siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 13 செப்டம்பர், 2012

கனடாவில் விலைவாசி உயர்வை மிஞ்சும் கல்விக் கட்டணம்

By.Rajah.கனடாவில் சராசரி வருமான உயர்வையும், விலைவாசி உயர்வையும் விட கல்விக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு முதல் கட்டாயக் கல்விக் கட்டணம் 6.2 சதவிகிதம் ஆண்டொன்றுக்கு உயர்ந்து வருகிறது. ஆனால் பணவீக்கம் 2 சதவிகிதம் என்ற அளவு தான் உள்ளது என்று கொள்கை மாற்றங்களுக்கான கனடா மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கனடா பல்கலைக்கழகங்களில் தற்போது சராசரியாக ஒரு வருடத்துக்குரிய கல்விக் கட்டணம் 6186 டொலராகும். இக்கட்டணத்தில் உணவு, புத்தகம் மற்றும் விடுதிச் செலவு சேர்க்கப்படவில்லை.
இடதுசாரிச் சிந்தனையாளர்கள் இக்கல்விக் கட்டணம் வரும் நான்காண்டுகளில் 7330 டொலராக உயரக்கூடும் என்று கருதுகின்றனர்.
நியுஃபவுண்ட்லாண்ட், லேப்ரடார் போன்ற குறைந்த கட்டணச் செலவுடைய மாநிலங்களில் 2861 டொலர் ஆகவும், கியூபெக்கில் 3278 டொலராகவும், ஒண்டோரியோ, ஆல்பெர்ட்டா மாநிலங்களிலும் முறையே 7513 மற்றும் 7330 டொலராகவும் இருக்கும்.
எதிர்வரும் நான்காண்டுகளில் நியுஃபவுண்ட்லாண்டில் குறைந்த கட்டணமாக 2893 டொலரும், ஒண்டோரியோவில் அதிகக் கட்டணமாக 9231 டொலரும் வசூலிக்கப்படலாம்.
கட்டண உயர்வு குறித்த அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான எரிக்கா சேகர், நடுத்தர குடும்பங்களை கல்விக் கட்டண சுமை அழுத்துகிறது. அரசும் கட்டணத்தைக் குறைக்காமல் கடனை உயர்த்தியும் திருப்பிச் செலுத்தும் முறைகளை எளிமைப்படுத்தியும் தருகிறது.
மேலும் படித்து முடித்துவிட்டு ஒருவர் வேலைக்குப் போகும் போது சராசரியாக 27000 டொலர் கடனோடு தனது வாழ்க்கையைத் தொடங்குகிறார் என்றார்