08.10.2012.By.Rajah.பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் ஆண்டுதோறும் எம்.ஜி.ஆருக்காக விழா நடத்தப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் நடைபெறும் இந்த விழா இந்த ஆண்டு பாரிஸ் அருகிலுள்ள செயிண்ட் டெனிஸ் நகரில் நடைபெற்றது. செயிண்ட் டெனிஸ் நகர துணை மேயர் பவிலா, பிரான்ஸ் தமிழ் சங்க தலைவர் பா.தசரதன், டிரான்சிநகர்மன்ற உறுப்பினர் அலன் ஆனந்தன் மற்றும் யோகனந்த அடிகள், தேவ குமாரன், தளிஞ்சன்முருகையா ஆகிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் சென்னையிலிருந்து திரைப்பட நகைச்சுவை நடிகர் சார்லி, இதயக்கனி இதழ் ஆசிரியர் எஸ்.விஜயன், பத்திரிக்கையாளர் எம்.சிங்காரவேலு சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை நிர்வாகிகள் ஆனந்தராமன், அன்பழகன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்த, பேரவை தலைவர் முருகு பத்மநாபன் தலைமை ஏற்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விழாவில் எஸ்.விஜயன் பேசிய போது 2012 ல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நடைபெறும் போது உலகம் முழுவதும் குறிப்பாக ஐரோப்பா நாடுகள் முழுவதையும், ஒருங்கிணைத்து பாரிசில் மாபெரும் விழா நடத்த வேண்டும். என்று கேட்டுக்கொண்டார். சார்லி பேசும்போது எம்.ஜி.ஆரின் சிறப்பியல்புகளை வரிசைப்படுத்தி விரிவாகக் கூறினார். இறுதியில் பேரவை பொருளாளர் ராமமூர்த்தி நன்றி தெரிவித்தார். விழாவையொட்டி இதயக்கனி விஜயன் நடத்திய எம்.ஜி.ஆர். புகைப்படக் கண்காட்சியில் அவரது ஆபூர்வ புகைப்படங்களுடன் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய சால்வை, கருப்பு கண்ணாடி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.