siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

ஆபாசக் காட்சிகளைப்போன்று தாமும் வீட்டில் செய்ய நினைத்த?

            
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் 12 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் ஒன்றுசேர்ந்து பத்து வயதுடைய சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வீட்டில் பெற்றோர்கள் இல்லாத வேளையில் 12 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் இருவர் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் மூன்று இறுவட்டுக்களை கண்டெடுத்துள்ளனர். மேற்படி இறுவட்டுக்களை தமது வீட்டிலுள்ள கணனியில் போட்டு பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில் பார்வையிட்ட இறுவட்டுக்களில் ஒன்றில் ஆபாசப்படக்காட்சிகள் இருப்பதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் அயல் வீட்டிலுள்ள 10 வயது சிறுவனை அழைத்து தாம் அவ் இறுவட்டுக்களில் அவதானித்த ஆபாசக் காட்சிகளைப்போன்று அச் சிறுவனுடன் நடந்து கொண்டுள்ளனர்.

மேற்படி துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட சிறுவன் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்

3 comments: