siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 20 ஜூலை, 2012

பவுச்சர் கண்; பார்வையை இழக்க வாய்ப்புகள் குறைவு

20.07.2012
காயமடைந்துள்ள தென்னாபிரிக்க அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் மார்க் பவுச்சர், தனது இடது கண்ணில் பார்வையை இழக்க வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தின் போது இம்ரான் கான் வீசிய பந்து ஸ்டம்பில் பட்டு பைல்ஸ் பறந்து விக்கெட் காப்பாளர் பவுச்சரின் கண்ணில் தாக்கியது.

அதன் பின்னர் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதோடு, இறுதித்தொடராக அமையவிருந்த இங்கிலாந்துத் தொடருக்கு முன்னதாகவே மார்க் பௌச்சர் தனது ஓய்வினை அறிவித்தார்.

தற்போது அவருக்குச் சிகிச்சையளித்துவரும் மருத்துவர் சுவைப் மஞ்ரா கூறுகையில், பவுச்சரின் கண் விழித்திரையில் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. எனவே, முழுமையான பார்வையிழப்பு அவருக்கு ஏற்பட வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார்.

ஆனால் 100 சதவீதம் உறுதியாகக் கூற முடியாது என்றும் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

0 comments:

கருத்துரையிடுக