siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 22 அக்டோபர், 2012

கனடா: 5.5 மில்லியன் கிலோகிராம் ஈகோலி வைரஸ் பாதித்த

.
Monday 22 October 2012  மாட்டிறைச்சியை அழிக்க CFIA உத்தரவு.   கனடாவின் அல்பெர்ட்டா கம்பெனியில் ஈ கோலி பாதிக்கப்பட்ட மாட்டிறைச்சி அனைத்தும் அழிப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. The Canadian Food Inspection Agency இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், அல்பெர்ட்டா கம்பெனியில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த ஈகோலி பாதிக்கப்பட்ட மாட்டிறைச்சி, மற்றும் உற்பத்தியாகி விற்பனையாகாமல் இருக்கின்ற மாட்டிறைச்சி அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்து அழிக்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டூள்ளதாக CFIA செய்திதொடர்பாளர் Lisa Gauthier ஆணையிட்டுள்ளார்.
Brooks plant மற்றும் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள 5.5 மில்லியன் கிலோகிராம் மாட்டிறைச்சியை அதிக வெப்பத்தில் வைத்து ஈகோலி கிருமியை கொல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவ்வாறு பரிசோதித்த மாட்டிறைச்சி மட்டுமே பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.thedipaar.com
அமெரிக்காவில் இருந்து மட்டும் 1.1 மில்லியன் கிலோகிராம் மாட்டிறைச்சி திருப்பி அனுப்பப்பட்டதாகவும், அதுபோக மீதி எவ்வளவு ஈகோலி மாட்டிறைச்சி இருப்பில் உள்ளது என்பதை இன்னும் சரியாக கணக்கிடவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.