siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 13 பிப்ரவரி, 2014

விமான விபத்து: தவறான தகவல்களால் சர்ச்சை

அல்ஜீரியாவில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் வழங்கிய தகவல்கள் தவறானவை என அல்ஜீரிய அரசாங்கமும் இராணுவமும் அறிவித்துள்ளன.
அல்ஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் இடம்பெற்ற இராணுவ விமான விபத்தில் 103 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

99 இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் பணித்த விமானத்தில் அனைவரும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும் குறித்த விமானத்தில் 78 பேர் பயணித்ததாக அல்ஜீரிய இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மீதமிருந்த 77 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சீரற்ற வானிலையினால் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

ஜேர்மன் பிரபலங்களின் கறுப்பு பணம் அம்பலம்!

சுவிஸ் வங்கியில் ஜேர்மனிய பிரபலங்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பண விவரங்கள் அம்பலமாகியுள்ளன.

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்டத்தின் குழுத்தலைவர் யுலி ஹொனஸ் பல மில்லியன் யூரோக்கள், தொலைக்காட்சி பெண்தொகுப்பாளரான அலிஸ் ஸ்வார்ச் 200,000 யூரோக்கள், பெர்லின் மேயர் கிலாஸ் வாவிரெய்ட் என்பவர் விமான நிலையம் கட்டும் பணிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை ஊழல் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல் அதனை சுவிஸ் வங்கியில் பதுக்கிவைத்துள்ளார்.

மேலும் அரசியல்வாதிகளும் இந்த கறுப்பு பண விவகாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜேர்மனிய வருமான வரித்துறையால் கடந்த 2010ம் ஆண்டில் தொடரப்பட்ட புலனாய்வில், சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பிரபலங்களின் விவரங்கள் அடங்கிய சீடி கண்டுபிடிக்கப்பட்டது.

அதில், ஜேர்மனில் மட்டும் மொத்தம் 26,000 பேர் சுவிஸ் வங்கியில் கணக்குகள் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சீடி வெளியான விபரம் குறித்த தகவல் பிற நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளுக்கு தெரியவந்ததால் அவர்களும் தங்களது நாடுகளின் வரி விவரம் குறித்த புலனாய்வில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை வரி ஏய்ப்பு செய்தவர்கள் வரியுடன் அபராதத்தையும் சேர்த்து கட்டவேண்டும் என்ற விடயத்தில், ஜேர்மன் அரசாங்கமான Social Democratic Party (SPD) க்கும், எதிர்கட்சிக்கும் வாக்குவாதம் நடந்து வருகிறது.

இதுகுறித்து SPD யின் நிதி நிபுணர் கூறுகையில், அரசாங்கத்திற்கு பணம் திரும்ப வர வேண்டும் என்பது அத்தியாவசியமாக இருப்பதால், பல நிபந்தனைகளை விதித்தால் மக்களிடமிருந்து பணம் திரும்ப கிடைக்காது என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சனி, 8 பிப்ரவரி, 2014

வெடிகுண்டு வச்சுருக்கேன்! விமானத்தை கடத்த முயன்ற !

நடுவானில் பறந்து கொண்டிருந்த போது குண்டு இருப்பதாக மிரட்டி விமானத்தை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் கார்கோவ் நகரத்தில் இருந்து 110 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
அப்போது, விமானத்தில் இருந்த பயணி ஒருவன் எழுந்து திடீரென கூச்சலிட்டுள்ளான்.
விமானத்தில் குண்டு வைத்திருப்பதாகவும், தான் கூறியபடி விமானத்தை ரஷ்யாவின் சோச்சி நகருக்கு செலுத்தும்படியும் உத்தரவிட்டான், இதனால் பயணிகள் அலறி கூச்சல் போட்டனர்.
உடனடியாக சாதுர்யமாக செயல்பட்ட விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவலை அனுப்பினார்.
இதனையடுத்து விமானிகளின் காக்பிட் அறைக்குள் நுழைய முடியாதபடி கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன.
விமானம் பத்திரமாக துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரத்தில் தரையிறக்கப்பட்டது, அங்கு பாதுகாப்பு படையினர் ஆசாமியை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இத்தகவலை துருக்கி நாட்டு போக்குவரத்துதுறை செயலாளர் ஹபீப் சோலுக் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால், சோச்சி நகரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
 

வியாழன், 30 ஜனவரி, 2014

லண்டனில் தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டை! பெண்ணை கைது

லண்டனில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில், பெண் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டனில் நீதிபதியாக இருந்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீதிபதி மீனா பட்டேல், இவரது மகள் குன்டல் பட்டேல்.

இவர் கனேரி வாஃபில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
கிழக்கு லண்டனில் வசித்து வரும் இவர், தாமெஸ் மாஜிஸ்திரேட் கோர்ட் வளாகத்தில் அமர்ந்திருந்த போது பொலிசார் கைது செய்தனர்.

கிழக்கு லண்டனில் நடைபெற்று வரும் பயங்கரவாத தடுப்பு சோதனையின் ஒரு பகுதியாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குன்டல் இன்று வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், 36 வயதாகும் அப்பெண் ஜனவரி 26ம் திகதி, பயங்கரவாத தடுப்பு சோதனையின் போது கைது செய்யப்பட்டார், பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் பாதுகாப்பு சட்டம் 2001ன் கீழும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு லண்டனில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், மற்ற விபரங்களை வெளியிட முடியாது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குன்டல் பட்டேல் செய்த குற்றம் குறித்து பதிலளிக்க மறுத்த பொலிசார் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போது எந்த விபரமும் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்களுது குடும்பம் பற்றி கருத்து தெரிவித்த அங்குள்ள மக்கள், அவர்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்று கூறியுள்ளனர்.
 

செவ்வாய், 28 ஜனவரி, 2014

பொருளாதாரத்தில் வலுவான நாடாக பாகிஸ்தான் மாறும்:

பாகிஸ்தான் எதிர்காலத்தில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்களை சேர்த்து சீர்திருத்தங்கள் செய்து பொருளாதாரத்தில் வலுவான நாடக மாறும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோன் கெரி  தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல்முறையாக சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பை அடுத்து இந்த இருநாடுகளுக்கும் இடையேயான நம்பிக்கை வளர தொடங்கியது. ஆனால் அல்கொய்தா தலைவர் ஓசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின் இரு நாடுகளுக்கிடையே இருந்த இந்த நம்பிக்கை உடைய தொடங்கின.

எனினும் பல பில்லியன் டொலர் மதிப்பிலான ஆதரவுகளை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துள்ளது.

பாகிஸ்தான் மக்களுடன் ஒரு வலுவான உறவு வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது. இந்த இருநாட்டு கூட்டுறவால் ஆப்கான் போரை வெல்ல முடியும் என்று கெரி நம்பிக்கை தெரிவித்தார்
 

திங்கள், 27 ஜனவரி, 2014

செக்ஸ் அடிமைகளாக வைத்திருந்த கடாபி! புதிய ஆவணப்படம் வெளியானது

 லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி சிறுமிகளை கற்பழித்து செக்ஸ் அடிமைகளாக வைத்திருந்தார் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு ஆப்ரிக்கா நாடான லிபியாவில் 42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி, மக்கள் போராட்டத்தின் விளைவாக கடந்த 2011ம் ஆண்டு கொல்லப்பட்டார்.

இவர் ஆட்சியின்போது நூற்றுக்கணக்கான சிறுமிகளை கற்பழித்து அவர்களை தனது செக்ஸ்காக பயன்படுத்தி தொந்தரவு செய்துள்ளார் என்று புதிய தகவலை நியூ பி.பி.சி. 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

மேலும் டெய்லி மெயில் பத்திரிக்கை தகவலின் படி, கடாபியின் உத்தரவின்படியே பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த மாணவிகள் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடாபி சிறுமிகளை கற்பழித்து கொடுமைபடுத்தியதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மேலும் பல கொடுமைகளை சிறுமிகளுக்கு கொடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வாதிகாரி மறைவிடத்தில் இருந்து தப்பிய பெண்ணின் மூலம் இந்த தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
இந்த ஆவணப்படம் “ஸ்டோரிவில்லே: மேடு டாக் - கடாபியின் சீக்ரெட் உலகம்” என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
 

ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டன்

 அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட செய்வதற்கு ஆதரவாக நிதி வசூலை தொடங்கப்போவதாக அரசியல் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

2008-ம் ஆண்டு ஜனநாயக கட்சிக்குள் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தலில் ஹிலாரி தோல்வியடைந்தார்.

அதில் வெற்றி பெற்ற ஒபாமா, பின்னர் அதிபர் தேர்தலிலும் வெற்றி வாகை சூடினார். அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் இம்முறை ஹிலாரி கிளிண்டன் நிறுத்தப்படலாம் என பரவலாக பேச்சு எழுந்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஹிலாரி,

"தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. அதில் போட்டியிடுவது தொடர்பான எனது முடிவை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிப்பேன்" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரியாரிட்டிஸ் யு.எஸ்.ஏ. ஆக்சன் என்ற லாப நோக்கமற்ற அரசியல் அமைப்பு, ஹிலாரி கிளிண்டன் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவாக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த செல்வந்தர்களிடம் நிதி திரட்டும் பணியை விரைவில் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது.

வியாழன், 23 ஜனவரி, 2014

குழந்தைகளுக்கு தடை விதித்த பிரதமர்

இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கமரூன் தனது குழந்தைகளுக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூனின் குழந்தைகள் நான்சி, எல்வென் மற்றும் புளோரன்ஸ்.
இவர்களுக்கு கமரூன் பல்வேறு தடைகளை விதித்துள்ளார், முக்கியமாக காலை வேளையில் தொலைக்காட்சி மற்றும் வார விடுமுறை நாட்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்ககூடாது என கூறியுள்ளார்.
எப்போதும் டிஸ்னி சேனலை விரும்பி பார்க்கும் குழந்தைகள் தற்போது, இயற்கை சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டுமே கண்டுகளிக்கின்றனர்.
கமரூனின் மகள் நான்சி படம் வரைவதில் ஆர்வம் உள்ளவராகவும், மகன் எல்வென் கால்பந்து மற்றும் ரக்பி ஆகிய விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவராகவும் மாறியுள்ளனர்.
இந்த தடை அவர்களை வேறு ரசனைகள் கொண்டவர்களாக மாற்றியுள்ளது என்று கமரூன் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
 

  

சனி, 18 ஜனவரி, 2014

சுவிஸை விட அமெரிக்காவையே பிடிக்கும்: ராக் ஸ்டார் ஜானி ஷாலிடே


சுவிட்சர்லாந்தை விட அமெரிக்காவில் வாழ்வதையே விரும்புகிறேன் என்று பிரபல ராக் பாடகர் ஜானி ஷாலிடே தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு நாட்டின் மிகப் பிரபலமான ராக் பாடகர் ஜானி ஷாலிடே பாடகர் மட்டுமல்லாமல், நடிகரும் ஆவார், இவர் தனது 70 வயதிலும் மேடைக் கச்சேரிகளிலும், பிரெஞ்சுத் திரைப்படங்களிலும் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் நாற்பது வருடங்களாக ராக் ஸ்டாராக பிரெஞ்சு நாட்டு மக்களின் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இவர், தான் சேர்த்து வைத்த பணத்தில் சுவிட்சர்லாந்திலுள்ள GSTAAD என்ற பெரிய வாசஸ்தலத்தை விலைக்கு வாங்கியிருந்தார்.

இதனால் பிரெஞ்சு அரசாங்கம் இவர் மீது வருமான வரி விதித்திருந்ததால், வருமான வரியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பிரெஞ்சு நாட்டிலிருந்து, சுவிஸ் நாட்டிற்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டிலுள்ள GSTAADஇல் 2006ம் ஆண்டு குடி புகுந்தார்.

சுவிட்சர்லாந்தின் வருமான வரித்திட்டத்தின்படி, சுவிட்சர்லாந்தில் குடிபுகும் பணக்கார வெளிநாட்டவர்கள் 6 மாதங்களும் 1 நாளும் நிரந்தரமாகத் தங்கியிருந்து நிரந்தர குடியுரிமை பெற்றிருந்தால், அவர்களுக்கு வருமான வரியில் நிறையச் சலுகைகள் அளிக்கப்படுகிறது.

அவர்களது செலவினைப் பெறுத்து, ஒரு குறிப்பிட்ட அளவு வருமான வரி கட்டினால் போதுமானது, இந்த வரிச்சலுகையைப் பெறவே ஜானி ஷாலிடே இங்கு கொஞ்சக் காலம் வாழ்ந்துள்ளார்.
ஆனால், சுவிஸ் வருமானத் துறை அதிகாரிகள் இவர் தொடர்ச்சியாக ஆறு மாத காலங்களாக சுவிட்சர்லாந்தில் இருக்க இயலாமல் வேறு இடங்களுக்கு பிரயாணம் செய்திருந்ததால், இவருக்கு வருமான வரியில் சலுகைகள் அளிக்கவில்லை.

இதனால் கோபமடைந்த ஜானி ஷாலிடே தன்னுடைய இருப்பிடத்தை சுவிட்சர்லாந்திலுள்ள GSTAAD ஐ விட்டு அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவிற்கு மாற்றிவிடப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் கலிபோர்னியாவில் வாழ்வதையே விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 16 ஜனவரி, 2014

சீனப்பிரஜைகள் ரூ.77 இலட்சத்தை கடத்த முயன்ற இருவர் கைது


ரூ.77 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை தங்களுடைய பயணப்பையில் வைத்து சீனாவுக்கு கடத்துவதற்கு முயன்ற சீனப்பிரஜைகள் இருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ்  நீண்ட நாட்களாக  கடமையாற்றுபவர் என்றும் மற்றவர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அவருடைய நண்பன் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.