siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 13 செப்டம்பர், 2012

திருமணமான தம்பதியினர் சேர்ந்து சாப்பிட்டதற்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு

By.Rajah.பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள McDonald's உணவகத்தில் திருமணமான தம்பதியினர் அருகருகே அமர்ந்து சாப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. McDonald's என்ற உணவகத்தில் கடந்த ஞாயிறு அன்று இந்த தம்பதியினர் சாப்பிட சென்றுள்ளனர்.
அப்போது இருவரும் அருகருகே உட்கார்ந்த போது உணவக நிர்வாகி, இஸ்லாமிய கலாசாரப்படி இந்த உணவகத்தில் இதுபோன்று நடந்துகொள்ளக்கூடாது என தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து கணவன் நோமன் அன்சாரி, நாங்கள் திருமணமானவர்கள் என தெரிவித்தும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதற்கு அந்த உணவகம் அனுமதிக்க வில்லை.
McDonalds போன்ற உணவகங்களில் இஸ்லாமிய கலாச்சாரத்தின் படி திருமணமானவர்கள் அருகருகே இருந்து உண்பது உகந்ததா அல்லது இல்லையா என்பது குறித்து தனது சமூக தளத்தில் வாக்கெடுப்பு நடத்தினார்.
இதில் செவ்வாய்க்கிழமை இரவு வரை சுமார் 1352 பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் இதில் 87% வீதமானோர் அன்சாரிக்கு சார்பாக வாக்களித்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக் McDonalds உணவகத்தில் இருந்து எந்த வித பதிலுமில்லை. இதேவேளை இஸ்லாமிய கலாச்சாரம் மிகுந்த சவுதி அரேபியாவில் உணவகங்களில் இத்தகைய தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பாகிஸ்தான் மெக்டானல்டுக்களில் மாத்திரம் இந்நிலைமை நீடிப்பது ஏன் என சமூக வலைத்தளங்களில் தற்போது இவ்விவகாரம் சூடுபிடித்துள்ளது