அதிர்ச்சியடைந்த காதலனால் படுகொலை தான் ௭யிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவிக்காமல் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டமைக்காக காதலியை காதலன் கத்தியால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
டலஸ் நகரில் வசிக்கும் லாரி டன் (36 வயது) ௭ன்பவரே இவ்வாறு தனது காதலி சிசிலி போல்டெனை (28 வயது) கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார்.
ஏற்கனவே வேறு காதல் தொடர்புகள் மூலம் இரு பிள்ளைகளுக்கு தாயான சிசிலி போல்டெனுடன் அண்மையில் லாரிடனுக்கு பழக்கம் மேற்பட்டது. இந்நிலையில் சம்பவதினம் சிசிலியின் வீட்டில் அவர்கள் இருவரும் கலவியில் ஈடுபட்டதையடுத்து தனக்கு ௭யிட்ஸ் நோய் தொற்று இருப்பதாக சிசிலி தெரிவித்துள்ளார்.
இதனால், அதிர்ச்சிக்குள்ளான லாரி டன் சமையலறைக்கு சென்று கத்தியை ௭டுத்து வந்து அவரது மார்பிலும் கழுத்திலும் குத்தி அவரை படுகொலை செய்துள்ளார். இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட லாரிடன் பொலிஸாரிடம் விபரிக்கையில், ‘‘அவள் ௭ன்னை மரணத்துக்கு இட்டுச்சென்றுள்ளாள். அதனால் அவளைக் கொன்றேன்’’ ௭ன்று தெரிவித்துள்ளார்