siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 20 ஜூலை, 2012

மாடித்தொகுதி கொள்வனவாளர்களுக்கு மிகப்பொருத்தமான முதலீட்டு வாய்ப்பினை வழங்குகின்றது

20.07.2012
இலங்கையில் வீட்டு மனைச்சொத்து முதலீட்டுக்கான சாத்தியங்கள் அதிகரிப்பு

கடந்த தசாப்தத்தின் ஆரம்பத்தில் இருந்து இலங்கையில் ஆடம்பர சொகுசு மாடி மனைகளின் கட்டடப்பணிகள் அதிகளவில் அதிகரித்து வந்துள்ளது. இலங்கையின் தலைசிறந்த முதலீட்டாளர்கள் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களினதும் நம்பிக்கைக்குகந்த தெரிவாக ஆடம்ப சொகுசு மாடி மனைகள் கருதப்படுகின்றன.

கட்டட வேலைகள் முழுமையாக பூர்த்தியாவதற்கு முன்னமே 50% வீட்டுத்தொகுதிகள் அநேக ஆடம்பர வீட்டுத்தொகுதிகளில் விற்பனையாவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணத்தில், குறிப்பாக கொழும்பில், அதியுயர் வருடான மட்டங்கள் காரணமாக அதிநவீன மாடிமனைகள், அவற்றிலும் குறைந்த மாடித் தொகுதி வீட்டு மனைகளிலும் பார்க்க மிகச் சிறப்பான செயற்திறனை அளிப்பதாக மற்றுமொரு ஆராய்ச்சி தெரிவிக்கின்றது.

கொழும்பில் நிலமே அரிதான வளமாக காணப்படுகின்றது. அபிவிருத்திக்கு உகந்த நிலப்பகுதிகள் பல ஏற்கனவே உபயோகிக்கப்பட்டுவிட்டன. ஜனத்தொகைப் பெருக்கத்துடன், நகரப்பகுதிகளில் அபிவிருத்திக்கான நிலங்களின் பற்றாக்குறை அதிகரிப்பானது, கொழும்பு மாவட்டத்தில் கூட்டுரிமை வீட்டுத் தொகுதிகளின் உதயத்திற்கு அத்திவாரமிட்டது.

கடந்த பல வருடங்களாக, கொழும்பு மாவட்டம், தனது சுற்றயல் பகுதிகளில் பல துரித அபிவிருத்தி திட்டங்களை சந்தித்துள்ளதுடன், குறிப்பாக ராஜகிரிய, பத்தரமுல்ல, பெலவத்தை போன்ற இடங்களில் அதிகளவான மக்கள் குடியமர்வதையும் கண்டுள்ளது. அதிலும் ராஜகிரிய பகுதியில் பல உயர்ந்த மாடி மனைகள் உருவாவதுடன், கொழும்பு 07 இல் இருந்து வெறுமனே 2 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ‘110, பார்ளிமென்ட் வீதி' மாடித்தொகுதி குறித்து அநேகமானோர் அறிந்துள்ளதுடன் அது குறித்து பேசுவது குறிப்பிடத்தக்கதாகும்.

அமைதியான சுற்றுப்புறத்தில், கொழும்பு கோல்ப் மைதானம் மற்றும் தேசிய பறவைகள் சரணாலயம் ஆகியவற்றினைப் பார்க்குமாற்போல், கொழும்பு நகரை எதிர்கொண்டு அமைந்துள்ள '110, பார்ளிமென்ட் வீதி' மாடித்தொகுதி, அப்பிரதேசத்தின் ஒரு அடையாளச் சின்னமாக விளங்குகின்றது.

‘110, பார்ளிமென்ட் வீதி' மாடித்தொகுதியானது 1600 முதல் 3000 சதுர அடிப்பரப்பளவு கொண்ட இரண்டு, மூன்று மற்றும் டியூப்ளெக்ஸ் விருப்பத் தொகுதிகளாக கிடைப்பதுடன், நீச்சல்குளம், உடற்பயிற்சிச்சாலை, டெனிஸ் மைதானம், கூடைப்பந்து விளையாட்டரங்கு, சிறுவர் விளையாட்டுப்பகுதி, உணவகங்கள், ஸ்பா போன்ற நவீன வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. குறித்த இத்தனை வசதிகளும், ‘110, பார்ளிமென்ட் வீதி' மாடித்தொகுதி உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்கள் ஆகும்.

அபூர்வ நட்வார் பரீக் குழுமம் (ANPG Group) , இலங்கையின் சங்கென் லங்கா (பிரைவேற்) லிமிடட் ஆகியன இணைந்த பங்காளித்துவ நடவடிக்கையாக 2011 நவம்பர் மாதத்தில் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்தது. கட்டுமாணப்பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதுடன், 2014 ஜீலை மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் அமைச்சின் கருத்தின் படி, நகரமயமாக்கல் மற்றும் ஜனத்தொகை அதிகரிப்பானது, இலங்கையில் வீட்டுத்தொகுதிகளின் அபிவிருத்தி மற்றும் விசாலிப்பிற்கு வழிகோலியுள்ளது என ANPG குழுமத்தின் பணிப்பாளர் திரு. ரோஹன் பரீக் இதுகுறித்து தெரிவித்தார்.

இலங்கையில் அரைச்சொகுசு மற்றும் ஆடம்பர வீட்டு மனைத்தொகுதிகள் சந்தை குறித்து பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் அடிப்படையில் அனைவருக்கும் வீட்டுத் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், 2020 ம் ஆண்டளவில் 100,000 வீடுகள் கட்டமைக்கப்பட வேண்டும் என மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

“சாத்தியத்தன்மை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டதைத் தொடர்ந்தே இலங்கையில் அடுக்குமாடி வீட்டுத்தொகுதியை எமது குழுமம் விரிவுபடுத்தியுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் அடுத்துவரும் ஆண்டுகளில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படும் இந்த வேளையில், ஆடம்பர அடுக்குமாடி மனைகளிக் தேவையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது" என பரீக் மேலும் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில் ‘110, பார்ளிமென்ட் வீதி' மாடித்தொகுதியானது வாழ்நாளுக்கான பொருத்தமான முதலீடாக அமையும். ‘110, பார்ளிமென்ட் வீதி' குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள 0777 70 80 90 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள் அல்லது www.110parliamentroad.com என்ற இணையத்தளத்தினை அணுகுங்கள்

0 comments:

கருத்துரையிடுக