதையை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாகச் செல்வோம் என வேண்டுகோள் விடுத்தார்.
ஜனாதிபதி தேர்தலில் ரோம்னியுடனான போட்டி சவால் நிரம்பியதாக இருந்தது.
அமெரிக்காவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல ரோம்னியுடைய ஆதரவும் கிடைக்கும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.
குடியரசுக் கட்சியுடன் இணைந்து அமெரிக்க நிதி நெருக்கடியை சமாளிக்க திட்டங்கள் தீட்டப்படும் என்றார்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி
07.11.2012.B.Rajah{ புகைப்படங்கள்.} சிறப்பான மாற்றம்
காத்திருப்பதாக வெற்றி உரைஅமெரிக்கா ஜனாதிபதியாக பராக் ஒபாமா இரண்டாவது முறையாக தெரிவு செய்யப்பட்டார்.
நேற்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியை வீழ்த்தினார்.
ஒபாமாவுக்கு ஆதரவாக 275 வாக்குகளும், மிட் ரோம்னிக்கு ஆதரவாக 203 வாக்குகளும் பதிவாகி உள்ளன.
அமெரிக்காவில் சிறப்பான மாற்றம்
இந்நிலையில் தனது தேர்தல் கோட்டையான சிகாகோவில் ஒபாமா வெற்றி உரை ஆற்றினார்.
ஒபாமா சிறப்புரையை கேட்க இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். அப்போது அவர் தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்க குடிமக்களுக்கும் தனது நன்றியை கூறும் வகையில், தன்னை இந்த உயரத்தை அடைய செய்த மக்களுக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என தெரிவித்தார்.
அமெரிக்கா சாதிக்க வேண்டியவை இன்னும் நிறைய இருப்பதாக கூறிய ஒபாமா , சிறப்பான முன்னேற்றங்கள் பலவற்றை அடைய அமெரிக்க மக்கள் காத்திருப்பதாக தெரிவித்தார்.
முன்னேற்றப் பாதையை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாகச் செல்வோம் என வேண்டுகோள் விடுத்தார்.
அதிபர் தேர்தலில் ரோம்னியுடனான போட்டி சவால் நிரம்பியதாக இருந்தது.
அமெரிக்காவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல ரோம்னியுடைய ஆதரவும் கிடைக்கும் என தான் நமபுவதாக தெரிவித்தார்.
குடியரசுக் கட்சியுடன் இணைந்து அமெரிக்க நிதி நெருக்கடியை சமாளிக்க திட்டங்கள் தீட்டப்படும் என்றார்.
சவால்களை சமாளிப்பார் ஒபாமா
பத்திரிகையாளர்களிடம் ரோம்னி கூறுகையில், மக்கள் ஒபாமாவை தலைவரை தெரிவு செய்துள்ளார்கள். அவருக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
என்னுடன் கடுமையாக உழைத்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அமெரிக்கா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை ஒபாமா சமாளிப்பார் என நம்புகிறேன்.
அமெரிக்கா மீது கொண்ட அக்கறை காரணமாக நான் தேர்தலில் போட்டியிட்டேன். இந்த நேரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை என கூறினார்
நேற்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியை வீழ்த்தினார்.
ஒபாமாவுக்கு ஆதரவாக 275 வாக்குகளும், மிட் ரோம்னிக்கு ஆதரவாக 203 வாக்குகளும் பதிவாகி உள்ளன.
அமெரிக்காவில் சிறப்பான மாற்றம்
இந்நிலையில் தனது தேர்தல் கோட்டையான சிகாகோவில் ஒபாமா வெற்றி உரை ஆற்றினார்.
ஒபாமா சிறப்புரையை கேட்க இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். அப்போது அவர் தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்க குடிமக்களுக்கும் தனது நன்றியை கூறும் வகையில், தன்னை இந்த உயரத்தை அடைய செய்த மக்களுக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என தெரிவித்தார்.
அமெரிக்கா சாதிக்க வேண்டியவை இன்னும் நிறைய இருப்பதாக கூறிய ஒபாமா , சிறப்பான முன்னேற்றங்கள் பலவற்றை அடைய அமெரிக்க மக்கள் காத்திருப்பதாக தெரிவித்தார்.
முன்னேற்றப் பாதையை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாகச் செல்வோம் என வேண்டுகோள் விடுத்தார்.
அதிபர் தேர்தலில் ரோம்னியுடனான போட்டி சவால் நிரம்பியதாக இருந்தது.
அமெரிக்காவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல ரோம்னியுடைய ஆதரவும் கிடைக்கும் என தான் நமபுவதாக தெரிவித்தார்.
குடியரசுக் கட்சியுடன் இணைந்து அமெரிக்க நிதி நெருக்கடியை சமாளிக்க திட்டங்கள் தீட்டப்படும் என்றார்.
சவால்களை சமாளிப்பார் ஒபாமா
பத்திரிகையாளர்களிடம் ரோம்னி கூறுகையில், மக்கள் ஒபாமாவை தலைவரை தெரிவு செய்துள்ளார்கள். அவருக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
என்னுடன் கடுமையாக உழைத்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அமெரிக்கா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை ஒபாமா சமாளிப்பார் என நம்புகிறேன்.
அமெரிக்கா மீது கொண்ட அக்கறை காரணமாக நான் தேர்தலில் போட்டியிட்டேன். இந்த நேரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை என கூறினார்
கலவரத்துக்குக் காரணம் அமைச்சரா? பரமக்குடி சிக்கலில் சுந்தரராஜ்
07.11.2012-By.Rajah.தங்கள்சமூகஇளைஞர்கள்கொல்லப்பட்டதற்காகஓர்அஞ்சலி ஊர்வலத்தையாவது பரமக்குடியில் நடத்திவிட வேண்டும் என்று ஒட்டுமொத்த தேவர் அமைப்புகளும் முடிவு செய்தன. ஆனால் காவல் துறை அனுமதி மறுக்கவே, அதற்குக் காரணம் அமைச்சர் சுந்தரராஜ்தான் என்று கொந்தளிக் கின்றனர்!
கடந்த 2-ம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பந்த் நடத்தி அமைதி ஊர்வலம் நடத்தவும் திட்டம் போட்டிருந்தனர். 144 தடை உத்தரவு அமலில் இருப்பதைச் சுட்டிக்காட்டி போலீஸ், தடை விதித்தது. ஆனாலும் தடையை மீறி ஊர்வலம் நடத்தியே தீருவோம் என்று அதற்கான ஆயத்தங்களில் சில அமைப்புகள் இறங்கின. அதனால் அதிகாலையிலேயே, கூட்டமைப்பின் தலைவர் வெள் ளைச்சாமி, செயலாளர் விஜயசாமி ஆகியோரைக் கைதுசெய்து பரமக்குடி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விட்டனர். ஊர்வலம் புறப்படுவதாக இருந்த கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் தர்மபுரி எஸ்.பி. ஆஸ்ரா கர்க் தலைமையில் 1,000 போலீஸாரையும் அதிரடிப்படை போலீஸாரையும் குவித்தனர். ஐந்து முனை சந்திப்பு, ஓட்டப்பாலம், ஆத்துப்பாலம், ஆர்ச் போன்ற இடங்களிலும் போலீஸ் கூட்டம்தான். வாகன ஒலிபெருக்கி மூலம், 'நகரில் 144 போடப்பட்டு இருப்பதால், யாரும் வெளியே வர வேண்டாம்’ என்று எச்சரிக்கையும் விடுத்தபடி இருந்தனர்.
அதனால், பக்கத்து ஊர்களில் இருந்து பெருங்கூட் டமாக ஆட்கள் திரள முடியவில்லை. ஒருசிலர் மட்டும் டூ வீலர்களில் போலீஸ் கண்களுக்குச் சிக்காமல் தேவர் மஹாலுக்கு வந்து சேர்ந்தனர். பக்கத்து ஊர்களான குமாரக்குறிச்சி, கமுதக்குடி, வேந்தோணி, உரப்புளி, பொதுவக்குடி, நைனார்கோவில், பெரும்பச்சேரி போன்ற ஊர்களில் இருந்து பலர் நடந்தே வந்து சேர்ந்தனர். தேவர் மஹாலில் ஆயிரக்கணக்கில் மக்கள் குவியத் தொடங்கவே... 'வெளியில் வந்தால் கைது. அதை மீறினால் லத்தி சார்ஜ்...’ என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்தனர்
கூட்டத்தை ஒருங்கிணைத்த மறத்தமிழர் சேனை அமைப்பின் தலைவர் பிரபாகரன் நம்மிடம், ''நடந்த மோசமான சம்பவங்களுக்குக் காரணமே அமைச்சர் சுந்தரராஜ்தான். நாங்கள் பெருவாரியாக ஓட்டுப் போட்டதால்தான் அவர் ஜெயித்தார். ஆனால், அவர் தன்னை தலித்துகளின் பிரதிநிதியாகவே காட்டிக்கொள்கிறார்.
கொடூரமான முறையில் இறந்துபோனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி ஊர்வலம் செல்ல அனுமதி கேட்டோம். அதற்கே மறுக்கிறார்கள். இங்கே சுந்தர ராஜ் ஆட்சிதான் நடக்கிறது. இந்திய அரசியல் சாசன சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரே, 'தனித் தொகுதிகள் 10 வருடங்களுக்கு மேல் தேவைஇல்லை’ என்று சொன்னார். ஆனால், பரமக்குடி மட்டும் 46 வருடங்களாக தனித்தொகுதியாக இருக்கிறது. இதனால் மற்ற சாதியினர் விரக்தி மனநிலையில் இருக்கிறார்கள்
தவறு செய்த குற்றவாளிகள் மீது காவல் துறை இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. முக்குலத்து மக்கள் ஒட்டுமொத்தமாக ஓட்டுப் போட்டதால்தான் ஜெயலலிதா முதல்வராக இருக்கிறார். வரும் நாடா ளுமன்றத் தேர்தலில் முக்குலத்தோர் பெரும்பான்மையாக இருக்கும் 16 தொகுதிகளில் அ.தி.மு.க. தோல் வியைத் தழுவும்'' என்று சீறினார்
போராட்டத்தை கைவிடும்படி, அ.தி.மு.க-வின் வி.ஐ.பி-கள் பலர் பிரபாகரனின் செல்போன் லைனில் வந்து சமாதானப்படுத்தினார்களாம். மதியம் வரை, யாரும் தடையை மீறி ஊர்வலம் நடத்த மஹாலை விட்டு வெளியே வருவதாக இல்லை. ஓர் இளைஞர் கூட்டம் மட்டும் வெளியே வந்து ஆட்சிக்கு எதிராக கோஷம் போட்டுவிட்டுச் சென்றது. சிறிது நேரத்தில் '16-ம் தேதி ஊர்வலத்தை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்து இருப்பதால் அனைவரும் கலைந்து செல்லுங்கள்’ என்று நிர்வாகிகள் அறிவிக்க, அவர்களைக் கடுமையாகத் திட்டியபடியே கலைந்து சென்றது கூட்டம்.
இதற்கிடையில், கமுதி - கோட்டைமேடு பகுதியில் கூடிய மக்கள், அதி.மு.க. கொடியையும் கறை வேட்டியையும் அமைச்சர் சுந்தரராஜ் படத்தையும் எரித்தனர். சாயல்குடி, முதுகுளத்தூர், நைனார்கோவில் போன்ற ஊர்களிலும் இதே நிலைதான்
இதுதொடர்பாக, அமைச்சர் சுந்தர ராஜிடம் பேசினோம். ''நான் எப்போதுமே சாதி மதத்துக்கு அப்பாற்பட்டவன். இந்தப் பிரச்னையில் ஏன் என் பெயரை இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தேவர் குருபூஜை சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி பசும்பொன் சென்று ஏற்பாடுகளைப் பார்வையிட்டு வந்தேன். அதுபோலவே, இமானுவல் விழாவுக்கு வருகிறவர்கள் மோதிக்கொள்ளக் கூடாது என்பதற்காக தனியாக சாலை ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்தேன். அப்போது, தலித் அமைப்புகள் என்னைத் திட்டினர். இப்போது, தேவர் அமைப்பினர் என்னைத் திட்டுகின்றனர். இதற்குமேல் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. குறுக்கு வழியில் பதவியைப் பிடிக்க நினைக்கும் எங்கள் கட்சியினர்தான் என் மீது அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். எது உண்மை என்பது அம்மாவுக்குத் தெரியும்'' என்றார் மிகுந்த வருத்தத்துடன்
16-ம் தேதி என்ன நடக்குமோ?

நீதி தேவதை மட்டும் எத்தனை நாள்களுக்குத்தான் உறங்குவது ?
07.11.2012.By.Rajah.. கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடுமைகளைக் கண்டு, சாதாரண மனிதர்களுக்கே கோபம் வருவது இயல்பு. அப்படியிருக் கையில், நீதி தேவதை மட்டும் எத்தனை நாள்களுக்குத்தான் உறங்குவது போன்று நடிக்க முடியும்?
ஆனாலும் நீதி தேவதையின் விழிப்பு அதிகாரத்துக்கு பிடித்தமான ஒன்றல்ல.
அதிகாரத்தால் திரையிடப்பட்டு, நடந்தேறும் தில்லு முல்லுகளை நீதி தேவதையின் விழிப்பு வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும். ஆகவே கும்பகர் ணனைப்போல் எப்போதும் நீதியின் துயில் கொள்ளலையே ஆட்சியாளர்கள் விரும்பினர்
ஆயினும், தன்னைச் சூழ நடக் கும் அநியாயங்களின் உக்கிரம் தாங்கமுடியாமல் நீதிதேவதை யால் நிம்மதியாக உறங்க முடிய வில்லை. அதிகாரம் தன்னுடைய பொம்மை என்று இது நாள்வரை நினைத்திருந்த நீதி தேவதை மீள் உயிர் பெற்றாள்
அரியணை வாசிகளின் அக் கிரமங்கள் ஒவ்வொன்றாக வெளிப் படுத்தப்பட்டு, அவர்களின் ஒவ்வொரு நகர்தலும் கேள்விக் கணைகளால் முற்றுகைக்கு உள்ளாகின. தவறு செய்தவர்களுக்கு விழி பிதுங்கியது. அவர்களின் தயவில் ஒட்டிக்கொண் டிருந்தவர்களுக்கு பேதி குடிக்காமலே வயிறு கலங்கியது.
இனியும் விட்டு வைத்தால், தமது இருப்பு கேள்விக் குறியாகி விடும் என்பது அதிகாரத்துக்குப் புரிந்திருந்தது. தான் ஊட்டி வளர்த்த கடா மார்பில் பாய்ந்த பின்னர், வாளாவிருக்குமா ஆட் சித்தரப்பு? தொடங்கியது கண்ணுக்குத் தெரியாத போர். நீதியும் இந்தப் போரை எதிர்கொள்ள தயாராகவே இருந்தது. தமக்காகப் போராடும் நீதியின் பின்னால் மக்களின் ஆதரவு நிழல் பெரிதாகத் தொடங்கிற்று.
புறக்கணிப்புகள், சலுகைக் குறைப்புகள், திட்டமிட்ட பழிச்சொற்கள், அமைச்சர்களின் இடைவிடாத அறிக்கைகள் என்பவற்றை அதிகாரம் கைவலிக் கும்வரை பிரயோகித்துக் கொண்டே இருந்தது. எதற்கும் நீதி வளைந்து கொடுப்பதாக இல்லை. நீதியோடு, சீண்டி விட்டு சும்மா இருக்கவும் முடியாது. இருந்தால் நீதிதன் கைவரிசையை காட்டிவிடும்.
சாம, தான, பேத வழிக ளெல்லாம் நீதியின் முன்பயனற்றுப் போய்விட தண்ட வழியைக் கையிலெடுத்தனர் அதிகாராத்தின் அடிவருடிகள். நீதிச்சேவை ஆணைக் குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண சென்று கொண்டிருந்த வாகனத்தை கம்பிகள், பொல்லுகள் என்பவற்றை கைகளி லேந்திய கும்பல் சூழ்ந்து கொண்டது.
உயிர் தப்பியதே பெரிய காரியம் என்று எண்ணும் அளவுக்கு நிகழ்ந்தது தாக்குதல். மஞ்சுள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதிகாரத்தின் அடுத்த குறிபிரதம நீதியரசர்தான். அவரை வீழ்த்த காய்கள் வேக வேகமாக நகர்த்தப்பட்டன.
இந்தச் சதுரங்க ஆட்டத்தில் தன் பக்கத்தில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுசரணையோடு, பிரதம நீதியரசருக்கு எதிராக பிரேரணையை அரசு கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும் பான் மையோடு இந்தப் பிரரேணை நிறைவேற்றப்பட்டால், பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக் காவை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்று அரசு எண்ணுகிறது.
ஆயினும் இதற்குப் பதிலடியாக சட்டத்தரணிகள் சங்கம், "திட்ட மிட்டே பிரதம நீதியரசர் மீது வீண் பழி சுமத்தப்பட்டு, இந்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது'' என்பதை மக்களிடம் சொல்லி, போராடுவதற்கான ஆயத்தங்களில் இறங்கி விட்டது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை அந்தப் பதவியில் விருப்பப்பட்டு அமர்த்தியவரே ஜனாதிபதிதான். ஆனால் அதிகாரம் நினைத்த திசையில் நீதியின் தராசை வளைக்க ஷிராணி இடங்கொடுக்கவில்லை.
இதற்கு முன்னரும் தனக்குச் சார்பாக நீதியை வளைக்க ஜனாதிபதி முயற்சியை மேற் கொண்டிருந்தார் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.
"மஹிந்தவுக்குச் சார்பாக தீர்ப்பை நான் ஒரு வழக்கில் வழங்கியதால் தான் இன்று அவர் ஜனாதிபதியாக முடி சூடிக்கொள்ள முடிந்தது'' என்று எந்த வெட்கமும் இல்லாமல் நீதியை மஹிந்தவுக்காக அடகு வைத்த கதையை சரத் என் சில்வா போட்டு உடைத்திருக்கிறார். ஆனால், ஷிராணி அப்படியல்ல, அவர் சரத் என் சில்வாவைப்போல சுடலை ஞானம் வந்து தத்துவம் பேசாமல், நிகழ்கணத்திலேயே தன் கைகளில் கறை படியாமல் பார்த்துக் கொள்ளவே விரும்பினார்.
அதற்குப் பரிசே அவரது பதவியைப் பறிக்கும் முயற்சி களும், அதன் விளைவாக வந்துள்ள பிரேரணைகளும். அறம் பிழைத்த நாட்டில் அறமே கூற்றாக மாறும். இதற்கு புராணங்கள் முதல் கிட்டியகாலம் வரை நிறைய உதாரணங்கள் உண்டு. தனக்கு எதிராக கருத்துத் தெரிவித்தமைக்காக உயர் நீதிமன்ற நீதிபதியின் பதவியைப் பறித்த மாலைதீவு ஜனாதிபதி, தன்னுடைய கதிரையைப் பறிகொடுக்க வேண்டியிருந்தது
அதேபோன்று பாகிஸ்தான் ஜனாதிபதியும் உயர் நீதிமன்றத்தோடு, முரண்டு பிடித்ததால் தன்னுடைய பதவிக்கு எப்போது முற்றுப்புள்ளி விழப்போகிறதோ என்று நிம்மதியின்றி ஏங்கிக்கொண்டிருக்கிறார். தன்னுடைய மிக நெருக்கமான நட்பு நாடுகளான மாலைதீவு, பாகிஸ்தான் போன்றவற்றின் ஜனாதிபதிகள் செய்த தவறையும் அதனால் எழுந்த விளைவையும் கண்முன் கண்ட பின்னும் நீதித்துறையோடு சண்டித்தனம் செய்வதிலேயே குறியாக இருக்கின்றனர் இலங்கையின் ஆட்சியாளர்கள்.
யார் கண்டது, கெடுகாலம் வந்துவிட்டால் கண்ணும் அறிவும் கெட்டுவிடுமாம். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் எதுவும் நடக்கப்போவதில்லை.
நீதி தேவதையே தனக்கு நீதிகோரி புலம்பி அழுவது இலங்கைத் திருமணி நாட்டில் மட்டுமே நிகழும் அதிசயம். நடப்பதை எல்லாம் கைகட்டிக்கொண்டு, பார்ப்பது மட்டுமே எம்மால் முடிந்த காரியம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)