இத்தாலி பிரதமர் மரியோ
மோன்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி
ஜியார்ஜியோ நெபோலிடனா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜனாதிபதியை
சந்தித்த மரியோ மான்டி ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தொடர்ந்து காபந்து அரசின் பிரதமராக நீடிக்குமாறு மரியோ மான்டியை கேட்டுக்கொண்டார். அடுத்த கட்ட நடவடிக்கையாக நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக இரு அவைகளின் தலைவர்களிடம் ஜனாதிபதி ஆலோசனை நடத்தி முடிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி விலகிய மரியோ மான்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆட்சியில் இருந்த கடந்த 13 மாத காலகட்டம் மிகவும் கடினமாகவும், வசீகரமாகவும் இருந்தது. நான் கொண்டு வந்த பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை, அடுத்து பொறுப்பேற்கும் தலைவரும் முன்னெடுத்துச் செல்வார் என நம்புகிறேன். பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளும் முயற்சியில் சர்வதேச அளவில் நம்பகமான நாடாக இத்தாலி மாறியுள்ளது என்றார். மரியோ மோன்டியின் அரசுக்கு அளித்த ஆதரவை முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் கட்சி திரும்பப் பெற்றது. இதையடுத்து, பெரும்பான்மை பலத்தை இழந்த மாண்டி தானாகவே முன்வந்து ராஜினாமா செய்து விட்டார் |
ஞாயிறு, 23 டிசம்பர், 2012
ராஜினாமா செய்தார் இத்தாலி பிரதமர் மரியோ மோன்டி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக