திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
சுவிட்சர்லாந்தில் உள்ள
அணுசக்தி நிலையங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைக்கிணங்க இடர்பாடுகளை எதிர்கொள்வது
குறித்து சோதித்து அறியப்பட்டது.
அணுசக்தி நிலையங்கள் இச்சோதனைகளில் தேறிவிட்டன என்றாலும் லீப்ஸ்டாட் அணுசக்தி
நிலையத்தில் ஹைட்ரஜன் மேலாண்மையை மேம்படுத்தலாம் என்பதும் தெரிவிக்கப்பட்டது என்று
சுவிஸ் அணுசக்தி பாதுகாப்பு மத்திய சோதனைத்துறை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை, பல அணுசக்தி நிலையங்களில் மேம்படுத்த வேண்டியவை குறித்து தனது பரிந்துரைகளை வழங்கினாலும் சுவிஸ் அணுசக்தி நிலையங்களுக்கு மட்டும் பரிந்துரை எதுவும் வழங்கவில்லை. காரணம் சுவிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் கிடையாது. மூஹ்லெபெர்க், பெஸ்னாக் மற்றும் கோஸ்கென் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து அணுசக்தி நிலையங்களில் ஏற்கனவே இருந்த அனைத்து பிரச்சினைகளும் இப்போது தீர்க்கப்பட்டுள்ளதை இந்த சோதனையறிக்கை புலப்படுத்தியது. லீப்ஸ்ட்டாட்டில் உள்ள ஹைட்ரஜன் மேலாண்மை பிரச்சினை ஏற்கனவே அறியப்பட்டதுதான் கடந்த ஜுன் மாதத்தில் அதற்கான அறிக்கைகளையும் இந்த அணுசக்தி நிலையம் சமர்பித்துள்ளது |
திங்கள், 8 அக்டோபர், 2012
சுவிஸ் அணுசக்தி நிலையங்களில் இடர்பாட்டுச் சோதனை
திங்கள், அக்டோபர் 08, 2012
செய்திகள்