16.11.2012.நிதிநெருக்கடியில் சிக்கி
தவிக்கும் ஸ்பெயின் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளிலிருந்து மக்கள் ஜேர்மனிக்கு
அதிகளவு குடிபெயர்வது தெரியவந்துள்ளது.
இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் வருகை புரிந்த புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை
விட தற்போது 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இவர்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் கிரீஸிலிருந்து வந்தவர்கள் மட்டுமே 78 சதவிகிதம் பேர் என்பதும், இது கடந்தாண்டை விட 6900 பேர் அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது. புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் கல்வி மையங்களில் ஜேர்மனி மொழி படிக்க நிறைய பேர் வருகை புரிந்துள்ளனர். பலரும் இந்த புலம்பெயர்வை ஆரோக்கியமானதாக கருதுகின்றனர். வேலையில்லாதவர்களுக்கு வேலையும், ஆள் பற்றாக்குறையால் தவிக்கும் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களும் கிடைப்பதால் இருதரப்பிலும் இந்த புலம்பெயர்வு நன்மையளிப்பதாகக் கூறுகின்றனர். ஒருங்கிணைப்பு மற்றும் புலம்பெயர்வுக்கான ஜேர்மன் அறக்கட்டளைகளின் நிபுணர் குழுவிற்கு தலைவியாக விளங்கும் குனில்லா ஃபின்க் கூறுகையில், ஜேர்மனி கடந்தாண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதால் ஜேர்மனியும், புலம்பெயர்ந்தோரும் பயனடைகின்றனர் என்றார். ஆனால் வேறு சிலர் இதன் காரணமாக ஜேர்மன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று அஞ்சுகின்றனர். |
வெள்ளி, 16 நவம்பர், 2012
நிதிநெருக்கடியின் எதிரொலி: ஜேர்மனிக்கு புலம்பெயரும்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக