siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 22 அக்டோபர், 2012

சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து திபெத்தியர் தீக்குளிப்பு

திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Rajah.
சீனாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து திபெத்தை சேர்ந்த நபர் தீக்குளித்து உயிரிழந்தார். சீனாவில் வடமேற்கு பகுதியில் உள்ள கான்ஸீ மாகாணத்தை சேர்ந்த லாமோ கியாப்(வயது 27) என்பவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா திபெத்துக்கு மீண்டும் வர வேண்டும் என்று கூறியபடியே தீ வைத்து கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த நபரொருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கண்டித்து கடந்தாண்டு மார்ச் முதல் இதுவரை சுமார் 60 திபெத்தியர்கள் தீக்குளித்து இறந்துள்ளனர்.
திபெத் விடுதலை இயக்கத்தை சேர்ந்த இயக்குனர் பிரிக்டென் கூறுகையில், சீனாவின் நடவடிக்கையை சர்வதேச சமூகம் தலையிட்டு தீர்வு காண வேண்டிய நேரம் நெருங்கி விட்டது என்று தெரிவித்துள்ளார்