siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 12 செப்டம்பர், 2012

மாத்தளன் பிரதேசத்தில் புதைத்து வைத்த பொருட்களை தேடியெடுக்க அலைமோதும் மக்கள்!

 
 

12.09.2012.By.Rajah.நிலத்தில் புதைத்து வைத்த பொருள்களை எடுப்பதற்காக இறுதிக்கட்டப் போர் நடந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் தாம் இடம்பெயர்ந்து சென்றபோது நிலத்தின் கீழ் புதைத்து வைத்த பொருள்களைத் தேடியெடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.
இறுதிக் கட்டப்போர் நடந்தபோது இங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது வீட்டுப் பாவனைப் பொருள்களை நிலத்தின் கீழ் புதைத்து விட்டுச் சென்றனர்.
தற்போது இந்தப் பகுதிகளில் மீள்குடியமர்வு இடம்பெற்ற நிலையில் மீள்குடியமர்ந்த மக்கள் அவற்றைத் தோண்டி எடுப்பதில் மும்முரமாக ஈடுபடுவதைக் காண முடிகின்றது.
அம்பலவன்பொக்கணை, மாத்தளன், வலைஞர்மடம் ஆகிய இடங்களில் இதனை அவதானிக்க முடிகின்றது. பலர் தாம் பொருள்கள் புதைத்து வைத்த இடங்களை அடையாளம் காண்பதில் சிரமப்படுவதையும் காணமுடிகின்றது.
இவர்களால் புதைத்து வைக்கப்பட்டுத் தற்போது தோண்டியெடுக்கப்படும் பொருள்கள் சில உக்கிய நிலையில் காணப்படுகின்றன. சில இடங்களில் பொருள்களை எடுப்பதில் அடிதடிகள் இடம்பெறுவதையும் காணமுடிகின்றது.
இங்கு பொருள்களை எடுப்பதில் ஈடுபடுபவர்களில் 90 வீதமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் சைக்கிளில் நீண்ட தடியைக் கட்டிய பின்னர் தம்மால் மீட்டெடுக்கப்பட்ட பொருள்களை இருபுறமும் தொங்கவிட்டவாறு செல்வதையும் காணமுடிகின்றது.
மேலும் புதுக்குடியிருப்பு, கோம்பாவில், இரணைப்பாலை, கைவேலி, வள்ளிபுனம் ஆகிய தூர இடங்களில் இருப்பவர்களும் இரவோடு இரவாக இந்த இடங்களுக்கு வந்து பொருள்களை எடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இரண்டு உலோகத்திலான பாத்திரங்களுக்கு மேல் எடுத்துச் செல்வதற்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது