siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

வெளிவிவகாரத்துறை அமைச்சராக ஜான் கெர்ரி?

அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சராக ஜான் கெர்ரியை ஜனாதிபதி பராக் ஒபாமா நியமித்துள்ளார். தற்போது வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருக்கும் ஹிலாரி கிளிண்டன் தீவிரமான வயிற்றுத் தொற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வருகிறார்.
அவர் இப்பதவியில் இருந்து ஜனவரி மாதம் ஓய்வு பெறப் போவதாக ஏற்கெனவே அறிவித்து விட்டார்.
இதனையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜான் கெர்ரியை ஜனாதிபதி பராக் ஒபாமா நியமித்தார்.
இப்பதவிக்கு ஜான் கெர்ரி தான் மிகச் சிறந்த தெரிவு என ஒபாமா பாராட்டினார்.
69 வயதாகும் கெர்ரி, ஒபாமாவுக்கு வெளிவிவகாரத்துறை விவகாரங்களில் ஆலோசனை தரக்கூடிய நெருங்கிய நண்பராகவும், வெளிவிவகார செனட் குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.
ஒபாமா இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அமைச்சரவையில் மேற்கொண்டுள்ள முதல் நியமனம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக