siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 10 அக்டோபர், 2012

பகைமையை முடிவுக்கு கொண்டுவர சிறுமிகளுக்கு திருமணம்.

.          
Wednesday 10 October 2012  .By.Rajah.
பஞ்சாயத்து கூறிய பாகிஸ்தாபாகிஸ்தானில், இருபிரிவினரிடையே,நிலவிவந்தபூசலை தீர்ப்பதற்கு, 13 சிறுமிகளை, திருமணம் செய்விக்க தீர்ப்புக் கூறிய, எம்.பி.,க்கு சுப்ரீம் கோர்ட் "நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் தேரா பக்டி என்ற ஊர் உள்ளது. இங்கு இரு பிரிவினரிடையே பகைமை நிலவி வந்தது. சமீபத்தில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக நடந்த பஞ்சாயத்தில், தாரிக் மசூரி என்ற எம்.பி., கலந்து கொண்டார். "இருதரப்புக்கும் இடையே, பகைமை முடிவுக்கு வர வேண்டும் என்றால், 6 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை இரு தரப்பை சேர்ந்த, இளைஞர்கள் திருமணம் முடிக்க வேண்டும்' என, மசூரி தலைமையிலான, பஞ்சாயத்தில் தீர்ப்புக் கூறப்பட்டது.

சிறுவர்கள் திருமணத்தை, ஆதரிக்கும் விதத்தில், தீர்ப்புக் கூறிய, எம்.பி., மசூரியின் செயலை கண்டித்த, நீதிபதி இப்திகார் சவுத்ரி தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், இது தொடர்பாக, அவருக்கு "நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.சர்ச்சைக்குரிய இந்த பஞ்சாயத்தில், தான் கலந்து கொள்ளவில்லை என, மசூரி தெரிவித்துள்ளார்