siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 27 ஜூலை, 2015

சிறையை உடைத்து, பயங்கர கைதிகள் தப்பி ஓட்டம்.

கரீபியன் கடல் நாடான டிரினிடாட்-டொபாகோவின் தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயின். அங்குள்ள சிறையில் பல்வேறு கிரிமினல் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கடந்த 24-ந் தேதி அதிபயங்கர குற்றவாளிகள் 3 பேர் சிறையை உடைத்து, சிறைக்காவலர்களை துப்பாக்கியால் சுட்டு தப்பித்து ஓட்டம் பிடித்தனர். அதில் ஒரு சிறை காவலர் உயிரிழந்தார். சிறை காவலர்கள் 
திருப்பி சுட்டதில் தப்பி ஓடிய கைதிகளில் ஒருவர் குண்டு பாய்ந்து 
உயிரிழந்தார். 2 பேர் தப்பி விட்டனர்.அவர்கள் ஆபத்தானவர்கள் என்றும், பயங்கர ஆயுதங்களுடன் தப்பினர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த கைதிகள் வேறெங்கும் தப்பி
 விடாதபடிக்கு அந்த நாட்டில் உள்ள விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் உச்சக்கட்ட உஷார் நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் சிலர் பிடித்து விசாரிக்கப்படுவதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சம்பவம் தொடர்பாக பிரதமர் கம்லா பெர்சாத் விடுத்துள்ள அறிக்கையில், “உங்கள் அரசு முழு கட்டுப்பாட்டில் உள்ளது. தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன” என கூறி உள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 26 ஜூலை, 2015

55 பேர் பலிஏமனில் சவுதி கூட்டுப்படைகள் வான் தாக்குதல்!

ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், சவுதிக்கு அதிபர் மன்சூர் ஹாதி தப்பி ஓடி விட்டார். ஏமனில் மீண்டும் அவரது ஆட்சியை ஏற்படுத்துவதற்காக சவுதி கூட்டுப்படைகள் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான்,
 மொராக்கோ, எகிப்து, சூடான் அடங்கியவை), ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் வான்தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஏமனின் தைஜ் நகரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் குண்டு மழை பொழிந்துள்ளன. இந்த தாக்குதல்களில் 55 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று கூறுகிறது.
இது தொடர்பாக அந்த நிறுவனம், “தைஜ் நகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் என்ஜினீயர்கள், தொழிலாளர்கள், இடம் பெயர்ந்து வந்த குடும்பங்கள் வசித்து வந்த மோக்கா பகுதியை குறி வைத்து சவுதி 
கூட்டுப்படைகள் வான்தாக்குதல்கள் நடத்தின. இதில் 55 பேர் உயிரிழந்தனர்” என கூறியது. அங்கு இன்னும் மீட்பு பணிகள் முடிவு அடையாததால், பலி எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 25 ஜூலை, 2015

கள்ளத்தனமாக செல்லும் அகதிகளின் மரணம் அதிகரிப்பு

பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு கள்ளத்தனமாக செல்லும் அகதிகள் தொடர்ந்து மரணமடைந்து வருவதையடுத்து பிரான்ஸ் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளது. 
பிரான்ஸ் நாட்டில் இருந்து பிரித்தானியாவுக்கு கலைஸ் பகுதி வழியாக பல அகதிகள் கள்ளத்தனமாக செல்கின்றனர்.
இவ்வாறு செல்பவர்களில் பலர் இந்த முயற்சியின் போது மரணமடைகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பெண் ஒருவர் சாலை விபத்தில் பலியானார். மேலும் ஆண் ஒருவர் ரயிலின் கூரையில் இறந்துகிடந்தார்.
இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகதிகள் கள்ளத்தனமாக செல்வதை தடுக்கும் வகையில் பாதுகாப்பை பலப்படுத்த பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. மேலும் யூரோ டனல் நிறுவனமும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 13 மில்லியன் யூரோவை ஒதிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 23 ஜூலை, 2015

ஆண், பெண் திருமணம் செய்ய புதிய வயது வரம்பை நிர்ணயம் செய்தது அரசு

ஸ்பெயின் நாட்டில் ஆண், பெண் சட்டப்படி திருமணம் செய்யக்கூடிய வயதை அந்நாட்டு அரசாங்கம் அதிரடியாக உயர்த்திய புதிய சட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. 
ஐரோப்பிய நாடுகளிலேயே 14 வயதில் சட்டப்படி திருமணம் செய்யக்கூடிய வழக்கம் ஸ்பெயின் நாட்டில் மட்டுமே பல வருடங்களாக இருந்து வந்துள்ளது.
பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் ஆண், பெண் இருவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்யும் வயது 16 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் திருமண வாழ்க்கை பற்றிய போதிய அனுபவம் மற்றும் அறிவு இல்லாததால், 14 வயதில் செய்யப்படும் பெரும்பாலான திருமணங்கள் வெற்றிகரமாக நீடிக்கவில்லை என்பது அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனினும், திருமண வயதை உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடந்த 2013ம் ஆண்டே அறிவித்திருந்தபோதும், இன்று தான் அதனை அரசு செயல்படுத்தியுள்ளது.
இன்று முதல் அமலுக்கு வரும் புதிய சட்டத்தின் படி, ஆண், பெண் இருவரும் திருமணம் செய்யக்கூடிய வயதை 14-லிருந்து 16 ஆக சட்டப்பூர்வமாக உயர்த்தியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை குழந்தைகள் நல அமைப்புகள் உள்ள பல அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் வரவேற்று வருகின்றன.
கடந்த 2000 முதல் 2014 ஆண்டுகள் வரை சுமார் 365 திருமணங்கள் 16 வயதிற்கு கீழ் நடந்துள்ளன.
தற்போது புதிய திருமண வயது வரம்பு சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால், பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றி உள்ளதாக ஸ்பெயின் அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 19 ஜூலை, 2015

தனயனை இழந்து தவிக்கும் தம்பியின் உருக்கமான வேண்டுகோள்!

அவுஸ்திரேலியா, சிட்னியில் உள்ள கிரேஸ்ரன் என்னும் நகரத்தில் வசித்து வந்த அஜந்தன் நவரட்ணம் என்ற இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை தொடர்பாக அவருடைய தம்பியார் அங்கு வசிக்கும் தமிழ் மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 
அவர் தெரிவித்துள்ளதாவது,
படுக்கை அறையை சூடாக்கி கொள்ளும் பொருட்டு இறைச்சி வாட்டும் [B,B,Q] என அழைக்கப்படும் இயந்திரத்தின் கரி வில்லைகள் [charcoal tablets] அறையினுள் வைத்து விட்டு உறங்கப் போன அவர் அடுத்த நாள் இறந்த நிலையில் காணப்பட்டார்.
கரியுடன் வெளியாகும் காபன் மொனொரைட் வாயு இவரது மரணத்துக்கு காரணமாக உள்ளதாக தெரியவருகின்றது.
மட்டக்களப்பு, கல்லாறு என்னும் இடத்தைச் சேர்ந்த அஜந்தன் இரண்டு சிறு பிள்ளைகளும் உள்ளனர். அவர்களை இவரின் இறுதி கிரியைகளுக்கு அழைத்து வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது அஜந்தனின் உடல் மேலதிக மற்றும் திடீர் மரண அதிகாரிகளின் விசாரணைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி, சிரட்டை கரி, மற்றும் எரிவாயு சூடாக்கிகள், படுக்கை அறையையோ மற்றும் மூடிய மண்டபங்களையோ சூடாக்குவதற்கு உகந்தவை அல்ல புதிதாக வந்தவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை அறிவிப்பாக கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
காபன் மொனொரைட் வாயு உயிரை கொல்வது என்பதுடன் மனமோ, நிறமோ, சுவையோ இல்லாத ஒரு வாயு என்பதால் தூக்கத்திலும் கூட மரணம் நிகழும் நிலைமை இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது அவுஸ்திரேலியாவில் கடுமையான குளிர் காலநிலை நிலவுவதனால் புதிதாக வந்தவர்கள் மிகவும் 
அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் தனது தனயனின் பயணம் இறுதிப் பயணமாக அமையவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த அகால மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்த அகதி செயற்பாட்டாளர் ஒருவர் இவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 18 ஜூலை, 2015

இயற்கையின் கோரத்தாண்டவம்.20 கார்கள் தீக்கிரையான!.

அமெரிக்காவில் ஏற்பட்ட வரலாறு காணாத காட்டுத் தீயினால் 
வனப்பகுதி வழியாக சென்ற 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் 
தீயில் எரிந்து சாம்பலாயின,
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 14 ஜூலை, 2015

சூழலுக்கு மாக இயங்கும் கார்களால் ஆபத்தா?


கூகுள் நிறுவனம் உட்பட மேலும் சில கார் வடிவமைப்பு நிறுவனங்கள் ஓட்டுநர் இன்றி இயங்கக்கூடிய கார்களை வடிவமைத்துள்ளன.
இக்கார்கள் தற்போது பரிசோதிப்பில் உள்ள நிலையில் இவற்றினால் சூழலுக்கான பாதிப்பு 90 சதவீதம் இல்லை என ஆய்வு ஒன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வினை அமெரிக்காவிலுள்ள Berkeley Lab நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இதில் 2030 ஆண்டளவில் பாவைனைக்கு வரும் முற்று முழுதாக இலத்திரனியில் தொழில்நுட்பத்தினைக் கொண்ட தானியங்கிக் கார்கள் மூலமே சூழலுக்கு தீங்கு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது சோதனையில் இருக்கும் தானியங்கிக் கார்கள் பகுதியாக எரிபொருளில் இயங்கக்கூடியன என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 12 ஜூலை, 2015

ஐஎஸ் தீவிரவாத தலைவர் விமானத் தாக்குதலில் பலி!

அமெரிக்க ஆளில்லா விமானம் இன்று நடத்திய தாக்குதலில் இஸ்லாமிக் ஸ்டேட் என்றழைக்கப்படும் ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவன் ஹபீஸ் சயீத் கொல்லப்பட்டான். ஆப்கானிஸ்தான், 
பாகிஸ்தான் மற்றும் அவற்றை 
ஒட்டியுள்ள பகுதிகளில் பேராதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவனான ஹபீஸ் சயீத் இன்று நன்கார்கர் மாகாணத்தில் உள்ள அச்சின் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய 
தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் உளவுத்துறை அறிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 11 ஜூலை, 2015

இன்னும் சில வாரங்களில் வாட்ஸ் அப்பிற்கு தடை ???

உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பிற்கு விரைவில் இங்கிலாந்தில் தடை செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மறைமுக குறியீடுகள் கொண்ட எந்த வகையிலான குறுஞ்செய்திகளை அனுப்பவும் தடைவிதிக்கும் புதிய சட்டத்தை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் விரைவில் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் அண்மையில் அதிகரித்து
 வரும் பயங்கரவாத அச்சுறுத்தலையடுத்து அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் பயங்கரவாதம் பரவாமல் இருப்பதற்காக கடுமையான சட்டங்களை இயற்ற உள்ளதாக கூறப்படுகிறது. ஆன்லைன் கம்யூனிகேஷன்
 வசதிகளே 
பயங்கரவாதிகள் எளிதாக தகவல் பறிமாறிக்கொள்ள ஏதுவாக இருப்பதாகவும், எனவே இங்கிலாந்து புலனாய்வுத் துறை ஆன்லைன் கம்யூனிகேஷன் வசதிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டம் அமலுக்கு வந்தால் ஸ்நாப் சாட், ஆப்பிள் நிறுவனத்தின் ஐமெசேஜ், வாட்ஸ்-ஆப் போன்றவைகளுக்கு இங்கிலாந்தில் நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மக்களின் தனிபட்ட உரிமையை பாதிப்பதாக இங்கிலாந்தில் இந்த புதிய சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 18 ஜூன், 2015

சீனர்கள் ருசிக்கும் நாய் கறி திருவிழா”களைகட்டுகிறது “

சீனாவில் ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படும் ‘நாய் கறி திருவிழாவில் சுமார் 10 ஆயிரம் நாய்களை ஒரே நேரத்தில் கொன்று சமைத்து ருசித்து உண்ணும் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.
சீனாவின் Guangxi என்ற மாகாணத்தில் Yulin என்ற சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
விநோத பழக்க வழக்கங்களை கொண்ட இந்த மக்கள் தங்களை ஆவிகள் கொடிய நோய்களிலிருந்து காத்துக்கொள்ள கடந்த 2010ம் ஆண்டிலிருந்து ‘நாய் கறி திருவிழா’ என்ற ஒரு விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
எதிர்வரும் யூன் 21ம் திகதி தொடங்க உள்ள இந்த திருவிழாவின்போது, அந்த மாகாணம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய்களை பிடித்து வந்து பூஜை செய்வார்கள்.
பின்னர், ஒவ்வொரு நாயையும் கும்பல் கும்பலாக கொன்று நெருப்பில் சுட்டு எரித்து துண்டுகளாகவும் முழு நாய்களாகவும் பொதுமக்களுக்காக விற்பனைக்கு வைக்கின்றனர்.
இந்த பகுதியில் வாழும் Yulin சமுதாய மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் அன்று நாய் கறி விருந்து அமோகமாக நடைபெறும். இந்த ஒரு நாளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் நாய்கள் கொல்லப்பட்டு இந்த திருவிழாவிற்கு பயன்படுத்துவார்கள்.
சில ஆண்கள் நாய்கறி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என நம்புவதால், அவர்கள் இந்த உணவை விரும்பி ருசித்து வருகின்றனர்.
சீனர்களின் இந்த காட்டுமிராண்டி தனமான செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி இருந்தாலும், Yang Xiaoyun(65) என்ற சமூக ஆர்வலர் இந்த திருவிழாவில் கொல்லப்படும் நாய்களை மீட்க பல வழிகளில் போராடி வருகிறார்.
இந்த திருவிழா தொடங்குவதற்கு சில தின்ங்களுக்கு முன்னர் தனது Tianjin நகரத்திலிருந்து 1.652 மைல்கள் பயணித்து Yulin நகரத்திற்கு சென்று, நாய்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் அவற்றை விலை பேசி வாங்கி வந்து வளர்த்து வருகிறார்.
தற்போது வரை சுமார் 15,178 பவுண்டுகள் செலவழித்து சுமார் 360 நாய்கள் மற்றும் பல பூனைகளை காப்பாற்றி தனது இடத்தில் பாதுகாப்பாக வளர்த்து வருகிறார்.
இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் இந்த பகுதியில் நாய் கறி திருவிழா உற்சாகமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பகுதிக்கு பல வகை நாய்களை அதிக எண்ணிக்கையில் கும்பல் கும்பலாக வாகனங்களில் அடைத்து கொண்டு வருவதால் ‘ராபிஸ்’ எனப்படும் நோய் அதிக அளவில் பரவி வருவது அந்த சமுதாய மக்களுக்கு பெரிதாக தெரியவில்லை
சீனாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 2 கோடி நாய்கள் கொல்லப்பட்டு உணவாக சமைக்கப்படுவதுடன் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ராபிஸ் நோய் தாக்கி சுமார் 338 பேர் இறந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>