siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 6 நவம்பர், 2012

ஒபாமா ஜனாதிபதியானால் இலங்கைத் தமிழர்களுக்கு மாற்றம் வருமா?:

 06.11.2012.By.Rajah.தேசிய அளவில் ஒபாமா முன்னணி!பல ஆண்டுகளின் பின்னர்  கடும் போட்டியுடன்  இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், மக்கள் மழை, குளிர் என்பதையும் பொருட்படுத்தாது பெருந்திரளாகச் சென்று வாக்களித்து வருகின்றனர்.

அமெரிக்கா மூன்று வெவ்வேறு கால வட்டவகைகளில் இருப்பதால், முதலில் விடியும் கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் முதலில் வாக்குப்பதிவு தொடங்கியது.

எனவே முதல் வாக்குப் பதிவு இரு கிராமங்களில் தொடங்கியது. வாக்குப்பதிவு முடிந்ததுமே அவை எண்ணப்பட்டன.

இதில் முதல் கிராமத்தில் ஒபாமாவுக்கு 5 வாக்குகளும், ராம்னிக்கு 5 வாக்குகளும் கிடைத்தன.

இன்னொரு கிராமத்தில் ஒபாமாவுக்கு 23 வாக்குகளும், ராம்னிக்கு 9 வாக்குகளும், லிபர்ட்டி கட்சி வேட்பாளருக்கு ஒரு வாக்கும் கிடைத்தன.

முதல் வாக்குப் பதிவு நடந்த கிராமம் டிக்ஸ்பில்லே நாட்ச். வடக்கு நியூ ஹாம்ப்ஷையரில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக, இங்குதான் முதல் வாக்குப் பதிவு தொடங்குகிறது. வாக்குப் பதிவு முடிந்த சில நிமிடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு விடும். கிட்டத்தட்ட ஜனாதிபதி தேர்தல் முடிவின் முன்னோட்டமாகவே இது அமையும்.

முதல் வாக்குப் பதிவு நடந்த இன்னொரு கிராமம் ஹார்ட்ஸ் லொகோஷன். இங்கு மொத்தம் 33 வாக்குகள்தான். 6 நிமிடங்களில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.

23 வாக்குகளை ஒபாமா பெற்றிருந்தார். ராம்னிக்கு 9 வாக்குகள்தான். சுதந்திர கட்சியின் கேரி ஜான்சன் 1 வாக்கைப் பெற்றிருந்தார். 1948-ம் ஆண்டிலிருந்து இந்த இரு கிராமங்களில்தான் முதல் வாக்குப் பதிவு நடந்து வருகிறது.

தென் கரோலினா மாநிலத்தில் 108 வயது மூதாட்டி முதல் முறையாக வாக்களிக்கப் போகிறார். எழுதப் படிக்கத் தெரியாத அவருக்கு ட்ரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட எந்த அடையாள அட்டையும் இல்லை. அதனால் இதுவரை வாக்களிக்கவும் இல்லை. இந்த தடவை தேர்தல் விவாதங்களை கவனித்து வந்த அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததால், குடும்பத்தினர் கவுண்டி தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

மருத்துவர் சான்றிதழ்களுடன் அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. நான் ஒபாமாவுக்கு காக்களித்தேன் என்று மகிழ்ச்சியுடன் சொல்லும் இம் மூதாட்டி கறுப்பு இனத்தை சேர்ந்தவர்!

அடித்தட்டு, நடுத்தர மக்களே, முன் வாக்குப் பதிவுகளில் அதிகம் கலந்துகொள்வதால்  ஒபாமா முன்னணி வகிப்பதாக செய்திகள் அமெரிக்க தேர்தல் களச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்பது போன்ற போர்க்கள மாகாணங்கள் அனைத்திலும் ஒபாமாவே சற்று முன்னிலையில் இருப்பதாக கடைசியாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

ஆனாலும் ரொம்னிக்கு வாக்களிக்கக்கூடியவர்கள்தான் அதிக அளவில் திரண்டு வாக்குச் சாவடிக்கு வருவார்கள் என்பதாகவும் இந்தக் கருத்துக் கணிப்புகள் கோடிகாட்டுகின்றன

0 comments:

கருத்துரையிடுக