20.07.2012 சவூதி அரேபியாவிலுள்ள பெண்களின் வீடுகளுக்கு
இரகசியமாக விஜயம் செய்து அவர்களுக்கு கேச அலங்காரம் மற்றும் ஒப்பனை அலங்காரம்
என்பவற்றை மேற்கொண்ட அழகுக்கலை நிபுணர் ஒருவருக்கு 200 கசையடிகள் தண்டனை விதித்து
அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பச்சை குத்தும் நிபுணர் என பிரபலம் பெற்ற மேற்படி லெபனானிய நபருக்கு பெண்களுக்கு பச்சை குத்திய குற்றச்சாட்டில் ஒரு வருட சிறைத் தண்டனையும் ஜெடாஹ் மாவட்ட நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.
ஜெடாஹ் நகரின் அல் ரவ்டாஹ் மாவட்டத்தில் இரகசிய அழகு சிகிச்சைகளை மேற்கொண்ட வேளை மேற்படி நபர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சவூதி அரேபியாவில் ஒருவருக்கொருவர் திருமண பந்தத்தை கொண்டிராத ஆண்களும் பெண்களும் பழகுவதற்கு சவூதி அரேபியாவில் தடை உள்ளது.
பெண்களுக்கான தலைக்கு பூசும் வர்ண சாயங்களுடனும் கத்திரிக்கோல்களுடனும் பிடிப்பட மேற்படி நபர் மேற்படி உபகரணங்கள் லெபனானிலுள்ள தனது அழகு நிலையத்தில் பயன்படுத்தப்பட்டதாக ஆரம்பத்தில் வாதிட்டுள்ளார்.
எனினும் அவரது கையடக்க தொலைபேசியில் பெண் வாடிக்கையாளர்களது எழுத்து வடிவ செய்திகளை ஆதாரமாக வைத்து அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள், வாடிக்கையாளரின் கார் சாரதி போன்று பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அனுப்பியே அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்

0 comments:
கருத்துரையிடுக