siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 13 செப்டம்பர், 2012

இசட் புள்ளி சர்ச்சைக்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளது

 
 
By.Rajah.2011ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இசட் புள்ளி சர்ச்சைக்கான இறுதித் தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உச்ச நீதிமன்றிற்கு முன்வைத்த தீர்வுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, பல்கலைக்கழகத்திற்கு 5609 மாணவ மாணவியரை மேலதிகமாக சேர்த்துக் கொள்வதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த யோசனைத் திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கடந்த ஆண்டில் 21500 மாணவ மாணவியர் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதற்கு மேலதிகமாக மேலும் 4928 மாணவர்களை இணைத்துக் கொள்வதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முதலில் அறிவித்திருந்தது.
எனினும், தற்போது அந்த எண்ணிக்கையை 5609 ஆக உயர்த்த முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நீதிமன்றில் அறிவித்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக மனுதாரர்களின் சட்டத்தரணிகள் ஒப்புக் கொண்டதனை அடுத்து பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு எட்டப்பட்டுள்ளது