மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தின் பனிச்சங்கேணி பாலம் பெருக்கெடுத்து வீதி முற்றாக தடைப்பட்ட நிலையில் வாகரைப் பிரதேசத்தின் திருமலை எல்லை பகுதி வெருகல் மகாவலி கங்கை பெருக்கெடுத்த நிலையிலும், பொலநறுவை பாராக்கிரம சமூத்திரம் பெருக்கெடுத்து கதிரவளி, புச்சாக்கேணி, அம்பந்தனாவெளி, வாகரை, தட்டுமுனை, ஊரியன்கட்டு, புளியங்கண்டலடி, கண்டலடி, பால்ச்சேனை, பனிச்சங்கேணி, காயான்கேணி, இறாலோடை, ஆலங்குளம், மாங்கேணி, மாவடிஓடை, மதுரங்கேணிக்குளம், கட்டுமுறிவு, தோணிதாட்டமடு, வாகரை மத்தி உட்பட்ட பல இடங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது{புகைப்படங்கள்,}.
இவ்வேளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இவ்விடங்களில் சிலவற்றுக்கு சென்று பார்வையிட்டார். அதாவது கதிரவெளி, அம்பந்தனாவெளி, பால்சேனை, ஊரியன்கட்டு, புளியங்கண்டலடி, வாகரை மத்தி, தட்டுமுனை, பெல்லடிமடு. பனிச்சங்கேணி, மாவடிஓடை, மாங்கேணி, காயான்கேணி ஆகியவற்றை பார்வையிட்டு அவர்களுக்கான அடிப்படை உதவிகளை வழங்கல் சார்பாக வாகரைப் பிரதேச செயலாளர் செல்வி.ஆர்.இராகுலநாயகியுடன் நேரடியாகவும், தொலைபேசி மூலமும் உரையாடி ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.
இதேவேளை வாகரைப் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளுக்கும் உடனடியாக சமைத்த உணவு வழங்குவதற்கு ஏற்பாடுகளை புரியுமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் அவசர வேண்டுகோள் விடுத்தார்.
0 comments:
கருத்துரையிடுக