நோவார்ட்டிஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் நியோன் என்ற ஊரிலிருந்து தனது மருந்து உற்பத்தியை மூடிவிடப் போவதாக அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது அதனை மூடப்போவதில்லை என்றும் 150பிராங்க செலவில் நிறுவனத்தை நவீனப்படுத்த போவதாகவும் தெரிவித்துள்ளது.
மூன்றாண்டுகளில் 60 மில்லியன் பிராங்கும் அதனைத் தொடர்ந்து 2020ல் 90மில்லியன் பிராங்கும் முதலீடு செய்யப்பட்டு சிறப்பு மையமாக Centre of Excellence ஆக செயல்படும் என நோவார்ட்டிஸின் தலைவர் பாஸ்கல் ஃபிரானீசென் வியாழனன்று தெரிவித்தார்.
நோவார்டிஸ் நிறுவனம் ஒன்றரை ஆண்டுகள் முன்னரே மூடப்போவதாக தெரிவித்திருந்ததை தொடர்ந்து அந்நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் 320 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து நிறுவன மேலாளர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையில் ஊழியர்கள் ஊக்கத்தொகை, சம்பள உயர்வு, வரி சலுகைகளை தியாகம் செய்தனர்.
இத்தகைய காரணங்களை தொடர்ந்து நோவார்ட்டிஸ் நிறுவனம் முதலீட்டை அதிகரித்து சிறப்பு மையத்தின் உற்பத்தியை அதிகரிக்கவுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக