siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 12 செப்டம்பர், 2012

தலிபான்கள் அனுப்பும் கவர்ச்சிப் பெண்: ஆஸ்திரேலிய உளவுத்துறை !

 

12.09.2012.By.Rajah.


ஆஸ்திரேலிய உளவுத்துறை தமது ராணுவத்துக்கு விசித்திரமான எச்சரிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளது. �தலிபான் போராளிகள், கவர்ச்சி பெண்கள் வடிவில் உங்களை உளவு பார்க்க வருகிறார்கள்� ஜாக்கிரதை என்பதே அந்த எச்சரிக்கை. பேஸ்புக் சமூக இணையத்தளம் மூலமாக, கவர்ச்சிகரமான பெண்கள் போட்டோக்கள் சகிதம் இந்த உளவு பார்த்தல் நடப்பதை ஆஸ்திரேலிய உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் நேட்டோ கூட்டுப்படையில் இணைந்து யுத்தத்தில் ஈடுபடும் ஆஸ்திரேலிய ராணுவ படைப்பிரிவின் ரகசியங்கள், தலிபான்களுக்கு இவ்வாறே கிடைத்தனவாம்.
ஆப்கானிஸ்தானில் இந்த மாதம் 3 ஆஸ்திரேலிய வீரர்கள் தமது முகாம்களுக்கு உள்ளேயே கொல்லப்பட்டனர். ஆப்கான் ராணுவத்தில் பயிற்சிக்கு சேர்க்கப்பட்ட புதிய ஆள் போல ஆஸ்திரேலிய ராணுவ முகாமுக்குள் புகுந்த தலிபான் போராளியே, இந்த மூவரையும் சுட்டுக் கொன்றதாக தெரியவருகிறது. ஆஸ்திரேலிய உளவுத்துறைக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, பேஸ்புக்கில் உள்ள கவர்ச்சிகரமான பெண்களுடன் சாட்டிங்கில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் மூலம் ராணுவ முகாமின் உள் விபரங்கள், மற்றும் குறிப்பிட்ட வீரர்கள் முகாமின் எந்தப் பகுதியில் உள்ளனர் என்பதை தலிபான்கள் தெரிந்து கொண்டனராம்.
தலிபான் தற்கொலை போராளி அந்த இடத்துக்கு வரும்வரை, குறிப்பிட்ட ராணுவ வீரர்கள் தமது கம்ப்யூட்டர் அருகே சாட் செய்தபடி அமர்ந்திருக்கும் வகையிலும், �கவர்ச்சிப் பெண்கள்� பேசிக்கொண்டு இருந்தனராம்! தற்போது, ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் அனைவரும், �அதி ஜாக்கிரதையாக� இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது!