திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Rajah.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக செயற்படாத நிலையில், எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் முழுமையாக இடம்பெறவில்லை.
இந்த நிலையத்துக்கு பொறுத்தமான மசகு எண்ணெய் இருப்பு குறைவடைந்தமையே இதற்கான காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது மசகு எண்ணெயின் இருப்பு நிறைவடைந்துள்ள நிலையில, அடுத்த மாதம் அளவில் எரிபொருட்களை விநியோகிக் முடியாத நிலை ஏற்படும் என்று சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் அடுத்தமாதம் ஈரானில் இருந்து நான்கு கப்பல்களில் மசகெண்ணெயை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது