siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 24 அக்டோபர், 2012

ஈரானில் 10 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2012, By.Rajah.
ஈரானில் போதை பொருளை கடத்திய குற்றத்திற்காக 10 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானில் கடத்தல், கொலை, கொள்ளை, பெண்களை துன்புறுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிப்பது வழக்கம்.
இதன்படி போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக 10 பேருக்கு புதிதாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்பு சபை உடனடியாக இதனை நிறுத்துமாறு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் இரண்டு முக்கிய போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த நபர்களுக்கே இத்தண்டனை விதித்துள்ளதாகவும், இஸ்லாமிய சட்டதிட்டத்தின் படி இது சரியான நடவடிக்கையே எனவும், நாட்டில் போதைபொருள் பிரச்சினை வளர்வதை தடுக்க இதை தவிர வேறு வழி தம்மிடம் இல்லை எனவும் ஈரானிய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் 344 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.