அமெரிக்காவின் அதிரடி தாக்குதலில்
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி படுகொலை
செய்யப்பட்டார்.
பாகிஸ்தானின் வடமேற்கே உள்ள வஜிரிஸ்தான் பகுதியே அல்கொய்தா தீவிரவாதிகளின்
புகலிடமாக அமைந்துள்ளது. இங்கு தீவிரவாதிகளை அழிப்பதற்காக அமெரிக்கா அடிக்கடி வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதி அபு ஜாயித் உட்பட 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா கடந்த ஜூன் மாதம் நடத்திய தாக்குதல்களில் அல்கொய்தா இயக்கத் தளபதியான அபு யாஹ்யா அல் லிபி உயிரிழந்ததை தொடர்ந்து, அவன் இடத்தில் அமர்த்தப்பட்டவன் தான் இந்த அபு ஜாயித். அபு ஜாயித், அமெரிக்க தாக்குதல்களில் பலியாகி இருப்பது அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதல்களை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது. இது குறித்து வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அறிவோம். அல்கொய்தா இயக்கத்தின் மூத்த தளபதி பலியானதாகவும் எங்களுக்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் பலியானது யார் என்பதை எங்களால் உறுதி செய்ய முடியாது என கூறினர் |
ஞாயிறு, 9 டிசம்பர், 2012
முக்கிய தளபதி பலி: அல்கொய்தா இயக்கத்துக்கு பின்னடைவா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக