திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
ஆண்களும் பெண்களும் முற்றிலும்
வித்தியாசமானவர்கள். அதேப் போல் தான் அவர்களது விருப்பங்களும் வித்தியாசம். அதிலும்
ஒரு பெரும் ஆச்சரியம் என்னவென்றால், ஆண்களுக்குப் பிடிக்காதது பெண்களுக்குப்
பிடிக்கும் என்பது தான்.
ஆண்களுக்கு பிடிக்காத எவற்றை பெண்கள் விரும்புகிறார்கள் என்று தெரியுமா? சீரியல் பார்ப்பது ஆண்களுக்கு எப்போதும் அதிகம் தொலைக்காட்சி பார்க்கவே பிடிக்காது. அவ்வாறு அவர்கள் பார்த்தால் கிரிக்கெட், செய்திகள் அல்லது ஏதாவது விளையாட்டை தான் பார்ப்பார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் பெண்களும் சரி, வேலைக்கு செல்லும் பெண்களும் சரி சீரியல் தான். எந்த நேரமும் சீரியலையே பார்ப்பார்கள். சமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதை மறப்பார்களே தவிர, சீரியல் நேரத்தை மறக்காமல் நினைவில் வைத்து அதைப் பார்ப்பார்கள். இதைப் பார்க்கும் போது ஆண்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இருக்காது. ரொமான்டிக் நாவல் படிப்பது பெண்கள் பொதுவாக அதிகமான அளவு ரொமான்ஸ் குணம் உள்ளவர்கள். அதனால் தான் அவர்கள் ஏதேனும் ரொமான்டிக் நாவல் படிப்பது, அவற்றை தன் காதல் வாழ்க்கையோடு ஒப்பிட்டு வருத்தப்படுவது. சரியான நேரத்தில் எழுந்திருப்பது பெரும்பாலான பெண்களுக்கு சரியான நேரத்தை கடைபிடிப்பது என்பது மிகவும் பிடிக்கும். அதனால் தான் படுக்கும் போது கூட அலாரம் வைத்துவிட்டு, காலையில் எழுந்து வேலை செய்வார்கள். ஊர் கதை மற்றும் கிசுகிசு பேசுவது பெண்களிடம் இருக்கும் பழக்கங்களில் மாற்ற முடியாத விஷயம் என்றால் அது ஊர் கதை பேசுவது தான். ஆண்களுக்கும் பிடிக்கும். ஆனால் அவர்களுக்கு ஒரு பெண்ணை பிடித்துவிட்டால், மட்டும் தான் பேசுவார்கள். குழந்தைகள் பிடிக்கும் பெண்களுக்கு பொதுவாகவே குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் தான் குழந்தைகளை எங்கு பார்த்தாலும் கொஞ்சி மகிழ்வார்கள் |
திங்கள், 8 அக்டோபர், 2012
பெண்களுக்கு பிடித்த ஆண்களுக்கு பிடிக்காத சில விடயங்கள்
திங்கள், அக்டோபர் 08, 2012
செய்திகள்