மெக்ஸிகோ நாட்டின் சான் லூயி போடோசி மாநிலத்தில் உள்ள, லா பிலா சிறைச்சாலையில் நேற்று கைதிகளின் இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
அவர்கள் ஒருவருக்கொருவர், வீட்டு உபயோகத்திற்காக செய்யப்பட கத்திகளாலும், ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர் என்று அரசாங்கத் தரப்பில் கூறப்படுகின்றது. ஆயினும், காவல்துறை தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகத் தெரிகின்றது.
சிறைச்சாலைகளில் அளவுக்கு மேற்பட்ட கைதிகள் இருப்பதால், போதை மருந்துக் கும்பல்களிடம் இதுபோன்ற சண்டை சச்சரவுகள் அடிக்கடி எழுகின்றன என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற சண்டையில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 12க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர். கைதிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதுவே இதற்கு முக்கிய காரணம் என்றும், இந்த செயல்பாடுகள் மாற்றப்பட்டால் தான் இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் எனவும் அந்நாட்டின் மனித உரிமைக் கழகங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
கருத்துரையிடுக