siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 10 அக்டோபர், 2012

பிரான்ஸ், அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு

         
Wednesday 10 October 2012  .By.Rajah.இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த, செர்ஜி ஹரோச்சிக்கும், அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஒயின்லேண்ட்டுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, வழங்கப்பட்டு வருகிறது. உலக அமைதிக்காகவும், மக்களுக்கும், தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கும், சமாதான விருது வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான மருத்துவ விருது, ஜப்பான் மற்றும் பிரிட்டன் நிபுணர்களுக்கு, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

இயற்பியலுக்கான விருது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த செர்ஜி ஹரோச்சிக்கும், அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஒயின்லேண்ட்டுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒளித்துகள் மற்றும் அயனிகள் குறித்து, இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியை பாராட்டி, இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி, எதிர்காலத்தில் "சூப்பர் கம்ப்யூட்டர்' பயன்பாட்டிற்கு பெரிய அளவில் உதவி புரியும், என கூறப்படுகிறது