siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 13 செப்டம்பர், 2012

பிரிட்டன் தூதரகத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு எம்.பிக்கள் வடக்குக்கு அதிர்ச்சியில் அரசு

 13.09.2012.By.Rajah.
கொமன்வெல்த் நாடாளு மன்றச் சங்கத்தின் 58ஆவது அமர்வில் பங்கேற்க இலங்கை வந்த பிரிட்டன் மற்றும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடபகுதிக்குச் செல்வதற்குப் பிரிட்டன் தூதரகம் ஏற்பாடு செய்ததுள்ளமை இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அரசு அவர்களைப் போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதிக்கு அழைத்துச் செல்வதற்குத் தயாராக இருந்த போதிலும், கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகம் சுதந்திரமான முறையில் அவர்கள் சென்று வருவதற்காகத் தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது, தனி விமானத்தில் பிரிட்டன், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களை வடபகுதிக்கு அழைத்துச் செல்வதற்கு கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகம் அனுமைதி கோரியமை அரசுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்திய போதும், வேறு வழியின்றி அதற்குப் பச்சைக்கொடி காண்பித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அரச அதிகாரி ஒருவர், அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி இன்னமும் இலங்கை மீது அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள முனைவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையை இலக்கு வைத்து, கொமன்வெல்த் அமர்வுகளின் போது புதிய குற்றச்சாட்டுகளைத் தயார் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதம் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையிலும், வரும் நவம்பரில் ஐ.நா மனித உரிமைகள் சபையில் பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையிலும் இலங்கைக்கு எதிரான பரப்புரைகளை அவர்கள் தீவிரப்படுத்தக் கூடும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.