புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2012.By.Rajah.{காணொளி,} |
அமெரிக்க ஜனாதிபதி
தேர்தலில் பராக் ஒபாமாவுக்கு 48 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து
கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் ஜனநாயக
கட்சி சார்பில் பராக் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னியும்
போட்டியிடுகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் விவாதிப்பது கடந்த 1960ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இதன் படி முதல் சுற்று விவாதம் டென்வர் நகரிலும், இரண்டாவது சுற்று விவாதம் நியூயார்க்கிலும், மூன்றாவது சுற்றி விவாதம் புளோரிடாவிலும் நடந்தது. இந்த விவாதங்களில் ஒரே மேடையில் அமர்ந்து கொண்டு ஒபாமாவும், மிட்ரோம்னியும் விவாதிப்பனர். முதல் சுற்று விவாதத்தில் மிட்ரோம்னியும், 2-வது சுற்று விவாவதத்தில் பராக் ஒபாமாவும் வெற்றி பெற்றிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த 3-வது சுற்று விவாதத்தில், ஒருகட்டத்தில் ஒபாமாவின் வெளிவிவகார கொள்கைகளை மிட்ரோம்னி ஏற்றுக் கொண்டார். எனவே ஒபாமாவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக சி.என்.என் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. அடுத்த மாதம் நடக்க உள்ள தேர்தலில் ஒபாமாவுக்கு 48 சதவிகித ஆதரவு உள்ளதாகவும், மிட் ரோம்னிக்கு 40 சதவிகித ஆதரவு உள்ளதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
முதல் சுற்று விவாதம்
இரண்டாம் சுற்று விவாதம்
மூன்றாம் சுற்று விவாதம்
|
புதன், 24 அக்டோபர், 2012
மிட் ரோம்னியை மிஞ்சினார் ஒபாமா
புதன், அக்டோபர் 24, 2012
செய்திகள் காணொளி