siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 7 மே, 2013

ஹெய்டா ஏரியில் திடீரென செத்து மிதந்த மீன்கள்:



 
கிழக்கு ஜேர்மனியில் துரிங்கியா மாவட்டத்தில் உள்ள ஹெய்டா(Heyda) ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் மீன் பிடிக்கும் ஆர்வலர்கள், இதுவரை சுமார் 25 தொன் எடை அளவில் இறந்த மீன்களை ஏரியிலிருந்து அகற்றியுள்ளனர்.
இதனால் இந்த ஏரியில் யாரும் படகுகளில் பயணிக்க அஞ்சுகின்றனர். ஆனால் இந்த ஏரியில் ஆபத்து அல்லது நோய்த்தொற்று எதுவும் காணப்படவில்லை என்பதால் அரசு அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் மீன்களின் இறப்புக்கு காரணம் தெரியாமல் குழம்பி போகியுள்ளனர்.
இது குறித்து இல்மெனோ நகராட்சியின் செய்தித் தொடர்பாளரான எக்கார்டு பேயர்ஸ்மித்(Eckhard Bauerschmidt) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மீன்களின் அழிவுக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நச்சுத்தன்மையுள்ள நீர்ப் பாசி படர்ந்து இருந்தால் மீன்கள் இறந்து போக வாய்ப்புண்டு. ஆனால் அந்த விஷப்பாசி இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்று அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில், இந்த ஏரியின் தண்ணீரைத் தினமும் விஞ்ஞானிகள் இனி பரிசோதிக்கவுள்ளனர். இதன் மூலம் மாற்றங்கள் ஏதேனும் தெரிகிறதா என்று ஆராய்வர். இவ்வாறு ஆராய்வதால் மீன்களின் இறப்புக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க இயலும் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக