அளவெட்டி மத்திய விளையாட்டுக் கழகம் வடமாகாண
ரீதீயில் மிகப்பிரமாண்டமாக நடத்திவரும் மென்பந்தாட்டக் கிரிக்கெட் போட்டியின்
ஆட்டங்கள் அண்மையில் நடைபெற்றன.
இதில் முதலாவது ஆட்டத்தில் றொக்கெற் அணியும்
பயர்பொக்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பயர்பொக்ஸ் அணி
8 பந்துப் பரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து 76 ஓட்டங்களைப்பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய றொக்கெற் 7
இலக்குகள் இழந்து 51 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதனால் 25 ஓட்டங்களால் பயர்பொக்ஸ் அணி
வெற்றிபெற்றது.
இரண்டாவது போட்டி ஸ்ரீமுருகன் அணிக்கும் இணுவில்
கலைஒளி அணிக்குமிடையில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இணுவில் கலைஒளி
விளையாட்டுக் கழகம் 8 பந்துப் பரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து 66
ஓட்டங்களைப்பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீமுருகன் 6
இலக்குகளை மாத்திரம் இழந்து 67 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
மூன்றாவது போட்டி முத்துத்தம்பி அணிக்கும்
காந்திஜீ அணிக்குமிடையில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய முத்துத்தம்பி
அணியால் 8 பந்துப் பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 33 ஓட்டங்களை மாத்திரமே
பெறமுடிந்தது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய காந்திஜீ 1 இலக்கை
மாத்திரம் இழந்து 34 ஓட்டங்களை பெற்று இலகுவாக வெற்றியைத் தன் வசமாக்கியது.
நான்காவது போட்டி நியூவோரியர்ஸ் அணிக்கும் றோயல்
அணிக்கும் இடையே நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் அணி 8 பந்துப்
பரிமாற்றங்களில் 4 இலக்குகளை இழந்து 67 ஓட்டங்களைக் குவித்தது.
இந்த இலக்கைத் துரத்திய நியூவோரியர்ஸ் அணி 7
இலக்குகளை இழந்து 43 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. இதனால் றோயல் அணி 23
ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
ஐந்தாவது போட்டியில் மல்லாகம் ஆர்.டி.எஸ். அணியை
எதிர்த்து உடுவில் சலஞ்சர்ஸ் அணி களமிறங்கியது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய
உடுவில் சலஞ்சர்ஸ்அணி 8 பந்துப் பரிமாற்றங்களில் 3 இலக்குகளை இழந்து 67
ஓட்டங்களைப்பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆர்.டி.எஸ். அணி
அதிரடியாக ஆடி 3 இலக்குகளை இழந்து 68 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
ஆறாவது போட்டியில் றோயல் அணியும் காந்திஜீ
அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல்அணி 8 பந்துப்
பரிமாற்றங்களில்4 இலக்குகளை இழந்து 94 ஓட்டங்களை விளாசியது.
இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காந்திஜீ
அணி 6 இலக்குகளை இழந்து 43 ஓட்டங்களையே பெற முடிந்தது. இதனால் றோயல் அணி 57
ஓட்டங்களால் பெரு வெற்றிபெற்றது.
ஏழாவது போட்டியில் ஸ்ரீமுருகன் அணியும் மல்லாகம்
ஆர்.டி.எஸ். அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீமுருகன் 8 பந்துப்
பரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து 88 ஓட்டங்களைப்பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆர்.டி.எஸ். அணி 7
இலக்குகளை இழந்து 11 ஓட்டங்களையே பெறமுடிந்தது. இதனால் ஸ்ரீமுருகன் அணி 77
ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
எட்டாவது போட்டியில் ஸ்ரீமுருகன் அணியும்
பயர்பொக்ஸ் அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீமுருகன்அணியினர்
8 பந்துப் பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 59 ஓட்டங்களைப்பெற்றனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பயர்பொக்ஸ் 7
இலக்குகளை இழந்து 11 ஓட்டங்களை பெற்றதனால் ஸ்ரீமுருகன் அணி 48 ஓட்டங்களால்
வெற்றிபெற்றது.
அதன்பின் இடம்பெற்ற முதலாவது
காலிறுதிப்போட்டியில் றோயல் அணியும் ஸ்ரீமுருகன் அணியும் பலப்பரீட்சை நடாத்தின.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீமுருகன் அணியினர் 8 பந்துப் பரிமாற்றங்களில் 7
இலக்குகளை இழந்து 44 ஓட்டங்களைப்பெற்றனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய றோயல் அணி 3
இலக்குகளை மாத்திரம் இழந்து 45 ஓட்டங்களை பெற்று வாகை சூடி அரையிறுதிக்கு
முன்னேறியது.
|
வியாழன், 13 செப்டம்பர், 2012
அளவெட்டி மத்திய வி.க. வெற்றிக்கிண்ணம் அரையிறுதிக்கு முன்னேறியது றோயல்
வியாழன், செப்டம்பர் 13, 2012
தகவல்கள்