06.11.2012 By.Rajah. ராகுல்காந்தி கல்வியறிவு இல்லாதவர் என்ற ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். இன்று புது டெல்லியில் பேட்டியளித்த ராம் ஜெத்மலானி கூறியதாவது:-
பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி ஒருபுறம் தாவூத் இப்ராகீமுடன் சுவாமி விவேகானந்தரை ஒப்பிடுகிறார். இன்னொரு புறம் வருங்கால பிரதமராக நம் நாட்டின் மீது திணிக்கப்பட உள்ளதாக கூறப்படும் ராகுல் காந்தி, அன்னிய நேரடி முதலீட்டுக்கும், கார்கில் போருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்துக் கொள்ளாமல் இருக்கிறார். இதன் மூலம் அவர் கல்வியறிவு இல்லாதவர் என்பது தெளிவாகின்றது.
கடந்த 10 ஆண்டுகளாக ராகுல் காந்தி உருப்படியான ஒரு வாசகத்தையாவது கூறியது உண்டா? என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி சார்பாக பிரதமராக பதவி வகித்த லால் பகதூர் சாஸ்திரி மட்டுமே தைரியமான பிரதமர். அவருக்கு பிறகு அந்த கட்சியில் தைரியமாக குரல் கொடுக்க யாருமே இல்லை. இப்போது ஊழல் குடும்பத்தை ஆதரிக்கும் துதிபாடிகள் நிறைந்த கூடாரமாக காங்கிரஸ் கட்சி மாறி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்

0 comments:
கருத்துரையிடுக