siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 12 செப்டம்பர், 2012

இரண்டாம் உலகப் போரில் பட்ட கடனை ஜேர்மனி இன்னும் அடைக்கவில்லை

By.Rajah.இரண்டாம் உலகப் போரில் பட்ட கடனை ஜேர்மனி இன்னும் அடைக்கவில்லை, அதை தந்தால் எங்களது நிதி பற்றாக்குறை தீரும் என கிரீசின் துணை நிதியமைச்சர் கிறிஸ்ட்டோஸ் ஸ்டாய்கோரஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த 1950ஆம் ஆண்டுகளில் ஜேர்மனி கிரீசுக்கு தருவதாக ஒத்துக் கொண்ட தொகை பல பில்லியன் யூரோக்களாகும். அதை விரைவில் தர வேண்டும்.
அந்த பணம் திரும்ப கிடைத்தால் கிரீசின் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று தெரிவித்தார்.
இது குறித்து ஆராய்வதற்காக ஜேர்மனி அரசு நால்வர் குழு ஒன்றை நியமித்து கருத்து கேட்டுள்ளது. அந்தக் குழுவும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.
இரண்டாம் உலகப் போரில் பட்ட கடனை அடைக்காமல், கிரீசின் கடனை அடைக்க பிணைநிதியாக பெருந்தொகை ஒன்றை தர தயாராக உள்ளதாக ஜேர்மனி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது