11.09.2012.By.Rajah.மது அருந்த மாட்டேன், பார்ட்டிக்கு போக மாட்டேன் என்கிறார் பிரியா ஆனந்த். |
இது குறித்து பிரியா ஆனந்த் கூறுகையில், திரையுலகில் எனக்கு ராணா, ஜாக்கி பகனானி
போன்ற நடிகர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். நலந்தா வே பவுண்டேஷன் மூலம் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களின் படிப்புக்கு உதவி வருகிறேன். இதற்கு ராணா, ஜாக்கி போன்றவர்களும் உதவி உள்ளனர். எனது பிறந்த நாளை நான் கொண்டாடியதில்லை. இம்முறை குழந்தைகளின் நலனுக்கு நிதி திரட்டுவதற்காக கொண்டாடினேன். என்னைப் பொறுத்தவரை நான் பார்ட்டிக்கு செல்வதில்லை. மது குடிப்பதும் இல்லை. எனது சக நடிகர்களுடன் எனக்கிருக்கும் நட்பு இதயபூர்வமானது. நான் செய்யும் நற்பணிக்கு அவர்கள் உதவியாக இருக்கிறார்கள். மற்றவர்களும் நற்பணி செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். பிறந்த நாளோ, கல்யாண நாளோ எதைக் கொண்டாடினாலும் அது ஆதரவற்றவர்களுக்கு உதவும் விதமாக அமைத்துக் கொள்ள வேண்டும். கிராமத்தில் பிறந்த நான், தனி ஆளாக அமெரிக்கா சென்று படித்தேன். அதுபோல் மற்ற குழந்தைகளுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தர ஆசைப்படுகிறேன். இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் ஸ்ரீதேவியுடன் நடித்த அனுபவம் பற்றி கேட்கிறார்கள். எனது கனவு கன்னியாக இருப்பவர் ஸ்ரீதேவி. அவருடன் நடித்தது மறக்க முடியாது. படப்பிடிப்பு முடிந்து பிரியும் போது நான் அழுதுவிட்டேன். அதை எனது உதவியாளர் படம் பிடித்திருக்கிறார். அதைப் பார்க்கும் போது மனதுக்குள் சிரித்துக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார் |
செவ்வாய், 11 செப்டம்பர், 2012
மது அருந்த மாட்டேன்: பிரியா ஆனந்த்
செவ்வாய், செப்டம்பர் 11, 2012
செய்திகள்